மனிதனை படைத்தது யார்?

ஏக இறைவனின் திருப்பெயரால்..

திருக்குர்ஆன் நம்பிக்கைபடி மனிதர்கள் அனைவரும்  ஒரு தாய்,தந்தையின் வழி தோன்றல்கள் என்பதாகும்...

அங்கிருந்து தான் மனித சமுதாயம் பல்கி,பெருகி உலகில் பல்வேறு பகுதிகளுக்கு இடம் பெயர்ந்தார்கள்...

அந்த ஒரு தாய்,தந்தையை குர்ஆன் மற்றும் பைபிள் ஆதம்(அலை),ஏவாள் என்று சொல்கிறது...

இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களின் நம்பிக்கை இது தான்...

இந்த ஒரு விஷயத்தை தவிற கிருஸ்தவர்கள் மற்ற அனைத்து விஷயங்களிலும் முரண்படுகின்றனர்...

பைபிளை பொருத்த வரை நேரடியாக சில வசனங்களில் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் பற்றி கூறியுள்ளது...

அதில் பழைய ஏற்பாடான ஆதியாகமம் அத்தியாயம் 1,2,3,4 களில் தொடர்சியாக ஆதம்(அலை) மற்றும் அவரது துணை  இறைவானல் படைக்கப்பட்ட நிகழ்வுகளை பற்றி சொல்லப்பட்டுள்ளது...

அதில் சில வசனங்களை பார்ப்போம்:

ஆதியாகமம் 2:7
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.

தேவனாகிய கர்த்தர் என்ற பெயருக்கு ஏக இறைவன் என்று அற்தம்(இயேசு) கிடையாது)

இறைவன் மனிதனை மண்ணால் படைத்து, பிறகு அவனது உயிரை ஊதி,அவனை மனிதனாக உருவாக்கினான் என்று இந்த வசனம் குறிப்பிட்டுள்ளது...

ஆதியாகமம் 2:22
தேவனாகிய கர்த்தர் தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டுவந்தார்.

இந்த வசனத்தில் முதல் மனிதருடைய விலா எலும்பிலிருந்து தான் அவர் துணையை படைத்தாக சொல்லப்பட்டுள்ளது...

ஆதியாகமம் 2:23
அப்பொழுது ஆதாம் இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள். இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள் என்றான்.

திருக்குர்ஆனும் இதே கருத்தை தான் சொல்கிறது...

திருக்குர்ஆன்  39:6
உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரதுஜோடியைப் படைத்தான்.

இந்த தத்துவத்தை தான் விஞ்ஞான உலகமும் ஒப்புகொன்டுள்ளது...

மனித இனம் ஒரு ஆண்,ஒரு பெண்ணிலிருந்து தான் உருவானார்கள் என்று விஞ்ஞானம் தெள்ள தெளிவாக ஆய்வுகள் மூலம் சமர்ப்பித்துள்ளது..

ஆரம்பம் என்பது ஒரு ஆண்,ஒரு பெண்ணிலிருந்து உருவானது என்ற தத்துவம் தான் ஏற்க தகுந்தது...!

அந்த மனிதனை படைத்தது யார்?
அந்த மனிதன் எப்படி பூமிக்கு வந்தான்?
அந்த மனிதன் பூமியில் எங்கிருந்து தனது பயணத்தை துவங்கினான்?
எப்படி துவங்கினான்?

என்ற பல கேள்விகளுக்கு விஞ்ஞானம் மற்றும் அனைத்து மத வேதங்கள் வழியாக பார்ப்போம்....

ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களை இறைவன் படைத்தான்,
என்பதை மட்டும் சொல்லாமல்...

அவர் தான் முதல் மனிதர் என்பதற்கான பல ஆத்தாட்சிகளையும் இந்த பூமியில் ஏற்படுத்தியுள்ளான்...

வெறுமென இவர் தான் இன்னார் என்று சொல்லவில்லை...

மனிதன் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவே பல சான்றுகளை பூமியில் வைத்துள்ளான்...

திருக்குர்ஆன் கண்மூடிதனமாக எதையும் நம்பசொல்லவில்லை...
எதவுகாக இருந்தாலும் அதை ஆய்வு செய்யது பிறகு எது உண்மை என்று முடிவு செய்து அதை பின்பற்ற சொல்கிறது...

அது படைத்த இறைவனாக இருந்தாலும் சரியே...!

அதனடிப்படையில் தான் குர்ஆனில் எல்லா விஷங்களும் அடங்கியுள்ளது...

وَفِي أَنفُسِكُمْ ۚ أَفَلَا تُبْصِرُونَ

உறுதியாக நம்புவோருக்கு பூமியிலும், உங்களுக்குள்ளும் பல சான்றுகள் உள்ளன. சிந்திக்க மாட்டீர்களா?
(திருக்குர்ஆன்  51:21)

இந்த வசனத்தில், ஏக இறைவனை நீங்கள் உறுதியாக நம்பினால் பூமியில் உங்களுக்கு சான்று உள்ளது....

உங்கள் உடலமைப்பில் உங்களுக்கு சான்று உள்ளது...

இப்படி சிந்திக்க தூன்டும் குர்ஆன்...

மனிதனின் படைப்பையும் ஆய்வு செய்யுங்கள் என்று வெளிப்படையாகவே சொல்கிறது...

فَلْيَنظُرِ الْإِنسَانُ مِمَّ خُلِقَ

மனிதன் எதிலிருந்து படைக்கப்பட்டான் என்பதைச் சிந்திக்கட்டும்.
(திருக்குர்ஆன்  86:5)

பெரும்பாலானவர்களுக்கு ஆதம்(அலை) இலங்கையில் உள்ள ஆதம்ஸ் பீக்( Adam's Peak )
என்ற இடத்தில் தான், வானத்திலிருந்து இறங்கினார் என்ற நம்பி வருகின்றனர்...

இன்றும் அந்த இடம் இலங்கையில்(Sabaragamuwa, Sri Lanka)
உள்ளது...
அந்த இடத்தை புத்தர்களும்,கிருஸ்தவர்களும்,இஸ்லாமியர்கள் தினந்தோறும் சென்று வருகின்றனர்...
(சிலர் வழிப்படுவும் செய்கின்றனர்).

அந்த மலையில் புத்தர்கள் "ஸ்ரீ பிடா" என்ற இடத்தில் புத்தர்கள் கடவுளின் "காலடிதடம்" ஒன்றை வைத்து வழிப்படவும் செய்கின்றனர்...
புத்தர்களின் முக்கிய மதநம்பிகையில் அதுவும் ஒன்று..
அதை புனித தளமாகவே கருதுகின்றனர்...

இஸ்லாமியர்களும், கிருஸ்தவர்களும் அங்குள்ள அந்த "காலடி தடயத்தை" ஆதம்(அலை) அவர்களுடையது தான் என்றும் நம்புகின்றனர்...

இதில் இரண்டு விஷயங்களை சொல்ல விரும்புகிறன்...

1. புத்தர் தன்னை ஒரு போதும் கடவுள் என்று சொன்னது கிடையாது, அவர், கடவுளை தேடிய பயணத்தில் தான் தன்னுடைய வாழ்கையை கழித்தார், இன்று அவர் கடவுளாக்கப்பட்டார்.

2. இஸ்லாமியர்கள் மற்றும் கிருஸ்தவர்களின் நம்பிக்கைபடி ஆதம்(அலை) இலங்கையில் இறங்கவில்லை,
அங்கு அவர் காலடிதடமும் இல்லை....!
மாறாக அவர் இறங்கியது வேறு இடம்...

முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் இலங்கையில் இறங்கவில்லை...

மாறகாக அவர் இறங்கிய இடம் வேறு இடம்...

திருக்குர்ஆன் பல வரலாற்று சம்பவங்களை பற்றி பேசுகிறது, அதில் இன்றைய சவுதி அரேபியாவில்  உள்ள மக்கா நகரத்தை பற்றியும் அதன் புனிதத்தை பற்றியும் குர்ஆன் பல இடங்களில் பேசுகிறது...

மக்காவில் உள்ள முஸ்லிம்களின் புனித பள்ளிவாசலான
(மஸ்ஜிதுல் ஹரம்) கருப்பு நிறத்தால் போர்த்தியுள்ள காபத்துல்லா...

இந்த காபாவிற்க்கும் முதல் மனிதர் ஆதம்(அலை) அவருக்கும் என்ன சம்மந்தம்??

நிறைய சம்மந்தம் உள்ளது..

إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِّلْعَالَمِينَ

அகிலத்தின் நேர்வழிக்குரியதாகவும், பாக்கியம் பொருந்தியதாகவும் மனிதர்களுக்காக அமைக்கப்பட்ட முதல் ஆலயம் பக்கா(எனும் மக்கா)வில் உள்ளதாகும்.
திருக்குர்ஆன்  3:96

இந்த வசனத்தில் மனிதர்களுக்காக இறைவனை வணங்க அமைக்கப்பட்ட முதல் ஆலயம் "காபா" என்று சொல்லப்பட்டுள்ளது..

அப்படியென்றால் ஆதம்(அலை) அவர்கள் நிச்சயாமாக புனித மக்கா நகரத்தில் தான் வானத்திலிருந்து இருங்கியிருக்க வேண்டும்...

திருக்குர்ஆன் 3வது அத்தியாயம் 97 வசனத்தில் "அதில் தெளிவான சான்றுகள் உள்ளது" என்று குறிப்பிட்டு பல செய்திகளை சொல்கிறது...

மக்காவில் தெளிவான சான்றுகள் உள்ளது என்று இறைவன் வெறுமென குறிப்பிடவில்லை!

மனிதர்களுக்காக கட்டப்பட்ட முதல் ஆலயம் என்பதில் தான் பல உண்மைகள் மறைந்துள்ளது...

நாம் இதை ஆழமாக சிந்தித்தாலே!
பல உண்மைகளை புறிந்து கொள்ளலாம்.

உலகில் பல ஊர்கள் இருந்தும் இறைத்தூதர் இப்ராஹிம் அலை(கிருஸ்தவர்கள்ஆப்ரஹாம் என்றழைப்பார்கள்) அவர்களை மக்கள் யாரும் வசிக்காத நிலப்பரப்பான இன்றைய மக்காவிற்க்கு இறைவன் ஏன் வர சொல்ல வேண்டும்...?

குறிப்பிட்ட அந்த இடத்தில் ஏன் இறைவனை வணங்குவதற்க்கு ஆலயம் கட்டுங்கள் என்று சொல்ல வேண்டும்?

காரணமில்லாமல் இறைவன் இதை ஏன்  சொல்லவேண்டும்??

இதிலிருந்து ஆதம்(அலை) அவர்கள் முதன் முதலாக தொழுது வணங்கிய இடம் இன்றைய மக்காவில் உள்ள கருப்பு நிறத்திலுள்ள காபாத்துல்லாவை தான் குறிக்கின்றது என்பதை இலகுவாக  புறிந்துகொள்ளலாம்...

முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் புனித மக்கா நகரத்தில் இருந்து தான் தன்னுடைய பயணத்தை துவங்கியிருக்க முடியும்,
அங்கிருந்து தான் உலகில் பல பகுதிகளுக்கு மனித இனம் இடம்பெயர்ந்து சென்றிருக்க முடியும்.

இது எப்படி சாத்தியம்?

நேரடியாக எந்தவித வேத புத்தகத்திலோ!
அல்லது வரலாற்று நூல்களிலோ முதல் மனிதர் ஆதம்(அலை) இங்கு தான் தோன்றினார்கள் என்று குறிப்பிடவில்லை...

மாறாக யூகங்களின் அடிப்படையில், தொல்லியல் ஆய்வின் அடிப்படையில் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள் மக்காவில் தான் தனது பயணத்தை துவங்கினார் என்று சொல்லமுடியும்...

இதை வெறுமன கற்பனை கதையால்  சொல்லவில்லை...

ஆரம்பத்தில் சமர்பித்த ஆதி மனிதனின் உயரம் தான் மிகபெரிய அத்தாட்சி.

ஆதி மனிதனின் உயரம் இன்றைய மனிதர்களை விட திட்டதட்ட 10 மடங்கு அதிகமானதாக இருந்துள்ளது என்று விஞ்ஞானிகள் நிறுபித்துள்ளார்கள்...

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் ஆதி மனிதர் ஆதம்(அலை) 60 முழங்கள் உயரம் கொன்டவர் என்று  சொல்லியுள்ளார்கள்...

விஞ்ஞான வளர்சி இல்லாத காலக்கட்டத்தில் நபிகளார் எப்படி ஆதி மனிதரின் உயரத்தையும் ஆதி மனிதர் இன்னார் தான் என்று சொல்லியிருக்க முடியும்???

நபிகளார் சொன்னது இறைவனின் வார்தை, அதில் பிழை இருக்காது....

நான், எனது ஆய்வுபடி சில சாத்தியக்கூறுடன் நிறுபிக்கிறேன்
(இறைவன் நன்கறிந்தவன்)

மேலும் சில விஷயங்களை நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்கு முன்னால் வைக்கிறேன்...

இஸ்லாமிய நம்பிக்கைபடி முதல் மனிதர் ஆதம்(அலை)
ஆவார்கள்,
மனிதர்களுக்காக எழுப்பப்பட்ட முதல் ஆலயம் மக்காவில் உள்ள "காபா"(மஸ்ஜிதுல் ஹரம்) இந்த இரண்டையும் ஒப்பிட்டு பார்க்கும்பொழுது ஒரு உண்மை புறியும்...

ஆதம்(அலை) இலங்கையில் உள்ள "ஆதம் பீக்" என்ற இடத்தில் தோன்றினார் என்ற வாதத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்ளலாம்...

நான் ஆரம்பத்தில் குறிப்பிட்ட குசோம் குகை மனிதன், மத்யன் சாலிஹ் இவர்கள் அனைவரும் ஆதி மனிதர்கள் என்று விஞ்ஞானில் குறிப்பிட்டுள்ளனர்,
ஆதி மனிதர்கள் என குறிப்பிட்ட இவர்கள் அனைவரும் வசித்த இடம், அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ளது...

அப்படியிருக்க ஆதிமனிதர்களின் எந்த ஒரு தடயமும் இல்லாத இலங்கையில் எப்படி முதல் மனிதர் தோன்றியிருக்க முடியும்???

முதல் மனிதரான ஆதம்(அலை) இலங்கையில் தோன்றியிருக்கவும் முடியாது, மறைந்திருக்கவும் முடியாது என்பதை வரலாற்று நிகழ்வுகளின் அடிப்படையில் புறிந்துகொள்ள முடிகிறது...

உலகில் தோன்றிய முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்கள்தான்,
என்பதை நிறுப்பிக்கும் வகையில்!
தொல்லியல் ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பல தகவல்களை பார்த்தோம்...

இவைகள் அனைத்தயைும் சற்று ஆழமாக சிந்தித்து பார்த்தாலே!
முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களாக தான் இருக்க முடியும், மக்காவிலிருந்து தான் அவரின் பயணம் தொடங்கியிருக்க முடியும் என்ற முடிவுக்கு வரலாம்...

மண்ணால் முதல் மனிதர் படைக்கப்பட்டது என்று குர்ஆன் சொல்கிறது,
விஞ்ஞானமும் அதயே சொல்கிறது...

முதல் மனிதர் சராசரி மனிதரை விட 60 அடி உயரமானவர் என்று நபிகளார் சொல்கிறார்,
தொல்லியல் கண்டுப்பிடிப்புகள் ஆதிமனிதர்கள் உயரமானவர்கள் என்று நிறுப்பிக்கப்பட்டுள்ளார்கள்....

முதல் மனிதர் ஆரம்பத்தில் ஆப்ரிக்காவில் தோன்றினார் என்று அன்றைய விஞ்ஞானம் சொல்லியது, இன்றைய விஞ்ஞானம் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் அடைந்துள்ளதால் மேலும் ஆய்வுகள் மூலம் முதல் மனிதர் ஆப்ரிக்காவில் தோன்றியிருக்க முடியாது மத்திய கிழக்கு நாடான அரபு பாலைவனத்தில் தான் தோன்றியிருக்க முடியும்  என்று சொல்கிறார்கள்...

இவைகள் அனைத்தையும் விட மனிதன் குரங்கிலிருந்து தோன்றவில்லை மாறாக படைக்கப்பட்டான் என்பது தான் விஞ்ஞானத்தின் முடிவாக உள்ளது...

இவைகள் அனைத்தையும் கடந்த 34 தொடரில் விஞ்ஞான ரீதியாக சமர்ப்பித்துள்ளேன்...

அதே போல அந்த படைப்பாளன் யார்? என்ற கேள்வி தான் விஞ்ஞானிகளுக்கு இன்னும் பதில்  கிடைக்கவில்லை!

தற்பொழது விஞ்ஞானிகள் கண்டுப்பிடித்த கண்டுப்பிடிப்புகள் அனைத்தையும் எழுத படிக்க தெறியாத முகமது நபியால் 1400 வருடங்களுக்கு முன்னால் எப்படி சொல்லியிருக்க முடியும்?

மாறாக முகமது நபி(ஸல்) அவர்கள் சொன்னது அவர்களின் சொந்த கருத்து இல்லை...

இறைவனால் சொல்லப்பட்ட செய்தி...

உலகில் பல தூதர்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை செய்தார்கள்...

அதன் வரிசையில் முகமது நபி(ஸல்)அவர்கள் இறைவனின் இறுதி இறைத்தூதர்...

அவர்கள் மூலமாக இறக்கப்பட்ட இறுதி இறைவேதம் தான் உலக பொதுமறை திருக்குர்ஆன்!

விஞ்ஞானிகளின் கேள்வியான படைப்பாளன் யார் என்ற கேள்விக்கு இதோ திருக்குர்ஆனின் பதில்:

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறிமாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன்  2:164

இவைகள் அனைத்ததையும் சிந்தித்தாலே உணரலாம்...
படைப்பாளன் என்பவன் உள்ளான்,
அவன் தான் அனைத்தையும் படைத்தான்...

அவனை முஸ்லிம்கள் அரபு மொழியில்
"அல்லாஹ் ஏகஇறைவன்" என்றழைக்கிறோம்...

மனித இனைத்தை படைத்த இறைவன் ஒருவனாக தான் இருக்க முடியும்...

நான் ஆரம்பத்தில் சொன்னது போல,

சிங்கத்தை மனிதன் என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளாத நமது பகுத்தறிவு!

படைப்பினங்களை இறைவன் என்று சொல்லும்பொழது எப்படி ஏற்றுக்கொள்வது?

சூரியன் சந்திரனாக முடியாது,
நெருப்பு தண்ணீராக முடியாது,
விலங்கு மனிதனாக முடியாது,
மனிதன் இறைவனாக முடியாது,

சிந்திப்போம்.....!

விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்புகள் இன்னும் முற்றுபெறவில்லை...
எதிர்காலத்தில் இன்னும் பல உண்மைகள் வெளிவரும் காத்திருப்போம்...

ஆக்கம்
✍🏻 அ.மன்சூர் வேலூர்

Comments