இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் அனாச்சாரங்கள்

சுன்னத் ஜமாஅத் நிர்வாகிகளே!
தப்லிக் ஜமாஅத் நிர்வாகிகளே!
உலமா சபை நிர்வாகிகளே!
ஷரியத் பாதுகாப்பு பேரவை நிர்வாகிகளே!
ஆலிம்களே! அறிஞர்களே!
நடுநிலை அரசியல்வாதிகளே!
தவ்ஹீத் ஜமாஅத்தை தவிற ஒட்டுமொத்த இஸ்லாமிய அமைப்புகளே!

உங்கள் அனைவருக்கும் இந்த கேள்வி...

தமிழகத்தில் தவ்ஹீத் ஜமாஅத் வந்தபிறகு தான் பிரிவினை வந்தது என்று பிரச்சாரம் செய்தீர்கள்,

தவ்ஹீத் ஜமாஅத் வந்த பிறகு தான் ஒற்றுமை உடைந்தது என்று கொந்தளித்தீர்கள்,

தவ்ஹீத் ஜமாஅத் வந்தபிறகு தான் தமிழகத்தில் தீமைகள் அதிகமானது என்று சொன்னீர்கள்,

தவ்ஹீத் ஜமாஅத் வந்தபிறகு தான் குர்ஆன்,ஹதீஸ் கேளியாக்கப்பட்டது என்று பிரச்சாரம் செய்தீர்கள்,

தவ்ஹீத் ஜமாஅத் வந்த பிறகு தான் இஸ்லாமிய சமூகத்தில் தீமை அதிகமானது என்று சொன்னீர்கள்,

இன்னும் ஏராளமான அவதூறுகளை அள்ளி வீசினீர்கள்!

தவ்ஹீத் ஜமாஅத் வந்த பிறகு,
சமூகத்தில் என்ன மாற்றம் நிகழ்ந்ததது என்று நடுநிலையாளர்களுக்கு தெறியும்....

தவ்ஹீத் ஜமாஅத் செய்த ஏகத்துவ பிரச்சாரத்தின் விளைவு என்ன தெறியுமா?

சாரயம்,சிகரெட்,போதை சினிமா நடிகர்களுக்கு  பின்னால் சென்றவர்களை...

தொழுகை, நபிகளாரின் நற்பண்புகள்,மார்க அறிவு, சமுதாய சிந்தனை, சமூக அக்கறை, மார்க அறிவை கொன்டு சீர்திருத்தம் செய்ததது...

10 வயது சிறுவனை ஏகத்துவத்தை பேச வைத்தது!

பொதுமக்கள் கடந்து போகக்கூடிய சாலையில் 10 வயது சிறுவன்,
இறந்தவர்களை வணங்கக்கூடாது,
அவர்களை படைத்த இறைவனை வணங்க வேண்டும் என்று "தர்ஹா வழிபாட்டுக்கு" சமாதி கட்டும் வகையில் கையில் மைக்கை பிடித்து பேச வைத்தது!

ஆனால்! தர்ஹா என்ற பெயரில்.... கன்னியமான வார்த்தையான "பிஸ்மில்லாஹ்" படைத்த இறைவன் பெயரை கொச்சைப்படுத்தும் வகையில்....

"திண்டுக்கல் ரீட்டா" நடன நிகழ்சி என்று கூத்தடித்துள்ளார்களே....!

யார் சமுதாயத்தை நாசமாக்கியது?

10வயது சிறுவனை ஏகத்துவ கொள்கையை பேச வைத்த தவ்ஹீத் ஜமாஅத்தா?

திண்டுக்கல் ரீட்டாவின் நடனத்தை அல்லாஹ்வின் பெயரால் ஆரம்பிக்கின்றோம் என்று சொன்ன இவர்களா?

தவ்ஹீத் ஜமாஅத்தின் பிரச்சாரத்தை ஒட்டுமொத்த அமைப்புகளும் சேர்ந்து முட்டுகட்டை வைக்க பாடுபட்டீர்களே!

துணிவு இருந்தால் இந்த கேவளத்தை தட்டிகேளுங்கள்..

அல்லாஹ்வை நோக்கி மக்களை அழைத்து நல்லறம் செய்து நான் முஸ்லிம் என்று கூறியவனை விட அழகிய சொல்லைக் கூறுபவன் யார்?
திருக்குர்ஆன்  41:33

இப்படிக்கு
✍🏻 அ.மன்சூர் வேலூர்

Comments