Dream 11 கேம் ஒரு எச்சரிக்கை!

ஏக இறைவனின் திருப்பெயரால்:

சமீப காலமாக Dream11 என்ற ஒரு விளயாட்டில் இஸ்லாமிய இளைஞர்கள் கவணம் செலுத்தி வருவதை பார்க்கிறோம்...

அந்த விளையாட்டில் இளைஞர்கள் அதிகளவில் கவணம் செலுத்துவதற்கான காரணம்?

அந்த விளையாட்டின் மூலம் வரும் பணம் ஒன்றுதான் காரணம்...

இந்த விளையாட்டின் மூலம் வரும் பணம் இஸ்லாமிய சட்டப்படி ஹராமா? ஹலாலா? அதாவது அனுமதிக்கப்பட்டதா? தடுக்கப்பட்டதா என்பது தான் எச்சரிக்கை.

கிரிக்கெட்டை மையாமாக வைத்து விளையாடும் சூதாட்டம் இது,
Paytm கணக்கிலிருந்து 13 ரூபாய் விளையாட்டில் நுழைந்தால் எடுக்கப்படும்,
பிறகு நாம் எந்த Team தேர்வு செய்கிறோமோ அதற்கேற்றவாறு வெற்றி தோல்வி Wicked,Six,Four ஆகியவற்றுக்கு பணம் வரும்...

சூதாட்டம் என்றால் என்ன?
பணம் அல்லது பொருள் இவைகளை வைத்து சீட்டு,கிரிக்கெட்,குதிரை ரேஸ், இப்படி பல விளையாட்டுகளின் மேல் பந்தயம் கட்டுவது தான் சூதாட்டம்...

ஒரு காலத்தில் சீட்டுகட்டில் தொடங்கி இன்று பல வழிகளில் செல்போனில் விளையாடக்கூடிய கேம் வரையில் வந்துள்ளது!

அப்படி மறைமுகமாக வந்த விளையாட்டு தான் Dream 11 இதில் வெறும் சில்லரை ரூபாய்களை Paytm மூலம் கட்டி பல இலட்சம் வரை எடுக்கமுடிகிறது...

சூதாட்டத்தை பற்றி குர்ஆன் என்ன சொல்கிறது?

நம்பிக்கை கொண்டோரே!
மது, சூதாட்டம், பலிபீடங்கள்,
குறி கேட்பதற்கான அம்புகள்,
ஆகியவை அருவருப்பானதும்,
ஷைத்தானின் நடவடிக்கையுமாகும்.
எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்!
திருக்குர்ஆன்  5:90

சூதாட்டம் என்பது தீய காரியமும் அறுவறுக்கத்தக்க செயல் என்று இறைவன் சொல்கிறான்...

அப்படிப்பட்ட தீமை நிறைந்த சூதாட்டத்தை ஒருவர் விளையாடுவார் என்றால்!
அவர் ஷைத்தானின் சூழ்சிக்கு பலியாகிவிட்டார் என்பதை உறுதியாக சொல்லலாம்..

அடுத்த வசனத்தில் இதன் மூலம் ஷைத்தான் என்ன திட்டம் போடுகிறான் என்பதையும் அல்லாஹ் சொல்கிறான்:

மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும்,
அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான்.
எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?
திருக்குர்ஆன்  5:91

இதில் மிகவும் முக்கியமான விஷயம் "தொழுகை" தொழுகையையே மறக்கடிக்ககமகூடிய தீமை இந்த சூதாட்டத்தில் உள்ளது,
அதிலிருந்து கவணம் சிதறடிக்க செய்வது தான் ஷைத்தானில் சூழ்ச்சி...

இந்த சூதாட்டத்தல் எவ்வளவு தீமைகள் உள்ளது என்பதை படைத்தவனை விடயாரும் விளக்க முடியாது...

அப்படி இருக்க மறைமுகமான Dream11 சூதாட்டத்தை விளையாட தான் வேண்டுமா???

பொருளாதாரத்தை எப்படி சம்பாதிக்க வேண்டும் என்று தெளிவாக சொல்லும் மார்கமாக இஸ்லாமாக இருக்கின்றது..
அப்படிப்பட்ட மார்கத்தில் இருந்து கொன்டு  சூதாட்டத்தின் மூலம் பொருளாதாரம் சம்பாதிப்பது தான் ஆகவேண்டுமா???

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தாம் சம்பாதித்தது ஹலாலா ஹராமா என்று மனிதர்கள் பொருட்படுத்தாத ஒரு காலம் வரும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 34. வியாபாரம்(2038)

Dream 11 Game முலம் வரும் பொருளாதாரம் ஹலாலா?ஹராமா?
நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்...

தெளிவான ஹராம் வட்டி,சூதாட்டம்,மோசடி,திருட்டு
தெளிவான ஹலால் உழைத்து உண்ணுவது, முதலீட்டில் மூலம் வியாபாரம் செய்து இலாம் பெறுவது...

13 ரூபாய் பந்தயத்தில் வைத்து ஆயிரம் முதல் இலட்சங்கள் வரை கொட்டுகிறது..
எந்த உழைப்பும் இல்லை,
வியாபார பொருட்கள் எதுவும் முதலீடுகாக  இல்லை..!

ஒருவர் மீது பந்தயம் கட்டி அது நடந்தால் பணம் கொட்டுகிறது...
சொல்லி நடக்கவில்லையென்றால் நம்முடைய பணம் சூதாட்டத்தை நடத்துபவர்களுக்கு சென்றுவிடுகிறது!

இது ஹராமா? ஹலாலா?

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்:
யார் சத்தியம் செய்யும்போது 'லாத்தின் மீது சத்தியமாக!
உஸ்ஸாவின் மீது சத்தியமாக!
என்று கூறிவிட்டாரோ, அவர் அதற்குப் பரிகாரமாக 'லா இலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்!
தம் நண்பரிடம், 'வா சூது விளையாடுவோம்' என்று கூறியவர் எதையேனும் தர்மம் செய்யட்டும்.
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 65. திருக்குர்ஆன் விளக்கவுரை(4860)

சூது விளையாட அழைத்தையே கண்டிக்கும் இஸ்லாம்...
சூது விளையாண்டால்?
அதன் மூலம் சம்பாதித்தால்?
அதற்கு எவ்வளவு பெரிய தன்டனை பதிவாகும் என்பதை உணரவேண்டும் சமுதாய இளைஞர்கள்...

தெளிவான ஹலால் மூலமாக தான் நாம் பொருளாதாரத்தை சம்பாதிக்க வேண்டும்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மடி கனக்கச் செய்யப்பட்ட ஆட்டை விலைக்கு வாங்கியவர், அதை ஓட்டிச் சென்று பால் கறந்து பார்க்கட்டும்!
அதன் பால் அளவு திருப்தியளித்தால்,
அதை அவர் தம்மிடமே வைத்துக்கொள்ளட்டும்! திருப்தியளிக்காவிட்டால், ஒரு "ஸாஉ" பேரீச்சம் பழத்துடன் அதை வாங்கியவரிடமே திருப்பிக் கொடுத்துவிடட்டும்!
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் அத்தியாயம் : 21. வியாபாரம்(3052)

ஹலாலான வியாபாரத்திற்கே இவ்வளவு சட்டத்தை சொல்லும் மார்கம்,
ஹராமான வியாபாரத்தை அனுமதிக்குமா?
என்பதை சிந்திக்க வேண்டும்...

இஸ்லாமிய மார்கத்தில் சட்டம் தெளிவாக உள்ளது..
ஒருவர் இந்த கொள்கையில் பயணம் செய்கிறார் என்றால்?
குர்ஆன்,சுன்னா சட்டம் என்ன சொல்கிறதோ...
அதனடிப்படையில் தான் வாழ வேண்டும்,
மாறும் உலகில் மாறாதது இஸ்லாம் மட்டுமோ...
ஆயிரம் சூது விளையாட்டுக்கள் மறைமுகமாக வந்தாலும் அதை முறியடிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் இருக்க வேண்டும்.

இஸ்லாம் எதை ஹலால் என்று சொல்கிறதோ!
அது தான் மறுமை வெற்றி,
எதை ஹராம் என்று சொல்கிறதோ அது தான் மறுமை தோல்வி!

இஸ்லாம் தோன்றிய நாள் முதல் இன்று வரை நாளை உலகம் அழியும் வரை இதன் சட்டத்திட்டங்கள் யாராலும் மாற்றமுடியாது...
இந்த சட்டத்தின் அடிபடையில் தான் தன்னை முஸ்லிம் என்று சொல்லக்கூடியவர்கள் பயணிக்க வேண்டும்...

இதன் சட்டங்கள் சிலருக்கு பாரமாகவும்,சுமையாகவும் இருக்கலாம்...
ஒரு சிரிய விளையாட்டை கூட  விளையாட்டு என்று பார்க்காமல் ஹராம் ,ஹலால் என்று பிரிக்கின்றதே என்று தோன்றலாம்...?

இந்த சட்டத்தை உருவாக்கியது மனிதன் அல்ல!
படைத்த இறைவன்! கட்டுப்பட்டு தான் ஆகவேண்டும்..
அது தான் மனித இனத்திற்க்கு சரியான வாழ்கை நெியாக இருக்கும்..

இஸ்லாமிய சட்டம் சரியாக இருப்பதால் தான் இன்று வரை சுமார் 150 கோடி உள்ளங்களை வென்றெடுத்துள்ளது..

தூய்மையான இந்த மார்கத்தில் தூய்மையாக வாழ்வோம்,
தூய்மையாக சம்பாதிப்போம்...
Dream 11 Game எப்படி கூட்டி கழித்தாலும் அது சூதாட்டம் தான்,
அதன் மூலம் வரும் பணம் ஹராமானவை தான் என்பதை சமூகம் புறிந்துகொள்ள வேண்டும்..

மனிதர்களே! பூமியில் உள்ளவற்றில் அனுமதிக்கப்பட்ட தூய்மையானதை உண்ணுங்கள்! ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள்!
அவன் உங்களுக்குப் பகிரங்க எதிரியாவான்.
திருக்குர்ஆன்  2:168

Don't Play Dream 11Game
இப்படிக்கு
அ.மன்சூர் வேலூர்

Comments