லைலத்துல் கத்ர் இரவை தூக்கத்தில் தொலைத்த சமுதாயமே!
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அன்புள்ள சகோதர,சகோதரிகளே அனைவரும் அவசியம் படியுங்கள்.
சவுதியில் உள்ள ஒரு சில செல்வந்தர்கள் ரமலான் முதல் நோன்பு முதல் ரமலான் மாதம் முழுவதும் வரை
பொதுமக்கள் நோன்பு திறப்பதற்காக இப்தார் ஏற்பாடுகளை செய்வார்கள்,
இப்தார் முடிந்த பிறகு சிலர் அன்பளிப்பாக வந்தவர்களுக்கு ரியால்களும் தருவார்கள்,
இதன் காரணமாக இந்த பணத்தை வாங்குவதற்கு மக்கள் அந்த செல்வந்தர்களின் வீடுகளுக்கு செல்வார்கள்!
இன்னும் சிலர் வெறும் நோன்புக்கான உணவுகளை மட்டும் ஏற்பாடு செய்வார்கள், அங்கு சொற்ப்பமான மக்கள் தவிற அதிகம் செல்வதில்லை!
பொருளாதாரம் கொடுக்கும் இடத்திற்க்கு மட்டும் மக்கள் கூட்டம் அலை மோதுகிறது,
வெறும் இப்தார் உணவு கொடுக்கும் இடத்தில் மக்கள் கூட்டம் குறைவாக உள்ளது!
ஏன் இந்த வித்தியாசம்?
இதற்கான காரணம் நம் அனைவருக்குமே தெறிந்த ஒன்று...
மனிதனுடைய உள்ளம் அப்படிதான் உருவாக்கப்பட்டுள்ளது, எந்த ஒரு பொருள் விலைமதிக்கதக்கதாக உள்ளதோ, அதை நோக்கிதான் நம் உள்ளம் ஈர்க்கப்படும்!
ரமலான் மாதங்களில் சவுதியில் பள்ளிவாசல்களிலும், சாலைகளிலும், வீடுகளிலும், கடைகளிலும் உணவுகள் பொங்கி வழியும்,
உயர்ரக உணவுகளைக்கூட சாப்பிட முடியாத அளவிற்கு அல்லாஹ்வின் அருள் நிறைந்து இருக்கும்!
அதனால்தான் உணவா? பணமா? என்று வரும்பொழுது உள்ளம் பணத்தை தேர்வு செய்கிறது.
வெறும் அற்ப உலக வாழ்க்கையில் நாம் நமக்கு தேவையான மிகச்சிறந்த ஒன்றை தேர்வு செய்கிறோம்!
கண்ணெதிரே அதன் பலன் இருப்பதால், உடனடியாக கையில் கிடைப்பதால் அதை எப்படியாவது அடைந்தாக வேண்டும் என்று போட்டி போட்டு அடைகிறோம்!
இந்த ஒரு முயற்சி ஏன் அமல்களின் பக்கம் செல்ல மறுக்கிறது?
அல்லாஹ் குர்ஆனில் ஒரு அழகான மறைவான தத்துவத்தை சொல்லிகாட்டுகிறான், நம்பிக்கை கொன்ட அந்த மக்களைப்பற்றி, அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்றால்?
மறைவானதை நம்புவார்கள்!(2:3)
மறைவானவை என்றால் என்ன?
மறைவானவற்றை நம்புவதன் அளவுகோல் என்ன?
மரணத்திற்கு பிறகு உள்ள ஒரு வாழ்கை,
சொர்கம் அதை அடைய முயற்சி செய்வது...
மறுமை வாழ்கையை முழுமையாக ஒரு மனிதன் நம்பினால் மட்டுமே மறைவான தத்துவத்தை உணர முடியும்!
சொர்கம் என்னும் பேரின்பத்திற்குள் நுழைய யாரலும் எளிமையாக முடியாது,
அதை அடைய உலகில் படைத்த இறைவனை மட்டும் வணங்கியவர்களாகவும், நல்லவர்களாகவும், நன்மைகளை அதிகம் செய்தவர்களாகவும், தீமைகளிலிருந்தும், பாவங்களிலிருந்தும் தன்னை பாதுகாத்தவர்களாகவும் உலக வாழ்கையை அதிகமான அமல்களால் தன்னை தானே தூய்மைப்படுத்தியவர்களாக இருந்தால் மட்டுமே அடைய முடியும்!
மனிதர்கள் அனைவரும் பாவம் செய்யக்கூடியவர்கள்,
அவர்கள் செய்யும் நன்மைகளைவிட பாவங்கள்தான் அதிகம்...
படைத்த ரப்புலாலமினுடைய சொர்கத்திற்குள் பாவங்களை அதிகம் செய்த நிலையில் நுழைய முடியாது,
யாருடைய நன்மையின் எடை கனமாக இருக்கிறதோ! அவர்களால் மட்டுமே எளிதாக நுழைய முடியும்!
மனிதன் அதிகம் நன்மைகளை சம்பாதித்து,
அவனுடைய பவங்களை அழிக்க வேண்டும் என்பது இறைவனின் ஏற்பாடு....
அதற்காகதான் இறைவன் மன்னிப்பையும்,நன்மையின் வாசல்களையும் பல்வேறு வழிகளில் ஏராளமாக திறந்து வைத்து அனைவருக்கும் வாய்பு தருகிறான்...
அப்படிப்பட்ட மிகச்சிறந்த வாய்புகளில் ஒன்றுதான் புனித ரமலான் மாதமும் அந்த மாதத்தில் உள்ள கடைசி பத்து இரவுகளில் குறிப்பாக ஒற்றைப்படை இரவான "லைலத்துல் கத்ர்" இரவுகளாகும்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களடைய வாழ்கை ரமலானுடைய மாதத்தில் எப்படி இருந்துள்ளது என்பதை நாம் அவசியம் தெறிந்துகொள்ள வேண்டும்:
ரமலானுடைய கடைசி பத்து நாட்கள் வந்தால் தன் இல்லறத் தொடர்புகளை நிறுத்திகொன்டு அந்த இரவுகளை நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வை தொழுது உயிர்பிப்பார்களாம்...
அல்லாஹ்வை வணங்கச்சொல்லி தன்னுடைய குடும்பத்தாரையும் எழுப்புவார்களாம்...
(இந்த செய்தி புகாரி-2024 இல் உள்ளது)
இரவுகளை உயிர்பிப்பது என்றால் என்ன?எப்படி?
ஊரே உலகத்தை மறந்து உறக்கத்தில் அடங்கியிருக்கும்!
அப்படிப்பட்ட தருணத்தில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் பகல் நேரங்களில் எப்படி உற்சாகமாக இருப்பார்களோ! இறைவனை எப்படி வணங்குவார்களோ!
பகலில் எப்படி இறைவனை திக்ரு செய்வார்களோ!
பகலில் எப்படி குர்ஆனை ஓதுவார்களோ!
அதைவிட கூடுதலாக ரமலானுடை கடைசி பத்து இரவுகளை வணக்க வழிபாடுகளால், அமல்களால், இரவை பகல் போல் உயிர்ப்பித்து மாற்றியுள்ளார்கள்.
தன்னுடைய குடும்பத்தாரையும், வீட்டு பெண்களையும் இப்படி செய்ய சொல்லி பணித்துள்ளார்கள்!
ஏன் தெறியுமா?
அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்:
மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை
விடச் சிறந்தது.
திருக்குர்ஆன் 97:3
நாம் லைலத்துல் கத்ருடைய இரவில் செய்யும் அமல்கள் ஏனைய நாளில் செய்யும் அமல்களைவிடச் சிறந்தது...
நாம் செய்த முந்தைய பாவங்கள் லைலத்துல் கத்ருடைய இரவில் மன்னிக்கப்படுகிறது!
வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர்.
திருக்குர்ஆன் 97:4
வானவர்களின் படை மற்றும் ஜிப்ரில்(அலை) அவர்கள் அல்லாஹ்வின் கட்டளைப்படி சகல காரியத்துடன் வருகிறார்கள்!
ஸலாம்! இது வைகறை வரை இருக்கும்.
திருக்குர்ஆன் 97:5
ஃபஜருடைய நேரம் வரை இறைவனுடை சாந்தியும், சமாதானும், கருனையும், அன்பும், அருளும், மன்னிப்பும் இருக்கும்...
வானவர்களின் படை நாம் செய்யும் அமல்களுக்கு நன்மைகளை வாரி வாரி வைகறை வரை அள்ளி வீசி கொன்டே உள்ளார்கள்!(சுபஹானல்லாஹ்)
அதனால்தான் நபி(ஸல்) ஒற்றைப்படை இரவுகளில் ஒரு நொடிக்கூட வீணடிக்காமல் வணக்கவழிபாடுகளில் நேரத்தை கழித்துள்ளார்கள்.
இப்படிப்பட்ட எளிமையான நன்மைகளை கொள்ளையடிக்க முடியாதவர்கள் உண்மையில் துர்பாக்கியசாளிகள்!
நான் ஆரம்பத்தில் சொன்ன நோன்பு சம்பவத்தை இதனுடன் ஒப்பிட்டு பாருங்கள்.
உணவைவிட பணம் தருகிறார்கள் என்றவுடன்! முந்தியடித்து கிளம்பும் கூட்டம்!
ஆயிரம் மாதம் செய்த நன்மையை ஒரு இரவில் இறைவன் தருவதாக சொல்கிறான்,
கடைசி பத்து இரவை அதுவும் சுருக்கி ஒற்றைப்படையாக 5 இரவுகளில்...
அப்படிப்பட்ட மகத்துவமிக்க இரவை தூக்கத்திலும், உலக ஆசாபாசங்களிலும் கழிக்கும் சமுதாயமாக இருக்கிறோமே!
சிந்திக்க வேண்டாமா?????
நாம் செய்யும் அமல்களால் சொர்கம் இலகுவாக செல்ல முடியுமா????
லைலத்துல் கத்ருடை இரவில் எப்படிப்பட்ட நன்மையின் பெருங்குவியலை அல்லாஹ் கொடுக்கிறான் அதை அடைய வேண்டாமா????
மகத்துவமிக்க இரவில் எத்தனை பள்ளிவாசல்கள் பூட்டப்பட்டிருப்பது இன்னும் வேதனை அளிக்கிறது.
லைலத்துல் கத்ருடைய இரவை அடையும் பாக்கியசாலிகள் யார் தெறியுமா?
மறைவானதை அவர்கள் நம்புவார்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே, அந்த நம்பிக்கை யாருடைய உள்ளத்தில் ஆழமாக இருக்கிறதோ அவர்களால்தான் தூக்கத்தை தியாகம் செய்து ரமலான் கடைசி பத்து இரவுகளில் அமல்கள் செய்யமுடியும்...
உங்களை நீங்களே பரிசோதித்து பாருங்கள்:
வெள்ளிகிழமையில் பள்ளிவாசல்கள் முழுவதும் நிறைந்து வழியும் கூட்டம்!
அதில நாமும் ஒருவர்.
லைலத்துல் கத்ருடைய இரவில் அதே பள்ளிவாசலில் முதல் வரிசை மட்டுமே நிறைந்திருக்கும்!
அந்த வரிசையில் நாம் இருக்கிறோமா?
வெள்ளிகிழமையில் நிறைந்து வழிந்த கூட்டம் எங்கே போனது லைலத்துல் கத்ருடைய இரவில்?????
அதற்கான பதில்: லைலத்துல் கத்ரை தூக்கத்தில் தொலைத்தோம்.
விழித்துகொள்ளுங்கள் அருமை சமுதாய மக்களே! லைலத்துல் கத்ருடைய இரவை வீணடிக்காமல்...
மீதமுள்ள ஒற்றைப்படை இரவுகளில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் எப்படி இறையச்சத்துடன் வணங்கி வழிபட்டார்களோ,
அதுபோல நாமும் லைலத்துல் கத்ருடைய இரவுகளை கழிப்போம்...
அல்லாஹு ரப்புலாலமின் லைலத்துல் கத்ருடைய இரவின் பாக்கியத்தை பெற நம் அனைவருக்கும் அருள் புறிவானாக..
இரவு நேரங்களில் ஸஜ்தா செய்தவராகவும், நின்றவராகவும், மறுமையைப் பயந்து தனது இறைவனின் அருளை எதிர்பார்த்தவராகவும் வணங்கிக் கொண்டிருப்பவரா?
அல்லது அவ்வாறு இல்லாதவரா? அறிந்தோரும் அறியாதோரும் சமமாவார்களா? என்று கேட்பீராக! அறிவுடையோர் தான் நல்லறிவு பெறுவார்கள்.
திருக்குர்ஆன் 39:9
ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment