முதல் மனிதர் ஆதம்(அலை)

ஏக இறைவனின் திருப்பெயரால்

முதல் மனிதர் ஆதம்(அலை) என்பது திருக்குர்ஆனின் கூற்று.

இதை விஞ்ஞான ரீதியாக பார்ப்போம்:

இங்கிலாந்து ஆராய்ச்சி பல்கலை கழகம் நடத்திய ஆய்வில் முதல் மனிதர் சுமார் 200000 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் தோன்றியிருப்பார்கள் என்பதாகும்..

அதேபோல் ஆப்பிரிக்காவில் ஹோமோ ஹைடல்பெர்ஜெனிஸ் (Homo heidelbergensis in Africa) என்ற பகுதியில் தான் மனித இனம் முதல் முதலாக உருவானது என்ற கருத்தை பரவலாக நம்புகின்றனர்,

மரபணு ஆய்வுகள்( Genetic studies) mitochondrial DNA (மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ) மைட்டோகாண்ட்ரியல் டி.என்.ஏ என்பது சிறு வட்டக் குரோமோசோம்கள்
(Mitochondrial DNA is the small circular chromosome)
இந்த  மைட்டோகாண்ட்ரியா, மற்றும் மைடோச்சோடியல் டி.என்.ஏ, முட்டை செல் மூலம் தாயிடம் இருந்து குழந்தைக்கு மட்டுமே அனுப்பப்படுகிறது.

இந்த மைட்டோகாண்ட்ரியா மூலம் ஒருவரின் பிறப்பு முதல் அவரின் வம்சாவளி வரை அனைத்து தகவலையும் கண்டுபிடித்து விடலாம்,

அப்படி ஆய்வு செய்தலில் கண்டுப்பிடிக்கப்பட்ட பெரிய கண்டுப்பிடிப்பு சுமார் இன்று உள்ள 7 பில்லியண்(700 கோடி) மனிதர்கள் ஒரு பெண்ணின் சந்ததியினரே என்ற கண்டுபிடிப்புதான்..

நாம் அனைவரும் பல்வேறு நாடுகள், பல்வேறு மொழிகள், பல்வேறு நிறங்களில் இருந்தாலும்!

நாம் அனைவரும் ஒரு ஆண், ஒரு பெண்ணின் வழிதோன்றல்கள்.

திருக்குர்ஆனும் இதே கருத்தை மிக தெளிவாகும், ஆழமாகவும் சொல்கிறது:

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُم مِّن ذَكَر وَأُنثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம்.
திருக்குர்ஆன்  49:13

திருக்குர்ஆன் ஒரு ஆண்,பெண்ணிலிருந்து மனித இனம் உருவானது என்று!
ஒரு ஆண் மற்றும் பெண்ணை சொல்கிறது!

இஸ்லாமிய நம்பிக்கை படி அந்த ஒரு ஆண் முதல் மனிதர் ஆதம்(அலை)..

அப்படியென்றால் விஞ்ஞானிகள் சொல்லும் அந்த ஒரு ஆண், பெண் யார்?

விஞ்ஞானிகளின் கூற்றுபடியும் திருக்குர்ஆனின் கூற்றுப்படியும் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து அனைவரும் உருவாகினார்கள் என்பதாகும்...

 وَهُوَ الَّذِي جَعَلَكُمْ خَلَائِفَ الْأَرْضِ وَرَفَعَ بَعْضَكُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ

அவனே உங்களைப் பூமியில் வழித்தோன்றல்களாகஆக்கினான்.
திருக்குர்ஆன்  6:165

இந்த வசனத்தில் خَلَائِفَ "கலாயிஃப" வழிதோன்றல்கள் என்று இறைவன் பயன்படுத்தியுள்ளான்..

அதை வழு சேர்க்கும் வண்ணம், மேலும் ஒரு ஆதாரம் விஞ்ஞானிகளால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது,

ஜினோம் மற்றும் மரபணு மூலம் ஒருவரின் வம்சாவளியை அறியலாம் என்பதாகும்...

நம்முடைய இந்தியாவை எடுத்துக்கொள்ளுங்கள்

தற்பொழுது 2016 கணக்கின்படி 135 கோடி மக்கள்தொகை இருந்தது..

இதே ஒரு 10 வருடத்திற்க்கு முன்பு..
(1.197 billion 120 கோடி 2008)

50 வருடத்தி்க்கு முன்பு..
(530 million 53 கோடி 1968)

100 வருடத்திற்க்கு முன்பு...?(264635,0 1905 26 இலட்சத்து நாற்பத்தி ஆறு ஆயிரம்)

500 வருடத்தி்ற்க்கு முன்பு...?

1000 வருடத்திற்ககு முன்பு...?

எவ்வளவு மக்கள் தொகை இருந்திருப்பார்கள் என்றால்??
135 கோடியை விடகுறைவு...

அப்படியென்றால் 1000 வருடத்திற்ககு முன்பு இருந்த மக்கள் தொகையை விட இன்று இந்தியாவில் 150 கோடி மக்கள் தொகை பெருகியதற்கு காரணம்??

ஆண் பெண்ணிலிருந்து தோன்றினார்களா?

இல்லை நாடுவிட்டு நாடு வந்தவர்களா??

நிச்சயமாக இனப்பெருக்கத்தின் மூலம் இவ்வளவு மக்கள் தொகை உயர்ந்துள்ளது!

இதில் தான் நாம் சிந்திக்க வேண்டியதும் உள்ளது.?

1000 வருடங்களில் 100 கோடி மக்கள் தொகை பெருகியது என்றால்!

1இலட்சம் வருடங்களுக்கு முன்பு நிச்சயமாக உலகளவில் மக்கள் தொகை குறைவாகதான் இருந்திருக்க முடியும்...!

100 வருடங்களுக்கு முன்பு 26 இலட்சம் மக்கள் தொகை என்றால்?

2 இலட்சம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் எவ்வளவு மனிதர்கள் இருந்திருப்பார்கள்?

(THE POPULATION OF ANCIENT INDIA
என்ற வரலாற்று புத்தகத்தில்  இந்தியாவின் உருவாக்கம் பற்றிய முழு தகவல்கள் உள்ளது, அது பெரிய வரலாறு, எனது ஆய்வுக்கு தேவையான தகவல்கள் மட்டும் மேற்கொள் காட்டப்படும்)

இன்னும் சொல்லப்போனால்..
ஐரோப்பா கண்டத்தில் மனிதஇனத்தின் காலடிதடமே கிடையாது,

மேற்கு ஆசியா கண்டமான இன்றைய மத்திய கிழக்கு(அரபு) நாடுகளில்
அதற்கான ஆதாரமும் நிறைய உள்ளது..

அப்படியென்றால் இன்றுள்ள ஆப்பிரிக்கா கண்டம் மற்றும் இன்றுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் மனித காலடிதடம் இருந்ததாக வரலாற்று ரீதியாகவும்,
விஞ்ஞான ரீதியாகவும் பல உண்மைகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது,

அது மட்டுமல்லாமல் பல உண்மைகள் மறைந்துள்ளது..

விஞ்ஞானிகளின் ஆய்வுபடி மனிதஇனம் தோன்றியது,
ஆப்பிரி்க்கா நாட்டில் உள்ள ஹோமோ ஹைடல்பெர்ஜெனிஸ் என்ற பகுதியி்ல் தான் என்றால்....?

அந்த மனிதனின் தோற்றம் மற்றும் நிறம் கருப்பு  நீக்ரோ மனிதனாகும்

கருப்புநிறமுள்ள நீக்ரோ மனிதனுக்கும், குர்ஆனில் சொல்லும் முதல் மனிதர் ஆதம்(அலை) அவர்களுக்கும் என்ன சம்மந்தம்?

விஞ்ஞானிகளின் ஆய்வுபடி முதல் மனிதன் பற்றிய மரபணு சோதனையில் முதல் மனிதன் கருப்பு நிற நீக்ரோவாகும்...

நீக்ரோ மனிதர்களின் பூர்வீகம் எது என்று கேட்டால்..?
ஆப்ரிக்கா என்பதை நாம் அனைவரும் சொல்வோம்...

ஆப்பாரிக்கா கண்டத்தில் பல நாடுகள் உள்ளது...
அவைரும் பார்க்க ஒரே மாதிரியாகதான் இருப்பார்கள்...

அவர்களுடைய மொழி கலாச்சாரம் உட்பட அனைத்தும் வேறு வேறு...

ஆனால் ஒரு இந்தியாவில் இருக்கும் மனிதனிடம் கருப்பு நிற மனிதனின் புகைப்படத்தை காட்டி இவர் யார் என்று கேட்டால்??

கண்மூடி சொல்வார்கள் ஆப்பிரிக்காகாரன் என்று...

அதே சித்தாந்தம் தான் விஞ்ஞானிகளும் கையான்டுள்ளார்கள்...

முதல் மனிதன் நீக்ரோ என்று கண்டுப்பிடிக்கப்பட்ட விஞ்ஞானிகள்...

அவனுடைய பிறப்பிடம் ஆப்பிரிக்காவாக இருக்கும் என்பதாகும்,
ஆனால் ஆப்பிரிக்கா வழிதோன்றல் எங்கிருந்து உருவாகியது என்பதும் கொஞ்சம் கொஞ்சமாக கண்டுப்பிடிக்கப்பட்டு வருகிறது...

விஞ்ஞானம் படிப்படியாக வளர்ந்து வரும் காரணத்தால் 70% மனித உருவாக்கத்தை கண்டுப்பிடித்துள்ளனர்..
இன்னும் கண்டுப்பிடிப்பார்கள்..

எதிர்கால விஞ்ஞானம் பல உண்மைகளை கண்டுப்பிடிக்கும்..

இந்த தகவலை ஏன் தருகிறேன் என்றால்!

விஞ்ஞானிகள் ஒரு கண்டுபிடிப்பை வெளியிடுகிறார்கள் என்றால்...!
பொழுது அது குர்ஆனுடன் உடன்படும் பொழுது மட்டும் அதை ஆதாரம் காட்டுவோம்...

ஏன் என்றால் விஞ்ஞானம் வளராத காலத்தில் கண்டுப்பிடித்த பல கண்டுப்பிடிப்புகள் இன்று முரண்பட்டுள்ளது...

உதாரணம்: அன்றைய விஞ்ஞானிகள் சந்திரனுக்கு சொந்த வெளிச்சம் என்று சொன்னார்கள்,
ஆனால் இன்றைய விஞ்ஞானம் பல தொழில்நுட்பத்தின் மூலம் கண்டுப்பிடித்தது,
சந்திரனுக்கு சொந்த வெளிச்சம் கிடையாது,
அது சூரியனின் பிரதிபலிப்பு என்று...

குர்ஆன் அப்பொழுதும் சந்திரன் பிரதிபலிப்பு தான் என்று சொன்னது,
இன்றும் அதே தான் சொல்கிறது...

وَجَعَلَ الْقَمَرَ فِيهِنَّ نُورًا وَجَعَلَ الشَّمْسَ سِرَاجًا

அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான்
திருக்குர்ஆன்  71:16

இந்த வசனத்தில்:
சூரியன்-விளக்கு
சந்திரன்-ஔி

தவறு எங்குள்ளது?  விஞ்ஞானத்தில்,

குர்ஆனில் இல்லை..

அதேபோல தான் மனிதனின் படைப்பினத்தைப்பற்றியும்...

அப்பொழது குரங்கு என்றார்கள்...
இப்பொழது களிமண் என்கிறார்கள்...

குர்ஆன் அப்பொழுதும் இதே கருத்துதான்
இப்பொழதும் இதே கருத்துதான்..
உலகம் அழியும் வரை இதே கருத்தில் தான் இருக்கும்..

அந்த அடிப்படையில் நமது ஆய்வுகளை புறிந்து கொள்ளவேண்டும்...

இப்பொழது நான் நிருப்பிக்க வேண்டியது முதல் மனிதர் ஆதம்(அலை) மற்றும் அவர்களின் வழிதோன்றல்கள்...

ஆதலால் பலமேற்கொள் காட்டினாலும் இறுதியில் கருத்து ஒன்றாகவே இருக்கும்...

இஸ்ரேல் நாட்டு டெல்(tel aviv University isrel) அவிவ் பல்கலைகழகம் விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு அது உலகையே ஆச்சரியப்பட வைத்தது...

இஸ்ரேல் நாட்டில் உள்ள (TEL AVIV UNIVERSITY) விஞ்ஞானிகளன் தொல்பொருள்
(Archaeological)
மூலம் மனித உருவாக்கத்தைப்பற்றி ஒரு புதிய தகவலை கண்டுப்பிடித்துளார்கள்.

பெண் குரியான் விமான நிலையம்(ben gurion airport) அருகில் இருக்கும் குசோம் என்ற குகையில் அந்நாட்டு தொல்பெருள் (Archaeological) ஆராய்சியாளர்கள் ஆய்வு செய்த பொழது நான்கு இலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த ஆதி மனிதனின் உடல் படிவங்களை கண்டுப்பித்துள்ளனர்..

அந்த உடலை தடயங்களை  ஆய்வு செய்த விஞ்ஞானிகள் ஹேமோ சோப்பியன்கள் என்றழைக்கப்படும் ஆப்ரிக்கர்களின் உடல் தான் என்பதை ஆய்வின் அறிகையில் தெறிவித்துள்ளனர்...

இந்த ஹேமோ சோப்பியன்கள் பற்றி முந்தைய தொடரில் குறிப்பிட்டுள்ளேன்..

ஹோமோ சோப்பியன் என்ற இனம், ஆப்பிரிக்காவில் கருப்பு நிற மனிதர்களை குறிக்கும்...

ஆப்பிரிக்கா தான் மனித இனத்தின் ஆரம்பம் என்று சொன்ன விஞ்ஞானிகளுக்கு இந்த கண்டுப்பிடிப்பு மிக பெரிய ஆச்சரியத்தை கொடுத்துள்ளது..

ஆப்பிரிக்காவில்(Homo Heidelbergensis in Africa) என்ற பகுதியில் இருந்து தான் மனித இனம் தோன்றியது என்ற கண்டு்ப்பிடிப்பு முரணாக மாறிவிட்டது...

ஆப்பிரிக்கவி்ன்(Homo Heidelbergensis in Africa) என்ற பகுதியும் இஸ்ரேல் (உபைதியா) குசோம் என்ற பகுதிக்கும் திட்டதட்ட 7000 கிலோமீட்டர் தூரம் உள்ளது...

7000 கிலாமீட்டர் தொலைவில் உள்ள ஆப்பிரிக்காவும் உபைதியாவுக்கும் நான்கு இலட்சம் வருடங்களுக்கு முன்பு பல வித்தியாசங்கள் இருந்திருக்கும்...!

ஏணி வைத்தாலும் எட்ட முடியாது...

அப்படியிருக்கும் பட்சத்தில் ஒன்று ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க வேண்டும்,
அல்லது உபைதியாவில் தோன்றியிருக்க வேண்டும்...

இரண்டு இடத்திலும் ஒன்றாக தோன்றியிருக்க முடியாது...
ஏதாவது ஒரு இடம் தான் சாத்தியம்...

எனது ஆய்வின்படி ஆப்பிரிக்கா மனித கண்டுப்பிடிப்பானது இரண்டு இலட்சம் வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த உடலமைப்பு என்கிறது...

இஸ்ரேல் கண்டுப்பிடிப்பானது நான்கு இலட்சம் வருடத்திற்க்கு முன்பு வாழ்ந்த உடலமைப்பு என்கிறது...!

எது நீண்ட காலம்?
நான்கு இலட்சம் வருடம் தான்...

ஆக எனது ஆய்வுபடி இஸ்ரேல் கண்டுப்பிடித்த குசோம் குகை மனித  உடலமைப்பு தான் முதல் மனித இனத்திற்கான அடையாளம்...

மேலும் முதல் மனிதர் ஆதம்(அலை) தான் என்று உறுதியாக சொல்ல முடியாது!

எனது ஆய்வின் இறுதியில் முதல் மனிதர் எங்கே முதலில் தோன்றினார் என்பதை நிறுபிப்பேன்...

இந்த குசோம் என்ற பகுதி இன்றைய உபைதியா, இஸ்ரேல்,ஜோர்டான், சவுதி அரேபியாவின் தபூக் பகுதிகளுக்கு அருகாமையில் உள்ளது...

விஞ்ஞானிகளின் இந்த கண்டுபிடிப்புக்கு பிறகு முதல் மனிதன் ஆப்பிரிக்காவில் தோன்றியிருக்க முடியாது, மாறாக மேற்கு ஆசியாவான இன்றைய மத்திய கிழக்கு நாடான அரபு மண்ணில் தான் தோன்றியிருப்பான், இங்கிருந்து தான்
நான்கு இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஆப்பிரிக்கா கண்டம மற்றும் உலகில் பல பகுதி்க்கு இடம்பெயர்ந்திருப்பான் என்பதாகும்..

ஆய்வு செய்ய, செய்ய விஞ்ஞானிகளுக்கு  மண்ணில் பல அத்தாட்சிகள்  புதைந்துள்ளது..

அதை மேலும் வலுசேர்க்கும் வகையில் இந்த வசனமும் உள்ளது...

இந்த வசனம் மத்திய கிழக்கு மண்ணில் வாழ்ந்த மக்களுக்கு சொல்லப்பட்டது..

அவர்களுக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினரை அழித்துள்ளோம் என்பது அவர்களுக்கு நேர்வழியைக் காட்டவில்லையா?

அவர்கள் குடியிருந்த இடங்களில் இவர்கள் நடக்கின்றனர்.

அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன் 20-128

குசோம் குகை உட்பட இன்னும் பல வரலாற்று நிகழ்வுகள் நடந்த இடங்கள் இன்றைய சவுதி அரேபாியாவில் உள்ளது..

இறைவன் சான்று உள்ளது ஆய்வு செய்யுங்கள் என்று தூன்டுகிறான்...

ஏக இறைவனின் திருப்பெயரால்

இறைவன் யார்?
தொடர்-21

பூமிக்குள் பல அத்தாட்சிகள் மறைந்துள்ளது,
பூமியை தோன்ட தோன்ட பல உண்மைகள் எதிர்காலத்தில் தெறியவரும் என்பதே எனது கருத்து...

அதனடிப்படையில் இன்றைய விஞ்ஞானம் கண்டுப்பிடித்துள்ள ஆதிமனிதனைப்பற்றிய தகவல் குறைவானதே..!

ஆப்ரிக்காதான் ஆதிமனிதனின் தொடக்கம் என்ற விஞ்ஞானிகளின் கண்டுப்பிடிப்பு கேள்விக்குறியானது? ஏனென்றால்..

தற்பொழுது அரபு பாலைவனமான குசோம் குகையில் கிடைத்த ஆதிமனிதனின் தடயங்கள் விஞ்ஞானிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...

குசோம் குகையில் கிடைத்த தடயங்கள் கூட ஆரம்பம் என்று 100% சொல்ல முடியாது....

ஆப்பிக்கா மனிதனின் கண்டுப்பிடிப்பு எப்படியோ...!
அது போல தான் குசோம் குகையும்...

இன்னும் சற்று முன்னோக்கி செல்லவேண்டியது இருக்கு...

எனது ஆய்வின்படி மனித தொடக்கம் இப்படி தான் இருந்திருக்கும் என்பது பற்றிய கருத்துக்களை முன்வைக்கிறேன்...
(இறைவன் நன்கறிந்தவன்)

விஞ்ஞானிகள் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் மனித இனம் தோன்றியது என்ற கணிப்பு சாத்தியமானது அல்ல.?

சில இலட்சம் வருடங்களுக்கு முன் மனித இனம் தோன்றியது என்ற கருத்து தான் சரியானது..!
(அதற்கான விளக்கத்தையும் பின்னாலில் குறிப்பிடுவேன்)

ஏனென்றால் சுமார் 40000 நாற்பது ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் (czechoslovakia) செக்கோஸ்லோவாக்ய என்ற நாட்டில் லார்ச் நகருக்கு அருகில் மனித எலும்புகூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு்ள்ளது, அந்த ஆய்வறிக்கையின் படி அங்கிருந்த பொருட்களை வைத்து ஆய்வு செய்யும்பொழது, ஓரளவுக்கு நாகரிகமடைந்த மனிதனாக தான் இருந்திருக்க வேண்டும் என்பதை புதைப்பொருள் வரலாற்று அறிஞர்கள் உறுதிபட சொல்கின்றனர்...

இந்த czechoslovakia என்ற நாடோ ஜெர்மன் அருகில் உள்ளது,
குசோம் குகையோ இன்றைய இஸ்ரேலான பாலஸ்தீனம் அருகில் உள்ளது..

ஆதிமனிதன் தரைவழி பயணமாக இஸ்ரேல்,லெபனான்,
சிரியா,துருக்கி ரோம பேரரசு இதன் வழியாக தான் இன்றைய லார்ச் நகருக்கு கடந்து சென்றிருக்க வேண்டும்...

கடல் வழி பயணம் சாத்தியமில்லை...
(கடல் வழி சாத்தியம் ஏன் இல்லை என்பதை பின்னாலில் விளக்குவேன்)

லார்ச் நகர் ஆதிமனிதனை பொறுத்த வரை புதிய கற்கால மனிதர்(Neolithic)
அப்படியென்றால்! அதற்கும் முன்னால் பழைய கற்கால மனிதன் உள்ளான்,
பழைய கற்கால மனிதனுக்கும் முன்னால் பழமையான ஆதிமனிதன் வாழ்ந்துள்ளான்...!

புதிய கற்கால மனிதனே 40 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்திருக்கின்றான என்றால்?

பழைய கற்கால மனிதன்? சில ஆயிரங்கள் அல்லது சில இலட்சம் வருடங்களுக்கு முன்னால் தான் வாழ்ந்திருக்க முடியும்...

ஆதிமனிதன் இன்னும் சில இலட்ச வருடங்களுக்க முன்பு தான் தோன்றியிருக்க முடியும்...

எனது ஆய்வின் கூற்றுப்படி முதல் மனிதன் சில இலட்ச வருடங்களுக்கு முன்பு தான் தோன்றியிருக்க முடியும் என்பதை, ஏதே யூகத்தின் அடிப்படையில் சொல்லவில்லை..

பல்வேறு  ஆய்வுகள் மற்றும் நடைமுறை சாத்திய கூறுகள் மூலமே இறைவன் படைத்த முதல் மனிதன் சில இலட்ச வருடங்களுக்கு முன்பு பூமிக்கு வந்திருக்க முடியும் என்பதாகும்...

மேலும், வரலாற்று அறிஞர்கள் மற்றும் நாத்திகர்கள் மனித படைப்பை பற்றி ஆராயக்கூடியவர்கள் ஒரு கேள்வியை முன் வைக்கலாம்...?

இந்நேசியாவில் ஜாவா தீவி அருகில் பெனாங்வன் சோலோ(Bengawan Solo) ஆற்றங்கரையில் கண்டுபிடிக்கப்பட்ட புதைபடிவம்,

அந்த ஆய்வரிக்கையில் 5 இலட்சம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மிக பழமையான ஆதி மனிதனின் மண்டைஓடு என்பதாகும்...

மேற்கு ஆசியாவில் முதல் மனிதன் தோன்றினான் என்றால்!

மேற்கு ஆசியாவிற்க்கும், இந்தநேசியாவிற்க்கும் இடையில் பல ஆயிரம் மைல் தொலைவு இருக்கையில்?

ஜாவா தீவில் எப்படி பழமையான மனிதனின் மண்டையோடு கிடைத்தது என்ற கேள்வியாகும்?

எனது பதில், விஞ்ஞானிகளின் கூற்றுபடி முதல் மனிதன் பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியிருப்பார்கள் என்பதாகும், இது வெறும் யூக அடிப்படை தான்..

ஆனால் ஜாவா தீவில் கண்டெடுக்கப்பட்ட மண்டையோடு 5 இலட்சம் வருடங்களுக்கு முந்தையதாகும்!

ஜாவா தீவில் கண்டெடுக்கப்பட்ட இயுஜீன் டுபொய்ஸ் (Eugène Dubois) என்பவர் இந்த மண்டை ஓட்டிற்க்கு பித்தெகாந்திராப்பஸ் இரெக்ட்டஸ் (Pithecanthropus erectus நிமிர்ந்த மனிதக் குரங்கு) என்ற பெயர் வைத்து சில விளக்கங்களையும் கொடுத்துள்ளார்..

டுபொய்ஸின் கண்டுபிடிப்பு ஒரு முழுமையான மாதிரி அல்ல.

இது ஒரு மண்டையோட்டு
மூடி, ஒரு தொடை எலும்பு, சில பற்கள் என்பன அடங்கியது ஆகும்.

இவை அனைத்துமே ஒரே இனத்துக்கு உரியவைதானா? என்பதில் சில ஐயங்களும் எழுப்பப்பட்டு உள்ளன.

இது போன்ற,
ஆனால் இதைவிட முழுமையான இரண்டாவது முறை நடுஜாவா தீவில் உள்ள சங்ரான் என்னும் ஊரில் கண்டுபிடிக்கப்பட்டது.

1936 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்ட இம் மாதிரியைத் தொடர்ந்து, மேலும் பல இது போன்ற மாதிரிகள் இப்பகுதியிற் கண்டுபிடிக்கப்பட்டன என்பது குறிப்பிடதக்கது...

மேலும் அந்த மண்டை ஓடு நிமிர்ந்த மனிதக் குரங்கு தோற்றத்தை ஒத்ததாக உள்ளது,

நிமிர்ந்த மனிதக் குரங்கு,  நீக்ரோ மனிதனை குறிக்கக்கூடியதாகும்,

இதுவே எனது பதில்,
இந்த பதிலுடன் சேர்த்து நான் ஒரு கேள்வியை முன் வைக்கிறேன்...!

நீக்ரோ மனிதன் எப்படி இந்தநேசியாவில் உள்ள ஜாவா தீவிற்க்கு வந்திருக்க முடியும்?

அதுவும் ஒரு இனமே..!

முதல் மனிதன் மத்திய கிழக்கி நாட்டில் தான் தோன்றினான் என்பதை நிருபிக்கும் வகையில் எனது அடுத்த ஒரு ஆதாரத்தை முன் வைக்கிறேன்...

ஆதி மனிதன் என்பவன் யார்?

ஆதி மனிதனை பொறுத்தவரை பல பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளனர்...

ஆதிமனிதன், பழைய ஆதிமனிதன், புதிய ஆதிமனிதன், கற்கால ஆதிமனிதன் என்றெல்லாம் அழைக்கப்படுகின்றனர்

ஆதி மனிதனுக்கும் கற்கால ஆதிமனிதனுக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன..

கற்கால ஆதிமனிதன் கண்டுப்பிடித்த தொழில் நுட்பங்கள் ஆதிமனிதனுக்கு தெறியாது..

உதாரணம்: ஜெர்மனி, பிரான்ஸ்,
இத்தாலி, பெல்ஜியம்
ஆகிய நாடுகளில் நியான்டர்தால்மனிதனின்
எஞ்சிய அழிவுச் சின்னங்கள் கண்டெடுக்கபட்டுள்ளன

இதன் மூலம் இம்மனித இனம் குகைகளில் வாழ்ந்ததாகவும், தோல் ஆடைகளை உடுத்தியதாகவும், தீயால் சமைக்கத் தெரிந்ததாகவும் என்ற தகவலை தொல்பொருள் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்..

நியான்டர்தால் மனித இனம் அழிந்த பின் தோன்றிய இனம் தான் இன்றைய மனிதனின் மூதாதை எனக் கருதப்படும் குரோமன்யான் மனிதன் ஆவான்.

கற்கருவிகளைப் பயன்படுத்திய
குரோமன்யான் மனிதன்வேட்டையாடிய பழைய கற்கால மனிதன் ஆவான்.

குரோமன்யான் மனிதனுக்குப் பின் தோன்றியவனே புதிய கற்கால மனிதன்
(நியோ லித்திக் ) இவனே மனித நாகரிக இனத்தின் தொடக்கமாகக் கருதப்படுகிறான்.

இதில் நாம் சிந்திக்கவேண்டிய தகவல் நிறைய உள்ளது.

இன்றைய இஸ்ரேலில் உள்ள குசோம் குகையில் கண்டுப்பிடித்த மனித  தடயம் மற்றும் ஜாவா தீவு, ஆப்பிரிக்கா, ஜெர்மன், இத்தாலி போன்ற நாடுகளில் ஆதிமனிதன் வாழ்ந்ததற்கான தடயங்கள் கண்டுப்பிடிககப்பட்ட நிலையில்..

நிச்சயமாக முதல் மனிதன் அதற்கு முன்னால் வேறு பகுதியில் தான் தோன்றியிருப்பான் என்பதை உணர்த்துகிறது.

ஆதி மனிதனான முதல் மனிதன் ஆப்ரிக்காவிலும் தோன்றவில்லை!

இன்றைய இஸ்ரேலான குசோம் குகையிலும் தோன்றவில்லை!

ஜாவா தீவிலும் தோன்றவில்லை!

ரோமிலும் தோன்றவில்லை!

வேறு எங்கு தான் தோன்றினான்?

எங்கு தோன்றினான் என்பதை வெறும் பதிலாக சொன்னால் அதற்கான ஆதாரம் என்ன என்ற கேள்வி வரும்...

அந்த கேள்விக்கான விளக்கத்தை தான் ஆய்வாக சமர்பிக்கின்றேன்...

ஆதலால்..
எங்கு தோன்றினான் என்பதை ஆய்வின் அடிப்படையில் பார்ப்பது தான் ஏற்கத்தக்கது...

சிலர் சொல்லலாம் ஆதி மனிதன் இந்தியாவில் தோன்றினான்,
இலங்கயைில் தோன்றினான்,
சீனாவில் தோன்றினான்,
அமெரிக்காவில் தோன்றினான்,
இமயமலையில் தோன்றினான் என்று...

அது வெறும் கற்பனை..

அந்த ஆதி மனிதனுடைய புபை்படத்தையும் தற்பொழுது வரைந்து இவன் தான் ஆதி மனிதன் என்றும் சொல்கிறார்கள்...

எதையும் ஆய்வு செய்து அது உறுதி செய்யப்பட்டாலே ஏற்றுக்கொள்ள வேண்டும்...

வெறும் கற்பனையால் சொல்வதை ஏற்க முடியாது..

இப்பொழது நான் சொல்லப்போகும் ஒரு செய்தி...
இந்த கற்பனை கதைகள் எல்லாவற்றையும் தவுடுபொடியாக்கிவிடும்.

நாம் நினைப்பது போல ஆதி மனிதனின் உயரம் நம்மை போல 4அடியோ!
5அடியோ!
6அடியோ இல்லை....?மாறாக அவன் உயரம்

திட்டதட்ட 60 முதல் 70 வரை உயரம் கொன்டவன் தான் ஆதி மனிதன்...

இந்த தகவல் வெறும் கற்பனை அல்ல...

தொல்பொருள் ஆய்வில் நிறுபிக்கப்பட்ட உண்மை...

விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதை பார்பதற்க்கு முன்...

இஸ்லாம் என்ன சொல்கிறது என்று பார்ப்போம்...

ஸஹிஹுல் புகாரி என்ற நபிமொழி புத்தக்தில் (6227) வது நபிமொழியில் இந்த தகவல் பதிவு செய்யப்பட்டுள்ளது:

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஆதி மனிதர் ஆதம்(அலை) பற்றி அவருடைய தோற்றம் குறித்த செய்தியை தன்னுடைய தோழர்களுக்கு செல்லியுள்ளார்கள்..

அதை அபு ஹுரைரா(ரலி) என்ற நபிதோழர் பதிவு செய்து அறிவிக்கிறார்:

ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களை இறைவன் படைக்கும் பொழுது அழகிய தோற்றத்தில் படைத்ததாகவும், அவருடைய உயரம் 60 முழங்கலாக இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்..

அது மட்டுமல்லாமல் ஆதி மனிதர் ஆதம்(அலை) அவர்களுடைய காலம் முதல் இன்று வரை மனிதனுடைய தோற்றமும்,உருவமும்,குறைந்து கொன்டே வருகின்றது என்ற கூடுதலான தகவலையும் குறிப்பிட்டுள்ளார்கள்...

இஸ்லாமிய கூற்றுபடி ஆதிமனிதர் ஆதம்(அலை) அவர்களின் உயரம் 60 அடிக்கு மேலாக, அதாவது கன்னியாகுமரியில் உள்ள 133 அடி திருவள்ளுவர் சிலையில் பாதிக்கு மேல் கற்பனை செய்துகொள்ளுங்கள்...

இது தான் ஆதி மனிதனின் உயரம் என்பதை இஸ்லாம் தெளிவாக சொல்லிவிட்டது மாற்று கருத்தில்லை...

இனி தொல்பொருள் ஆராய்சி ஆய்வு என்ன சொல்கிறது என்று பார்ப்போம்..

தொடர்சி மனிதர் ஆதம்(அலை) அவர்களின் உயரம் என்ற தொடரில் பார்க்கவும்...

ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments