இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?
ஏக இறைவனின் திருப்பெயரால்
இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றதா?
உலகம் முழுவதும் தினந்தோறும் கடும் எதிர்ப்புகளையும்,
உயிர் சேதங்களையும் சந்திக்கின்ற ஒரு சமுதாயம் என்றால் அது இஸ்லாம் தான்...
உலகம் முழுவதும் ஏதாவது ஒரு பகுதியில் இழப்புகள் நடந்துகொன்டே ஒரு பக்கம் இருக்க,
மற்றொரு பக்கம் முஸ்லிமகள் தான் பயங்கரவாதிகள், தீவிரவாதிகள் என சர்வதேச ஊடகங்கள் முதல் இந்தியாவில் உள்ள ஆர்.எஸ்.எஸ் மற்றும் அதன் கிளை அமைப்புகள் வரை பிரச்சாரம் செய்கின்றனர்,
முஸ்லிம்கள் என்றால் பயங்கரவாதிகள்,
முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள்,
முஸ்லிம்கள் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்யக்கூடியவர்கள்,
உலகில் உள்ள அத்தனை வெடிகுண்டு தாக்குதல்களையும் முஸ்லிம்கள் தான் செய்கின்றனர் என்று தவறான ஊடகங்கள் வாயிலாக முஸ்லிம்களை பற்றிய ஒரு பயத்தை முஸ்லிம் அல்லாத மக்களின் உள்ளத்தில் விதைக்கின்றார்கள்...
இவ்வளவு தீவிரவாத சாயங்களை வாரி வாரி வீசிக்கொன்டிருக்கும் தருணத்தில்...
ஒரு பக்கம் முஸ்லிம்கள் மனிதநேய பணிகளை தொடர்சியாக செய்தவண்ணமாக இருக்கின்றார்கள்...
இஸ்லாம் பயங்கரவாத்தை ஆதரிக்கின்றது என்றால்?
இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்ய வேண்டும் என்று சொல்கிறதென்றால்?
சென்னை பெரும்வெள்ளத்தில் ஏன் உயிரை பணயம் வைத்து ஜாதி,மதம் பார்க்காமல் களத்தில் இறங்கி வெள்ளத்தில் மூழ்கியவர்களை காப்பாற்ற வேண்டும்???
தன்னுடைய உடைமைகளை இழந்தவர்களுக்கு ஏன் உண்ண உணவு, உடுத்த ஆடைகளை ஏற்பாடு செய்துதர வேண்டும்?
உலகம் முழுவதும் தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக சுமார் 33கோடி ரூபாயை வசூல் செய்து வீடுகளை இழந்தவர்களுக்கு ஏன் கொடுக்க வேண்டும்???
களத்தில் சுமார் 5000 தொன்டர்களை ஏன் நிறுத்த வேண்டும்???
ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளும் அவரவர் கடமைக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்பதற்காக எத்தனை பள்ளிவாசல்கள் பொதுமக்கள் தங்குவதற்காக திறக்கப்பட்டது!
மதங்களை கடந்து ஒருபடி மேல போய்,
இஸ்லாமிய இளைஞர்கள் இந்துக்களின் புனித தளமான கோவிலை அதன் உள்ளே இருந்த அசுத்தங்களை சுத்தம் செய்தார்கள்!
திட்டத்தட்ட 5000க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் சென்னை உள்ளே களத்திலும்...
50000க்கும் மேற்ப்பட்ட இஸ்லாமிய இளைஞர்கள் தமிழகம் முழுவதிலும் அத்தியாவசிய பொருட்களை மூட்டை மூட்டையாக வசூல் செய்து சென்னை,கடலூருக்கு டண் கணக்கில் அனுப்பி வைத்தார்கள்...
இஸ்லாமிய மார்கம் உண்மையில் தீவிரவாத செயல்களை போதிக்கின்றது என்றால் பொதுமக்களை அழிக்க தானே வேண்டும்!
ஏன் காப்பற்ற வேண்டும்????
இதிலிருந்து தெறியவில்லையா?
இஸ்லாம் போதிப்பது தீவிரவாதத்தை அல்ல,
மனிதநேயத்தை....
இஸ்லாத்தின் மீது வைக்கப்படும் பிரதான குற்றச்சாட்டுகள்:
1.இஸ்லாம் தீவிரவாதத்தை போதிக்கின்றது,
2. இஸ்லாம் முஸ்லிம் அல்லாதவர்களை கொலை செய்ய சொல்கிறது,
3. உலகில் நடந்த அத்தனை குண்டுவெடிப்புகளுக்கும் முஸ்லிம்கள் தான் காரணம்,
4. பயங்கரவாத அமைப்புகள் எல்லாமே முஸ்லிம்களால் நடத்தப்படுகின்றது.
இந்த நான்கு காரணங்களை வைத்து தான் முஸ்லிம்கள் மீது தீவிரவாத சாயத்தை பூசுகின்றார்கள்...
இவைகள் ஒவ்வொன்றாக வரலாற்று ரீதியாகவுகம் குர்ஆன் ரீதியாகவும் உண்மை என்ன என்பதை ஒவ்வொரு குற்றச்சாட்டிற்கும் பதில் தகுந்த பதில் பார்ப்போம்...
அதில் முதலாவதாக!
இஸ்லாம் தீவரவாதத்தை போதிக்கின்றது என்ற குற்றச்சாட்டு?
குர்ஆனிலோ அல்லது நபிகளாரின் சொற்களிலோ நீங்கள் எங்கு தேடிப்பார்த்தாலும் ஒரே ஒரு தீவிரவாத செயலை போதிக்கின்ற தகவலை காட்டமுடியாது!
மாறாக குர்ஆனும் நபிகளாரின் போதனைகள், அதிகம் மனிதநேய சிந்தனையை ஊக்குவிக்கும் வகையில் தான் அமைந்துள்ளது...
அதில் ஒரு மனிதநேய சம்பவம்:
அபுதர்(ரலி) என்ற நபிகளாரின் தோழர், ஒரு முறை மதினா நகருக்கு அருகிலுள்ள (ரபதா) என்ற இடத்தில் மஃரூர் என்ற மனிதரை சந்திக்கிறார்,
அப்பொழது அவரின் மீதும், அவரின் வேலையாள் மீதும் ஒரு ஜோடி ஆடை உள்ளதை பார்த்து ஆச்சரியபடுகிறார்...
அபுதர்(ரலி) அவர்களிடம் சென்று எப்படி உங்களுக்கு கீழே இருக்கும் வேலையாளுக்கு சரிசமமாக ஆடை கொடுத்துள்ளீர்கள் என்று ஆச்சரியத்துடன் கேட்கிறார்?
அதற்கு அபுதர்(ரலி) பதில் சொல்கிறார்:
நான் ஒருமுறை ஒரு மனிதரை ஏசிவிட்டு,
அவரின் தாயையும் குறை கூறிவிட்டேன்...
அப்பொழது நபிகளார்:
அபுதர் அவர்களே அவரையும்,அவரின் தாயையும் குறை கூறி விட்டீரே!
நீங்கள் இன்னும் அறியாமை காலத்து பழக்கம் குடிகொன்ட மனிதராகவே இருக்கிறீர்கள் என்று சொன்னார்கள்,
உங்களின் அடிமைகள் உங்களின் சகோதரர்கள்,
இறைவன் தான் அவர்களை உங்களின் அதிகாரத்தின் கீழ் வைத்திருகிறான்,
எனவே உங்களின் சகோதரர்கள் உங்களுக்கு கீழ் இருந்தால்!
உங்கள் உணவுகளிலிருந்து அவர்களுக்கு உண்ணக்கொடுங்கள்,
நீங்கள் உடுத்துவதிலிருந்து உடுத்த கொடுங்கள்,
அவர்களுக்கு நீங்கள் சிரமமான பணியை கொடுத்தால், அதில் அவர்களுக்கு உதவி செய்யுங்கள்...
நபிகளார் சொன்ன இந்த வார்ததை அபுதர்(ரலி)யை மிகவும் பாதிக்க செய்துவிட்டது...
அன்றைய காலத்தில் மனிதனை மனிதனாக பார்க்கமாட்டார்கள்,
உயர்ந்த குலத்தை சார்ந்தவர்கள் கருப்பின மக்களை அடிமைகளாக வைத்திருந்த காலம்,
அடிமை வம்சத்தில் பிறந்தாள் மனிதன் என்ற தகுதியை குழிதோன்டி புதைத்துவிட வேண்டும்!
அவனுடை உணர்வுகள், ஆசாபாசங்கள்,
அத்தனையும் கானல்நீராக மாறிவிடும்...
மேலாடை, கீழாடை என்பது அவர்களுக்கு கிடையாது,
வெறும் ஒரு சிரிய துன்டு மட்டுமே அவர்களின் ஆடை,
அதையும் அவர்களின் மறைவான உறுப்பை மறைக்க மட்டுமே!
உயர்குலத்தினருக்கு குடை பிடித்துகொன்டும், அவர்களின் எல்லா வேலைகளையும் இவர்கள் தான் செய்ய வேண்டும்...
மாட்டைவிட அதிகமாக வேலை வாங்குவார்கள்...
கூழி கிடையாது, நல்ல உணவு கிடையாது, ஆடை கிடையாது, திருமணம் கிடையாது, ஆசாபாசங்கள் கிடையாது, அடிமை வம்சத்தில் பிறந்த ஒரே காரணத்திற்காக அன்றைய உயர்குலத்தினர் அவர்களை செய்த சித்ரவதை கொஞ்சம் நஞ்மல்ல....!
அப்படியாபட்ட சமூகத்தில் சீர்த்திருத்தம் செய்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள்...
இதில் எங்கே உள்ளது?
தீவிரவாதம்?
உலகில் யாரும் செய்து காட்ட முடியாத சீர்திருத்தத்தை நபிகளார் செய்து காட்டியள்ளார்கள்...
அதனால் தான் அபுதர்(ரலி) தன்னுடைய அடிமையை பணியாளக மாற்றி தான் உடுத்தியது போலவே தன்னுடைய பணியாளுக்கும் உடுத்த கொடுத்தேன் என்று பதில் சொன்னார்...
இது போல் ஆயிரக்கணக்கான மனிதநேய சம்பவங்கள் நபிகளாரின் வாழ்கையில் நடந்துள்ளது...
மனிதநேய செயலை தூண்டும் குர்ஆன் வசனம்:
إِنَّ الْمُصَّدِّقِينَ وَالْمُصَّدِّقَاتِ وَأَقْرَضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعَفُ لَهُمْ وَلَهُمْ أَجْرٌ كَرِيمٌ
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும், அல்லாஹ்வுக்கு அழகிய கடன் கொடுத்தோருக்கும் பன்மடங்காகக் கொடுக்கப்படும். அவர்களுக்கு மதிப்புமிக்க கூலி உண்டு.
திருக்குர்ஆன் 57:18
தர்மம் செய்யும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் மறுமை வாழ்கையில் மகத்தான கூழி உள்ளதாக இறைவன் இந்த வசனத்தில் சுட்டி காடுகிறான்...
ஒருவேளை தீவிரவாத செயலை போதிப்பதாக இருந்தால்!
ஏன் உலகில் சிறந்த காரியமான தர்மத்தை செய்ய வேண்டும் என்று சொல்கிறது?
உங்கள் வாதப்படி பணத்தை வைத்து வெடிகுண்டுகள் வாங்கவும்,
அணு ஆயுதங்கள் வாங்கவும்,
போர் ஆயுதங்கள் வாங்கவும் தானே பயன்படுத்த வேண்டும்...?
இவைகள் எதற்கும் சம்மந்தமே இல்லாத "தர்மம்" செய்யுங்கள் என்று ஏன் குர்ஆனில் சொல்ல வேண்டும்...?
தீவிரவாத செயலை போதிக்கின்றது குர்ஆன் என்று சொல்பவர்கள்!
இந்த தர்ம சிந்தனை வசனத்திற்கு என்ன பதில் சொல்லப்போகிறீர்கள்?
தர்மம் யாருக்கு பயன் அளிக்கும்?
ஏழைகள்,அனாதைகள், யாசிப்பவர்கள், வறுமையில் உள்ளவர்கள், இப்படி பலநிலையில் உள்ளவர்களுக்கு பயனளிக்கும்...
அவர்களுக்கு உங்கள் பொருளாதாரத்தை தர்மமாக கொடுங்கள் என்று சொல்கிறது!
அதுமட்டுமல்லாமல் தர்மம் செய்யாதவர்களை எச்சரிகையும் செய்கிறது குர்ஆன்:
وَأَنفِقُوا مِن مَّا رَزَقْنَاكُم مِّن قَبْلِ أَن يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَىٰ أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُن مِّنَ الصَّالِحِينَ
உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து நல்வழியில் செலவிடுங்கள்! இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே! என்று அப்போது மனிதன் கூறுவான்.
திருக்குர்ஆன் 63:10
இந்த வசனத்தில் தெளிவாக சொல்லப்பட்டுள்ளது...
மரணம் வருவதற்கு முன் நல்லவழியில் செலவு செய்யுங்கள் என்று,
நல்லவழி என்பதின் அளவுகோள் என்ன?
தீமையான காரியங்களை தவிற்தால் அத்தனையும் நல்லவழி தான்...
உறவினர்களுக்கு உதவி செய்வது,
கடனில் யாராவது சிரமத்தில் இருந்தால் அவர்களை அதிலிருந்து மீட்டு எடுப்பது,
உணவுக்கு வழியில்லாதவர்கள்,
ஊனமுற்றவர்கள்,
கனவனை இழந்தவர்கள்,
மருத்துவ உதவி, கல்வியுதவி...
இப்படி இவர்களுக்கு உதவி செய்வது எல்லாமே நல்லவழியில் செலவு செய்வது தான்...
இஸ்லாமிய சமுதாயம் இதை வெறும் வாய்வார்தகைளால் சொல்லவில்லை..
நடைமுறைப்படுத்திகொன்டுள்ளது...
அப்படி தர்மம் செய்யாமல் மரணித்துவிட்டான் என்றால்!
அது அவனுடைய மறுமை வாழ்கையை நாசம் செய்யக்கூடிய அளவிற்கு அவனுக்கு எதிராக மாறிவிடும்...
தர்மம் செய்யாமல் மரணிப்பவன், அதனால் அவனுக்கு ஏற்படும் தீங்கு இவைகள் கடுமையாக இருப்பததால்தான்...
இறைவா எனக்கு கொஞ்ச நாள் அவகாசம் கொடுத்திருந்தால் தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே! என்று சொல்கிறான்..
மறுமை வாழ்கை தர்மம் செய்யாதவனுக்கு சிரமமாக ஆகுமென்றால்!
இந்த தர்மம் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்று இஸ்லாம் சொல்கிறது.
இதில் மனிதநேயம் உள்ளதா?
இல்லை தீவிரவாதம் உள்ளதா?
தீவிரவாத்தை போதிக்கக்கூடிய வேதத்தில் ஏன் மனிதநேய செயல் சொல்ல வேண்டும்?
யாராவது எப்படியாவது அழிந்து போங்க என்றுதானே! சொல்ல வேண்டும்...
தர்மம் செய்யவில்லை என்றால்! இஸ்லாம் கண்டிக்கும் அளவிற்கு யாரும் அதை கண்டிக்கவில்லை...!
தர்மம்,ஜகாத் அது ஏழைகளின் உரிமை அதை கட்டாயம் ஒரு முஸ்லிமாக இருப்பவன் கொடுத்தே ஆக வேண்டும்...
சொத்தில் 2.5% பங்கை ஏழைகளுக்கு கட்டாயம் கொடுக்க வேண்டும்.
இஸ்லாத்தின் ஐந்து கடமைகளில் ஒன்று ஜகாத் என்னும் 2.5 பணம்...
அதை 8 நிலைகளில் உள்ளவர்களுக்கு கட்டாயம் பிரித்து கொடுக்க வேண்டும்...
8 நிலையில் ஒன்று முஸ்லிம் அல்லாதவர்கள்,
அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் சொல்கிறது...
இது மனிதநேயத்தை தூண்டுகிறதா?
இல்லை தீவிரவாத்தை தூண்டுகிறதா?
அறிவுள்ள யாரும் இது தீவிரவாத செயல் என்று சொல்லமாட்டார்கள்...
இது போன்று அடிக்கிகொன்டே போகலாம்.
இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கவில்லை மாறக அன்பையும்,
கருனையையும் போதிக்கின்றது என்பதற்கான நபிகளாரின் வரலாற்றிலிருந்து மேலும் ஒரு சான்று...
பெற்றோரிடம் ஒரு மனிதன் எப்படி நடக்க வேண்டும் என்ற அறிவுரை:
ஒரு மனிதர் நபிகளாரிடம் வந்து நான் அழகிய முறையில் பேசுவதற்கு தகுதியுள்ளவர் யார் என்று கேட்கிறார்?
அதற்கு நபிகளார் உன்னுடைய தாய் என்கிறார்கள்,
பிறகு யார் என்று அந்த மனிதர் கேட்கிறார்?
மீன்டும் நபிகளார் சொல்கிறார் உன் தாய்...
பிறகு மீன்டும் அந்த மனிதர் கேட்கிறார்?
நபிகளார் உன் தாய் என்கிறார்..
பிறகும் அந்த மனிதர் கேட்கிறார் யார் என்று?
நபிகளார் சொல்கிறார் உன்னுடைய தந்தை என்று...
தாயை உயர்வாக மதிக்கப்படவேண்டும் என்று சொல்லாத மதங்களே இருக்கமுடியாது!
இஸ்லாமும் அந்த பந்தத்தை குறைவைக்காமல்,
உயர்த்தியே பேசுகிறது...
இவர்கள் சொல்வது போல இஸ்லாம் தீவிரவாத்தை போதிக்கின்றது என்றால்?
ஏன் தாயை மதிக்கவேண்டும்,
அவரிடத்தில் அன்பாக நடக்க வேண்டும் என்ற அறிவுரையை சொல்ல வேண்டும்???
தீவிரவாதத்திற்கும் அன்பிற்கும் சம்மந்தமே இல்லையே?
தீவிரவாதிகளின் கொள்கை என்ன?
தாய்,தந்தை உறவு அன்பு, பாசம் உணர்வு குடும்பம் இவையெல்லாமே தூக்கி எரிந்து...
அவன் சார்ந்த கொள்கைக்காக உயிரையும்விட தயங்கக்கூடாது இதுதான் தீவரவாதிகளின் அளவுகோள்..
அவனிடம் அன்பும்,கருனையும் இல்லாததால் தானே தீவிரவாதியாக மாறுகிறான்!
குர்ஆன் தீவிரவாத்தை போதிக்கின்றது என்றால்?
குர்ஆன் ஏன் பெற்றோரை உயர்வாக பேசவேண்டும்?
குர்ஆனின் இந்த வசனத்தை பாருங்கள்:
என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் தாய் தந்தை ஆகிய அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன் 17:23
இந்தியாவில் முதியோர் இல்லங்களில் முதியோர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகறிக்கிறது என்று புள்ளிவிவரம் சொல்கிறது!
முதியோர் இல்லங்களில் இருப்பவர்கள் யார்?
பிள்ளைகளால் கைவிடப்பட்டவர்கள்...
சமூக ஆர்வலர்கள்,
முதியோர் இல்லங்களை நடத்தககூடியவர்கள் சொல்கிறார்கள்:
பெற்றோர்களை கைவிடக்கூடியவர்கள் மனித மிருகங்கள்,
பெற்றோரை அநாதையாக நடுரோட்டில் விடுபவர்கள் காட்டுமிரான்டிகள் என்றெல்லாம் சொல்கிறார்கள்...
எத்தனை வீடியோக்களில் தாய்,தந்தையை அடித்து துன்புறுத்தும் காட்சிகளை பார்கிறோம்,?
இப்படிப்பட்ட காலத்தில் பெற்றோர் விஷயத்தில் கவணமாக இருக்க வேண்டும் என்று குர்ஆன் சொல்கிறது...
தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள்.
திருக்குர்ஆன் 46:15
இந்த அறிவுரை மனிதகுலத்திற்கு தேவையான ஒன்றாக இருக்கிறதா? இல்லையா?
பெற்றோரை பேணி நடக்கவேண்டும்,
பெற்றோருக்கு நன்மை செய்ய வேண்டும் அவர்களிடம் பணிவாக நடக்க வேண்டும் என்றெல்லாம் பெற்றோர் சம்மந்தமாக சொல்லும் அறிவுரைகள் ஒருவனை மனிதனாக மாற்றுமா?
இல்லை தீவிரவாதியாக மாற்றுமா?
நடுநிலை கண்ணோட்டத்துடன் நீங்களே சிந்தித்து பாருங்கள்!
ஆக்கம்
✍🏻 அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment