மனிதன் மண்ணில் படைக்கப்பட்டான் என்பதற்கான ஆதாரம்

ஏக இறைவனின் திருப்பெயரால்

மனிதன் மண்ணின் மூலம் படைக்கப்பட்டான், இதில் நமக்கு சில கேள்விகள் வரலாம்...!

அது எப்படி மண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டிருப்பான்?
அது எப்படி சாத்தியம்?

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பது விஞ்ஞான ரீதியான பிழை என்பதை நிறுப்பித்துள்ளேன்,

மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறான் என்பதை விஞ்ஞான ரீதியாக நிறுபித்துள்ளேன்,

மண்ணுடைய மூலக்கூறு மனிதனுடன் ஒன்றாக அமைந்துள்ளது என்பதே மிக பெரிய அத்தாட்சி...

அதிலும் நம்பிகை வரவில்லையென்றால்...

நடைமுறை சாத்தியங்களை வைத்து, நிறுபிக்க கடமைப்பட்டுள்ளேன்..

வானத்தில் பறக்கும் விமானம் மண்ணிலிருந்து உருவாகியது என்று சொன்னால், உங்களுடைய பதில் என்ன?

அது எப்படி மண்ணிலிருந்து உருவாகியிருக்க முடியும் என்ற கேள்வி வரும்!

அதன் உருவாக்கதை சொன்னால் 100% நம்பி தான் ஆக வேண்டும்...

ஏன் என்றால் விமான கண்டுப்பிடிப்பு எப்படி? என்பதை பாடமாக நடத்தப்படுகிறது,
அதன் விளக்கம் இன்று நமது கையில் உள்ளது.

விமானத்தின் மிக முக்கிய பாகம் அதன் இஞ்சின் (Engine)

இஞ்சின் மூலக்கூறு என்ன?
எங்கிருந்து எடுக்கப்பட்டது?

இஞ்சின் மேல் புறம் முதல் உள்ளே இருக்க கூடிய அனைத்து உதிரி பாகமும் மண்ணிலிருந்து பிரித்து எடுக்கப்பட்டஒரு உலோகம்(Matels).

அதே போல் இஞ்சின் ஆயில் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
மண்ணிலிருந்து..

பெட்ரோல் எங்கிருந்து எடுக்கப்பட்டது?
மண்ணிலிருந்து,

தகடு எங்கிருந்து எடுக்கப்பட்டது?
மண்ணிலிருந்து எடுக்கப்பட்டது,

இப்படி ஒவ்வொரு பொருளும் மண்ணிலிருந்து எடுக்கப்பட்டவை.

நாம் உபயோகிக்கும் அத்தனை பொருளும் மண்ணிலிருந்து வந்தவை,

அதை தனி தனியாக பிரித்து, இன்று மனிதன் பல பொருட்களாக பிரித்துள்ளான்..

விமானம் முதல் நாம் பயன்படுத்தும் செல்போன் வரை அனைத்தின் "மூல" கூறு மண்..

விமானம் மண்ணிலிருந்து உருவானது என்று சாதரணமாக சொல்லும்போது ஏற்றுக்கொள்ளாத நமது பகுத்தறிவு, அதன் உருவாக்கத்தை சொல்லும் போது ஏற்றுக்கொள்கிறது..!

மனிதனால் ஒரு பொருளை மண்ணிலிருந்து தயாரிக்க முடியும் என்றால்!
இறைவனால் மனிதனை மண்ணிலிருந்து படைக்க முடியாதா?

மனிதன் மன்னிலிருந்து படைக்கப்படான் என்று விஞ்ஞானம் வளராத காலத்தில் சொல்லும் போது அந்த மக்கள் ஏற்க்கவில்லை,
ஆனால் இன்று விஞ்ஞானரீதியாக மனிதன் மண்ணிலிருந்து தான் படைக்கப்பட்டுள்ளான் என்று நிறுபனம் ஆகியுள்ளது..

அதை ஏற்பது தான் சிறந்தது..

அதனால் தான் திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்று சொல்கிறோம்...

நாம் உண்ணக்கூடிய உணவுகள் எங்கிருந்து வருகிறது?

வகை கையான காய்கள்,
வகை வகையான பழங்கள்,
நெல்,முதல் கோதுமை வரை அனைத்தும் மண்ணிலிருந்து வருகிறது!

விதையை போடுகிறோம், அந்த விதை செடியாய், மரமாய் வருவதை கண்னெதிரே பார்க்கிறோம்...

ஒரே மண் அதில் எத்தனை வகையான உணவுகள் கிடைக்கின்றன!

நீங்கள் நினைக்கலாம் நாம் விதையை விதைக்கிறோம், அந்த விதை மூலம், காயாக,பழமாக,செடியாக,
மரமாக வருகிறது என்று.

அந்த விதை எங்கிருந்து வந்தது?
அதை முதன் முதலில் படைத்தவன் யார்?

அந்த விதைக்கு உயிர் கொடுத்தது யார்? உணவாக உருவாக கட்டளையிட்டது யார்?

إِنَّ اللَّهَ فَالِقُ الْحَبِّ وَالنَّوَىٰ ۖ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَمُخْرِجُ الْمَيِّتِ مِنَ الْحَيِّ ۚ ذَٰلِكُمُ اللَّهُ ۖ فَأَنَّىٰ تُؤْفَكُونَ

அல்லாஹ்வே விதைகளையும், கொட்டைகளையும் வெடித்து முளைக்கச் செய்பவன். உயிரற்றதிலிருந்து உயிருள்ளதை வெளிப்படுத்துகிறான். உயிருள்ளதிலிருந்து உயிரற்றதை வெளிப்படுத்துபவன். அவனே அல்லாஹ். எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?
திருக்குர்ஆன்  6:95

படைப்பாளன் ஒருவன் இல்லாமல் உலகில் எதுவும் இயங்காது!

அந்த படைப்பாளன் ஒவ்வொரு பொருளையும் மண்ணின் மூலமும், தண்ணீரின் மூலமும்  படைத்திருக்கிறான்...

எப்படி மண்ணின் மூலம் விதைகள் வெடித்து செடியாக, மரமாக வருவது சாத்தியமோ...!

அதே மண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டிருக்கிறான் என்பதும் சாத்தியமே..!

மேலும், திருக்குர்ஆன் சொல்கிறது:

وَلَقَدْ أَرْسَلْنَا رُسُلًا مِّن قَبْلِكَ مِنْهُم مَّن قَصَصْنَا عَلَيْكَ وَمِنْهُم مَّن لَّمْ نَقْصُصْ عَلَيْكَ ۗ وَمَا كَانَ لِرَسُولٍ أَن يَأْتِيَ بِآيَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ ۚ فَإِذَا جَاءَ أَمْرُ اللَّهِ قُضِيَ بِالْحَقِّ وَخَسِرَ هُنَالِكَ الْمُبْطِلُونَ
உமக்கு முன் பல தூதர்களை அனுப்பினோம். அவர்களில் சிலரைப் பற்றி உமக்குக் கூறியிருக்கிறோம். சிலரைப் பற்றி நாம் உமக்குக் கூறவில்லை. அல்லாஹ்வின் விருப்பப்படியே தவிர எந்த அற்புதத்தையும் கொண்டு வருவது எந்தத் தூதருக்கும் இல்லை.
எனவே அல்லாஹ்வின் கட்டளை வரும்போது நியாயமாகத் தீர்ப்பளிக்கப்படும். அப்போது வீணர்கள் நட்டமடைவார்கள்.
திருக்குர்ஆன்  40:78

(அல்லாஹ் என்ற அரபு வார்த்தைக்கு தமிழில் ஒரே இறைவன் என்று பொருள்)

இந்த வசனத்தில் இறைவன் எல்லா காலகட்டத்திலும்,எல்லா சமுதாயத்திற்க்கும் தன் தூதர்களை அனுப்பியுள்ளான் என்று சொல்லப்படுகிறது.

பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சமுதாய மக்களும் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்ற நம்பிகையில் இருந்தனர்..
அவர்கள் யார்?

மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்ற நம்பிக்கை இறுதி இறைத்தூதர் முகமது நபி(ஸல்) அவர்களுக்கு முன்னயே தென் ஆசியா நாடுகள், மத்திய கிழக்கு நாடுகள், ரோம பேரரசு, எகிப்து சாம்ராஜ்யம் என்று பறந்து விருந்திருந்த நாடுகளில் இறைவன் மண்ணிலிருந்து தான் மனிதனை படைத்தான் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.

மெசபடோமியா (Mesopotamia) Washukann Nineveh, Hatra, Assur, Nuzi, Palmyra,Mari, Sippar, Babylon, Kish, Nippur, Isin, Lagash, Uruk,Charax Spasinu and Ur (இப்பொழுது துருக்கி,சிரியா,ஈரான்,
ஈராக் போன்ற நாடுகளாக உள்ளது) கி.பி. 3100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இந்த இன மக்கள், சுமெரியன் மதம் இவர்களின் நம்பிக்கை படி மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதாகும்.

அந்த வழிதோன்றலில் வந்த என்கி(Enki) மற்றும் நிம்மா
(Ninmah) இன மக்கள் அவர்களின் நம்பிக்கையும் மனிதன் முதன் முதலில் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்பதாகும்,

கிரேக்கர்கள்(Greek)  என்றழைக்கப்படும் இன மக்கள் அவர்களின் நம்பிகையும் மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்படான் என்பதாகும்.

சீன பழங்குடி இன மக்கள், மனித இனம் மண்ணிலிருந்து வந்தது என்ற நம்பிக்கையில் இருந்தனர்,

பன்டைய எகிப்தியர்கள் மனித இனம் மண்ணிலிருந்து படைக்கப்பட்டது என்று நம்பி வந்தனர்,

இன்கா என்ற இனம், இந்த புராணத்தை எழுதிய விராக்கோசா மனித உயிரிணங்கள்  மண்ணிலிருந்து உருவாகியது என்று குறிப்பிட்டுள்ளார்,

லாவோடியன் நாட்டுப்புற மதத்தின்படி, மண் அல்லது களிமண்ணிலிருந்து மனிதர்கள் உருவாக்கப்பட்டார்கள் என்பதை அவர்களின் புராணங்களில் கதைகளாக உள்ளன,

ஆபிரிக்காவில், (யோபுர்) கலாச்சாரம் அவர்களின்  நம்பிகைபடி கடவுள் மனிதகுலத்தை களிமண்ணிலிருந்து படைத்தார் என்று சொல்லப்படுகிறது.

மாயன் தொன்மமானது, டெபூ மற்றும் குக்குல்கன் (குவெட்ஸால்கோல்ட்)  மண்ணிலிருந்து முதல் மனிதர்களை உருவாக்கியது எனக் கூறுப்படுகிறது,

மாவுரி இனமக்கள் (Mahuta), களிமண் மூலம்  முதல் பெண் உருவாக்கப்பட்டது என அந்த மக்கள் நம்புகிறார்கள்,

கிருஸ்து பிறப்புக்கு(கி.பி) பின் 2018ல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்,
கிருஸ்து பிறப்புக்கு(கி.மு) முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் வாழ்ந்த மக்கள் மனித இனம் மண்ணிலிருந்து தான் தோன்றினார்கள் என்ற நம்பிக்கை இருந்து வருகின்றது.

இப்படி எல்லா கால கட்டத்திலும் வாழ்ந்த மக்கள்,மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்ற நம்பிகையில் இருந்தார்கள் என்றால்!
ஏக இறைவன் இறுதி இறைவேதம் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட செய்தியை ஏன் முன்னோர்களுக்கு சொல்லியிருக்க கூடாது?

يَا بَنِي آدَمَ إِمَّا يَأْتِيَنَّكُمْ رُسُلٌ مِّنكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي ۙ فَمَنِ اتَّقَىٰ وَأَصْلَحَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ
ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும் போது என்னை அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.
திருக்குர்ஆன்  7:35

இந்த வசனத்தில் يَا بَنِي آدَمَ ஆதமுடைய மக்களே என்று இறைவன் அழைக்கிறான்! இது ஒட்டுமொத்த மனித இனத்தை குறிக்கிறது!
மனித இனம் முழுவதற்க்கும் பல தூதர்கள் வந்துள்ளார்கள் அவர்கள் வழியே மனித படைப்பின் ரகசியங்கள் சொல்லப்பட்டுள்ளது..

அதனால் தான் அந்த மக்களால் மிக துள்ளியமாக மனிதன் மண்ணிலிருந்து படைக்கப்பட்டான் என்று சொல்லமுடிகிறது.

மனிதன் மண்ணிலிருந்து படைக்கபட்டான் என்ற பொதுவான நம்பிக்கை எல்லா காலக்கட்டங்களிலும் வாழ்ந்த மக்களிடம் இருந்து வருகின்றது,

தமிழ் புறாணங்களில் உள்ள இந்துமத நம்பிக்கையின் படி பஞ்ச பூதங்களின் கொள்கையும் இதில் அடங்கும்.

தமிழ் புறாணங்களில் மனிதஉடல் அமைப்பு சம்மந்தமாக நிறைய விளக்கங்கள் சித்தர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள், இலக்கிய மேதகைள், வரலாற்று ஆசிரியர்கள் போன்றவர்களால் கொடுக்கப்பட்டுள்ளது, இதில் எனது ஆய்வு சம்மந்தமாக சில தகவல்கள் மட்டும் மேற்கோள் காட்டுகிறேன்.

சித்த மருத்துவ கோட்பாடின் படி சித்தர்களின் கருத்து:

"அண்டத்தி லுள்ளதே பிண்டம்,
பிண்டத்தி லுள்ளதே அண்டம்,
அண்டமும் பிண்டமும் ஒன்றே,
அறிந்துதான் பார்க்கும் போதே"

இதில் "அண்ணடம்" எனும் சொல் பிரபஞ்சத்தை(Universal)குறிக்கிறது,
"பிண்டம்" எனும் சொல் மனித உடலமைப்பை(Human body) குறிக்கிறது.

அதாவது "அண்டமான" பிரபஞ்சம் பஞ்சபூத கொள்கையின்படி நீர்,நிலம்,நெருப்பு,ஆகாயம்,காற்று இவைகளால் சூழ்ந்துள்ளது என்பதாகும்,

இதே தத்துவம் "பிண்டமான" மனிதனுக்கும் உள்ளது என்பதாகும்..!

உடல் உறுப்புகளில் பஞ்சபூத கூறுகள்:

1.நிலம்: எழும்பு,தோல்,இறைச்சி,
நரம்பு,மயிர்
2.நீர்: உதிரம்,மஞ்சை,உமிழ் நீர்,நிணம்,விந்து
3.தீ:பயம்,கோபம்,அகங்காரம்,சோம்பல்,உறக்கம்
4.காற்று: போதல்,வருதல்,
நோய்படுதல்,ஒடுங்குதல்,தொடுதல்
5.ஆசை,உட்பகை,மோகம்,வஞ்சனை,
மதம்

பிண்டமான மனித உடல் பற்றிய பஞ்சபூத்திற்கான விளக்கம் இது,

பஞ்சபூத கூற்றின் ஒன்றான நிலம் அதாவது "மண்" மனித உடல் அமைப்பை மண்ணுடன் ஒப்பிட்டு கூறப்பட்டுள்ளது,

எழும்பு: மனித உடலில் உள்ள எழும்பை குறிக்கிறது,
தோல்: மனிதனுடைய தோலை குறிக்கிறது,
இறைச்சி: மனிதனுடைய சதையை குறிக்கிறது
நரம்பு: மனிதனுடைய நரம்மை குறிக்கிறது
மயிர்: மனிதனுடைய தலை,கை,கால்,உடல் மேலே உள்ள முடியை குறிக்கிறது இவைகள் அனைத்தும் மண்ணுடன் சேர்ந்தவை என்பதாகும்.

பண்டைய தமிழ் புறாணங்களில் மனிதன் மண்ணிலிருந்து தோன்றியுள்ளான் என்பதை எடுத்துக்காட்டுகிறது..

மருத்துவ விஞ்ஞானம் மனித உடல் அமைப்பில் "மண்" உள்ளது என்று கண்டுப்படித்துள்ளனர்.

மண்ணிலிருந்து உருவாகியவன் மனிதன் என்பதை நிறுபித்துள்ளனர்..

இறுதி இறைவேதம் திருக்குர்ஆன் ஆழமான உண்மையை பதிவு செய்துள்ளது:

الَّذِي أَحْسَنَ كُلَّ شَيْءٍ خَلَقَهُ ۖ وَبَدَأَ خَلْقَ الْإِنسَانِ مِن طِينٍ
அவன் ஒவ்வொரு பொருளின் படைப்பையும் அழகுபடுத்தினான். மனிதனின் படைப்பைக் களிமண்ணிலிருந்து துவக்கினான்.
திருக்குர்ஆன்  32:7

இந்த நம்பிக்கை எப்பொழது மாறியது என்றால்? டார்வீன் காலத்திற்க்கு பிறகு.

குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்ற நம்பிக்கை அப்பொழது தான் வேகமாக பரவுகிறது...

மண்ணிலிருந்து மனிதன் படைக்கப்பட்டான் என்ற சான்றை,

விஞ்ஞான ரீதியாகவும்,
வரலாற்று ரீதியாகவும்,
சமயங்கள் ரீதியாகவும்,
மதங்கள் ரீதியாகவும்,
நடைமுறை சாத்தியகூறு ரீதியாகவும் பல ஆதாரங்களுடன் நிறுபித்துள்ளேன்.

அடுத்ததாக களிமண்ணால் படைக்கப்பட்ட அந்த முதல் மனிதர் யார்?

அதற்க்கான ஆதாரம் என்ன?

எப்படி அவர் தான் முதல் மனிதர் என்று சொல்ல முடியும்? என்ற அனைத்து கேள்விகளுக்கும் ஆதாரப்பூர்வமான தகவல்களை பார்ப்போம்,

முதல் மனிதர் ஆதம்(அலை) என்று திருக்குர்ஆன் சொல்கிறது,

திருக்குர்ஆன் சொல்லும் ஆதம்(அலை),
அவர்கள் தான் முதல் மனிதர் என்று நிறுபிக்க வேண்டும்:

அதற்கான ஆதாரம்:

إِنَّ مَثَلَ عِيسَىٰ عِندَ اللَّهِ كَمَثَلِ آدَمَ ۖ خَلَقَهُ مِن تُرَابٍ ثُمَّ قَالَ لَهُ كُن فَيَكُونُ

அல்லாஹ்விடம் ஈஸாவுக்கு(இயேசு) உதாரணம் ஆதம் ஆவார்.
அவரை மண்ணால் படைத்து "ஆகு' என்று அவரிடம் கூறினான். உடனே அவர் ஆகி விட்டார்.
திருக்குர்ஆன்  3:59

இந்த வசனத்தில் இறைவன் ஆதம்(அலை) அவர்களை இறைத்தூதர் இயேசு(ஈஸா அலை) அவர்களுக்கு உதாரணம் சொல்கிறான்,

இஸ்லாமிய நம்பிகைபடி இயேசு(ஈஸாஅலை) அவர்கள் எந்த ஓர் ஆணின் துணையில்லாமல் பிறந்தவர், அவர் பிறப்பு ஒரு அற்புதம் அவரின் தாய் மேரி(மர்யம்அலை) அவர்களுக்கு இறைவன் வழங்கிய அருட்கொடை என்று ஆழமாக நம்புகிறோம்,

இயேசு(ஈஸாஅலை) அவர்களின் பிறப்பு எப்படி எந்த ஆணின் துணை இல்லமால் பிறந்தது ஒரு அற்புதமோ!
அதே போல் ஆதம்(அலை) அவர்களின் பிறப்பும் ஒரு அற்புதம் ஏனெ்றால் இறைவன் அவரை எந்த தாயும்,தந்தையின் மூலமும் இல்லாமல், முதன் முதலாக படைக்கப்பட்டார்..

இந்த அற்புத நிகழ்வை தான், இந்த வசனம் இருவரிடமும் ஒரு உதாரணம் உள்ளது என்கின்றது.

இந்த வசனத்தின் மூலம் ஆதம்(அலை) அவர்கள் தான் முதல் மனிதர் என்று சொல்லப்படுகிறது,

மற்றொரு ஆதாரம்:

وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا

ஆதமுக்குப் பணியுங்கள்! என்று வானவர்களுக்கு நாம் கூறிய போது இப்லீஸைத் தவிர அனைவரும் பணிந்தனர். களிமண்ணால் நீ படைத்தவருக்குப் பணிவேனா? என்று அவன் கேட்டான்.
திருக்குர்ஆன்  17:61

இஸ்லாமிய நம்பிகைப்படி நெருப்பால் படைக்கப்பட்ட ஜின் என்ற மற்றொரு இனம் அந்த இனத்தில் உள்ளவன் தான் இவனை தான் முஸ்லிம்கள் (ஷைத்தான், தீயசக்தி, மனிதர்களை தவறான வழியில் செலுத்த கூடியவன், மனிதர்களின் உள்ளத்தில் தீய விஷயங்களை போடுபவன்,இறைவனுக்கு நிகராக கற்பனையை உருவாக்க சொல்பவன், ஆசை வார்த்தைகள் கூறுபவன், இப்படி பல்வேறு பெயர்களை கொன்டு அழைக்கப்படுகிறது.)
இறைவனுக்கும் இப்லீஸ் என்பவனுக்கும் நடந்த உரையாடலில் இறைவன் ஆதமுக்கு பணி என்று சொல்லும் போது, இப்லீஸ் களிமண்ணிலிருந்து படைத்தவனுக்கு பணியமாட்டேன் என்று ஆனவம் கொள்கிறான்...

இதிலிருந்து திருக்குர்ஆன் கூற்றுப்படி களிமண்ணால் படைத்த முதல் மனிதர் ஆதம்(அலை) ஆவார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது,

ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments