தஸ்பீஹ் தொழுகை உண்டா?
ஏக இறைவனின் திருப்பெயரால்:
தஸ்பீஹ் தொழுகை என்றால் நான்கு ரக்அத்துக்களைக் கொண்ட தொழுகையாகும்.
ஒவ்வொரு ரக்அத்திலும் சுப்ஹானல்லாஹி வல்ஹம்துலில்லாஹி வலாயிலாக இல்லல்லாஹு வல்லாஹு ஆக்பர் என 75 விடுத்தம் சொல்லப்படும்.
நான்கு ரக்அத்துக்களிலும் மொத்தமாக 300 தடவைகள் தஸ்பீஹ் சொல்லப்படுவதால் இத்தொழுகை தஸ்பீஹ் தொழுகை என அழைக்கப்படுகின்றது.
இந்தத் தொழுகை குறித்து இடம் பெற்றுள்ள ஹதீஸ்கள் ஏற்கத்தக்கவையா? இல்லையா? என்பது பற்றிய கருத்து வேறுபாட்டால் இந்தத் தொழுகை பற்றியும் அறிஞர்களுக்கு மத்தியில் அபிப்பிராய பேதம் நிலவி வருகின்றது.
இப்னு குஸைமா- 1216,
அபூதாவூத்- 1297,
இப்னுமாஜா- 1387
இன்னும் சில நூல்களில் வந்துள்ளது,
இந்த அறிவிப்பு பலவீனமான தாகும். ஷெய்க் அல்பானி மற்றும் சுஅய்ப் அல் அர்னாஊத் போன்ற அறிஞர்கள் இதை பலவீனமான (ஹஸனான) அறிவிப்பு என்கின்றனர்..
இந்த ஹதீஸ் தஸ்பீஹ் தொழுகையை சிறந்ததொரு தொழுகையாகவும் இதன் மூலம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றது என்றும் வாழ்நாளில் ஒரு முறையாவது இதைத் தொழ வேண்டும் என்றும் கூறுகின்றது.
இருப்பினும், இந்த ஹதீஸை ஸஹீஹானதாக ஏற்பதா? இல்லையா? என்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தஸ்பீஹ் தொழுகை உண்டா? இல்லையா? என்பது குறித்து அறிஞர்களுக்கு மத்தியில் பலத்த கருத்து வேறுபாடு நிலவுகின்றது.
முஸ்தஹப்பானது – விரும்பத்தக்கது:
தஸ்பீஹ் தொழுகை விரும்பத்தக்க ஒரு தொழுகை என்ற கருத்தை ஆரம்ப கால அறிஞர்களில் இப்னுல் முபாரக்(ரஹ்) அவர்களும் மற்றும் ஷாபி மத்ஹபுடைய சில அறிஞர்களும் கொண்டுள்ளனர்.
நவீனகால அறிஞர்களில் அறிஞர் அல்பானி(ரஹ்) அவர்களும் இந்த கருத்தில் உள்ளனர்.
அமாலியல் அத்கார் பீ பழ்லி ஸலாதி தஸ்பீஹ் என்கின்ற பெயரில் இப்னு ஹஜர் அஸ்கலானி (ரஹ்) அவர்களுக்குத் தனி நூல் உண்டு.
இவ்வாறே கதீப் அல் பக்தாதி (ரஹ்) அவர்களும் தஸ்பீஹ் தொழுகை பற்றி வந்துள்ள ஹதீஸ்களைத் தொகுத்து தனி நூலை எழுதியுள்ளார்கள்.
அதில் தஸ்பீஹ் தொழுகை பற்றி 29 அறிவிப்புக்களை அவர்கள் முன்வைத்துள்ளார்கள்.
இந்தத் தொழுகை பற்றிய ஆதாரமாகக் கொண்ட ஸஹீஹான அறிவிப்பாளர் வரிசையைக் கொண்ட ஒரே ஒரு ஹதீஸ்கூட இடம்பெறவில்லை..
நபி(ஸல்) அவர்கள் தஸ்பீஹ் தொழுகை பற்றிய மேற்படி செய்தியை அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கூறியதாகவும் பழ்ல் இப்னு அப்பாஸ், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ், அழா இப்னு அபீதாலிப் போன்றோரிடம் கூறியதாகவும் முரண்பட்ட பல அறிவிப்புக்கள் உள்ளன.
இந்த அறிவிப்பாளர்கள் வரிசை அனைத்தும் முரண்பட்டுள்ளது..
தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப் பட்டதல்ல:
தஸ்பீஹ் தொழுகை பற்றி பல அறிவிப்புக்கள் வந்திருந்தாலும் அனைத்துமே பலவீனமானதாக இருந்ததால் தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப்பட்ட தொழுகை அல்ல என்பது இவர்களின் நிலைப்பாடாகும்.
உதாரணமாக, இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் (ரஹ்) அவர்கள் இந்த நிலைப்பாட்டில் உள்ளார்கள்.
அவரிடம் தஸ்பீஹ் தொழுகை பற்றிக் கேட்கப்பட்ட போது:
என்னை அது கவரவில்லை’ என்றார்கள். ஏன் எனக் கேட்கப்பட்ட போது அது குறித்து ஸஹீஹான ஒரு செய்தியும் இல்லை எனக் கூறி அதை மறுப்பது போல் கையால் சைக்கினை செய்தார்கள்.
(அல் முக்னீ: 2ஃ98)
இமாம் நவவி (ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது:
தஸ்பீஹ் தொழுகை முஸ்தஹப்பானது(விரும்பத்தக்கது) என்று கூறுவதில் மாற்றுக் கருத்துள்ளது. ஏனெனில், அது பற்றி வந்துள்ள ஹதீஸ் பலவீனமானதாகும்.
அத்துடன் வழமையாகத் தொழப்படும் தொழுகையின் ஒழுங்குக்கும் அது முரண்படுகின்றது.
எனவே, ஹதீஸ் இல்லாமல் இதனைச் செய்ய முடியாது. இது குறித்த ஹதீஸ் உறுதியானதல்ல’ எனக் கூறுகின்றார்.
(அல் மஜ்மூஃ: (4ஃ54)
இவ்வாறே நவீன கால அறிஞர்களில் பலரும் தஸ்பீஹ் தொழுகையை மறுத்துள்ளனர். ஷெய்க் பின்பாஸ் (ரஹ்) மற்றும் ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) போன்றோரை இதற்கு உதாரணமாகக் கூறலாம். ஷெய்க ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) அவர்கள் இது பற்றிக் கூறும் போது:
தஸ்பீஹ் தொழுகை சுன்னா அல்ல.
அது பற்றி வந்துள்ள ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவை என்பதே என்னிடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்ட கருத்தாகும். இதற்குப் பல காரணங்கள் உள்ளன.
1. இபாதத் விடயத்தில் உறுதியான ஆதாரம் வரும் வரை அதை செய்யக் கூடாது என்பதே அடிப்படையாகும். (தஸ்பீஹ் தொழுகை பற்றி உறுதியான ஹதீஸ் வரவில்லை.
2. தஸ்பீஹ் தொழுகை பற்றிய ஹதீஸ் குழப்பத்திற்குரியதாகும்.
3. (முக்கியமான) அறிஞர்கள் எவரும் இதனை செய்ததாகவும்,சொன்னதாகவும் காணவில்லை...
இமாம் அஹ்மத் மற்றும் அவரது தோழர்கள் இதனை நியாயப்படுத்தவில்லை மறுத்துள்ளார்கள் என இமாம் இப்னு தைமிய்யா (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம்களான அபூ ஹனீபா, மாலிக், ஷாபி (ரஹ்) போன்றோரும் முழுமையாக இதை சரிகண்டதாக இல்லை..
4. இந்தத் தொழுகை மார்க்கத்தில் விதியாக்கப் பட்டிருந்தால் சந்தேகத்திற்கு இடமில்லாமல் சமூகததிற்கு எடுத்துச் சொல்லப்பட்டிருக்கும்.
இந்த வணக்கத்தில் உள்ள நன்மைகள், ஏனைய இபாதத்துக்களில் இருந்து இது முரண்பட்டிருக்கும் விதம் என்பதால் அது பிரபல்யம் பெற்றிருக்கும்.
அமல்கள் விஷயத்தில் எந்த ஒரு வணக்கத்திலும் இப்படித் தேர்ந்தெடுத்துச் செய்யும் உரிமை வழங்கப் பட்டிருப்பதாக நாம் அறியவில்லை.
ஒவ்வாரு நாளும் இல்லாவிட்டால் கிழமைக்கு ஒன்று இல்லாவிட்டால் மாதத்திற்கு ஒன்று இல்லாவிட்டால் வருடத்திற்கு ஒன்று இல்லாவிட்டால் ஆயுளில் ஒரு முறை… இப்படி ஒரு வணக்க விடயத்தில் தேர்ந்தெடுக்கும் உரிமை வழங்கப்பட்டதாக நாம் அறியவில்லை.
இது தான் அக்காலத்து அறிஞர்களின் கருத்தும்,நவீன அறிஞர்களின் கருத்தும் ஆகும்...
இந்த வணக்க முறை ஏனைய வணக்க முறைகளை விட வித்தியாசப்பட்டுள்ளது. இதன் பலன்களும் அதிகமாக உள்ளது. ஆனால், இது பற்றிய அறிவிப்பு பிரபலமானதாக அமையவில்லை.
எடுத்துச் சொல்லப்படவும் இல்லை எனும் போது இந்த செய்திக்கு அடிப்படை இல்லை என்பது அறியப்பட்டுவிடுகின்றது.
ஏனெனில், ஒன்றின் நன்மை அதிகமாக இருந்து அதன் நடைமுறையும் வித்தியாசமாக இருந்தால் மக்கள் அதில் அதிக அக்கறை காட்டுவார்கள். ஒருவர் மற்றவருக்கு எடுத்துச் சொல்வார். அது பகிரங்கமாக மக்கள் மத்தியில் பரவும். இதெல்லாம் இந்தத் தொழுகை விடயத்தில் நடக்கவில்லை என்றால் இப்படி ஒரு தொழுகை விதியாக்கப்படவில்லை என்பதை அறிந்து கொள்ளலாம்.
இவ்வாறு ஷெய்க் ஸாலிஹ் அல் உதைமீன் (ரஹ்) அவர்கள் தனது நிலைப்பாட்டிற்கான நியாயங்களை முன்வைக்கின்றார்கள். தஸ்பீஹ் தொழுகை தொடர்பில் இந்தக் கருத்தே மிகவும் சரியானதாகும்.
இந்த அடிப்படையில் தஸ்பீஹ் தொழுகை ஷரீஆவில் விதியாக்கப்பட்டது அல்ல என்ற நிலைப்பாட்டையே நாம் புறிந்துகொள்ளமுடிகிறது.
அத்துடன் தஸ்பீஹ் தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவதற்கான ஆதாரங்களையும் காண முடியவில்லை. ரமலான் கால வெள்ளிக்கிழமைகளில் ஜும்ஆவுக்கு முன்னர் பெண்களுக்கு தஸ்பீஹ் தொழுவித்தல்,
ரமலான் 27 இல் தஸ்பீஹ் தொழுவித்தல் போன்ற நடைமுறைகள் ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட பித்அத்தான நடைமுறைகளாகும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்.
மார்க்க விஷயத்தில் நாம் நன்மை கருதி எந்த ஒரு செயலைச் செய்வதற்கும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் செயல்முறைகளில் ஆதாரம் இருக்க வேண்டும்.
அல்லாஹ்வை நெருங்குவதற்கு தொழுகை, திக்ர், பிரார்த்தனை என்று எல்லா வழிமுறைகளையும் நபி(ஸல்) அவர்கள் செய்து காண்பித்துத் தந்துவிட்டார்கள்.
இறைவன் கேட்பதை எல்லாம் தருவதாக வாக்குறுதி அளிக்கும் முக்கியமான ஒரு தொழுகையை (தஹஜ்ஜுத்) நபி(ஸல்) அவர்கள் காண்பித்துத் தந்துள்ளார்கள். இறைவனிடமிருந்து அளப்பரிய நன்மையை நாடுவோர் இத்தொழுகையை தொழுவதே சரியானதாகும்.
நன்மையான காரியம் என நினைத்து நபி(ஸல்) அவர்கள் கற்றுத் தராத ஒரு காரியத்தை மார்க்கத்தில் செய்ய முயற்சிப்போமானால் அது நபி(ஸல்) அவர்கள் மார்க்கத்தில் நமக்குக் குறை வைத்துச் சென்று விட்டார்கள்(நவூதுபில்லாஹ்) என்று தவறான எண்ணம் ஏற்படுவதற்கு வழியாகிறது.
அதிலிருந்து நம்மை அல்லாஹ் பாதுகாப்பானாக.
ஆய்வு...
-அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment