பத்ரு போரின் பெயரால் பரவும் பித்அத்
ஏக இறைவனின் திருப்பெயரால்...
ஒவ்வொரு நாளும் சத்தியத்தை பரப்புகிறோமோ இல்லையோ!
ஆனால் வழிகேடான தகவல்கள் பரப்புவதை மட்டும் வாடிக்கையாக வைத்துள்ளனர் சிலர்..
அவர்கள் பரப்பும் வழிகேடு தகவல்கள் உண்மையா? பொய்யா? என்பதைக்கூட சிந்திக்காத, விளங்காத மக்களாக சிலர் இருப்பது வேதனை அளிக்கிறது...
ரமலான்-17 பத்ரு போர் நடந்த நாள் அந்த போரில் 313 நபிதோழர்கள் கலந்து கொன்டு வெற்றி பெற்றனர்! அவர்களுக்காக திருக்குர்ஆனின் ஒரு அத்தியாயமான யாஸினை 3 முறை ஓதவேண்டுமாம் பிறகு 313 நபிதோழர்களின் பெயர்களை துதிக்க வேண்டுமாம் இதுதான் அந்த வழிகேடான மெஸேஜ், இதன் உண்மைதன்மை என்ன?
இது மார்கத்தில் அனுமதிக்கப்பட்டதா?
நாம இப்படி செய்யலாமா என்பதை பார்ப்போம்!
பத்ரு போரில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களும் அவர்களின் தோழர்களான சத்திய சஹாபாக்களும் பட்ட தியாகங்கள் சாதாரணவை அல்ல!
தங்களுக்கு போரில் காயம் ஏற்பட்ட பிறகும் அவர்கள் அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் பதிலளித்தார்கள்.
திருக்குர்ஆன் 3:172
பத்ரு களத்திற்கு சென்றது போர் செய்யவா?
பத்ரு களத்தை நோக்கி படையெடுத்தது, மக்கத்து காபிர்களின் வியாபார கூட்டத்தை பிடித்து, அவர்களை சிறைபிடிக்க.
சிறை பிடிக்க சென்றவர்களை போர் செய்ய வருகிறார்கள் என்று நினைத்து மக்காவிலிருந்து பெருங்கூட்டம் நபிகளாரையும் நபிகளாரின் படையை அழிக்க புறப்படுகிறது...
போன நோக்கம் ஒன்று,நடந்தது ஒன்று...
போர் எண்ணம் என்பது யாருக்கும் கிடையாது,
போர் செய்யவும் யாருக்கும் தெறியாது,
வெறும் 313 பேர்கள் கொன்ட ஒரு கூட்டம்,
போர் ஆயுதங்கள், போர் கவசங்கள் எதுவும் இல்லாத நிலையில்...!
இறைவனிடமிருந்து அறிவிப்பு வருகிறது அவர்களுடன் போர் செய்யுங்கள் என்று...
யாரும் எதிர்பாராத ஒரு செய்தி!
நினைத்து பாருங்கள் போர் என்பது சாதாரண விஷயமா?
மனைவி,பிள்ளை,குடும்பம் இவர்கள் யாருக்கும் தெறியாது,
போரில் கலந்து கொன்டால் உயிருடன் இருப்போமா என்பதுகூட தெறியாது!
போர் பயிற்சி பெற்ற வீரர்களும் கிடையாது!
அவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும் சற்று சிந்தித்து பாருங்கள்...
அந்நிலையில் நாம் என்ன செய்வோம் என்பதையும் சிந்தித்து பாருங்கள்?
ஆனால் சத்திய சஹாபாக்கள் அல்லாஹ்வின் பாதையில் அல்லாஹ் சொல்லிவிட்டான் என்பதற்காக போரிட துனிந்தார்கள்!
மரணத்தை கண்டு ஓட கூடிய கூட்டம் இல்லை என்பதை நிறுபித்தார்கள்!
நோன்புவைத்த நிலையில், உடல் பலஹீனத்தால் கடும் வெப்பத்தில் போர் களத்தில் நின்றுள்ளார்கள்...!
எப்படி அவர்களால் நிற்க முடிந்தது?
எதிரிகள் 100 குதிரை, 170 ஒட்டகங்கள் , வில் வீரர்கள் என சுமார் 1000 எண்ணிக்கை கொன்ட கூட்டமாக எதிரிகள் இருந்தனர்...
வெறும் 313 பேரால் எப்படி வெல்ல முடிந்தது?
அல்லாஹ் பதில் சொல்கிறான்:
விண்ணிலிருந்து இறக்கப்பட்ட மூவாயிரம் வானவர்கள் மூலம் உங்கள் இறைவன் உங்களுக்கு உதவியது உங்களுக்குப் போதாதா?' என்று நம்பிக்கை கொண்டோருக்கு நீர் கூறியதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 3:124
அல்லாஹ் தன்னுடை வானவர்கள் மூலம் உதவி செய்தான் நபிதோழர்களுக்கு...
அங்கே நடந்தது சத்தியத்திற்கும் அசத்தியத்திற்குமான யுத்தம்...
போரில் கலந்துகொன்ட நபிகளாரும் நபிதோழர்களும் அதை கண்ணெதிரே பார்த்தார்கள்...
இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:
பத்ருப் போரின்போது நபி(ஸல்) அவர்கள், இதோ ஜிப்ரீல்! போர்த் தளவாடங்களுடன் தம் குதிரையின் தலையை அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்கள்.
ஸஹீஹ் புகாரி: (3995)
அவர்களை நீங்கள் கொல்லவில்லை. மாறாக அல்லாஹ்வே அவர்களைக் கொன்றான். முஹம்மதே! நீர் எறிந்த போது உண்மையில் நீர் எறியவில்லை. மாறாக அல்லாஹ்வே எறிந்தான். நம்பிக்கை கொண்டோருக்கு அழகிய முறையில் பரிசளிப்பதற்காக இவ்வாறு செய்தான். அல்லாஹ் செவியுறுபவன்;அறிந்தவன்.
திருக்குர்ஆன் 8:17
அல்லாஹ் அவர்களுக்கு உதவி செய்தான்,
அல்லாஹ் வெற்றியை தந்தான்,
அல்லாஹ் அவன் வானவர்களின் மூலம் உதவினான்...
இதனால் பெறும் சாம்ராஜ்யத்தை நபிகளார் நிறுவினார்கள்,
முஸ்லிம்களை கருவறுக்க நினைத்த எதிரிகளுக்கு ஒரு பயம் வந்தது,
இனி முஸ்லிம்களை அழிக்க நினைப்பது வீண் என்ற சிந்தனைக்கு தள்ளப்பட்டார்கள்...
முஸ்லிம்களின் நம்பிகை அதிகமானது,
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர்தான் என்பதை எதிரிகள் உணர்ந்தார்கள்.
காலத்தால் அழியாத இந்த வரலாற்றை!
நபிதோழர்களின் வீரமிக்க தியாகத்தை!
நம்பிக்கையின் அடிப்படையில் களத்தில் நின்று உயிர் தியாகம் செய்யத தியாகிகளை அல்லாஹ் எந்த மாதிரியான மகுடம் சூட்டுகிறான்?
அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர், உணவளிக்கப்படுகின்றனர்.
திருக்குர்ஆன் 3:169
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அல்லாஹ்விடம் நற்பலன் பெறுபவராக இறந்து போகிற எந்த நல்ல அடியாரும் இந்த உலகமும் அதிலுள்ளவை அனைத்தும் அவருக்குக் கிடைக்கும் என்றிருந்தாலும் கூட உலகிற்குத் திரும்பி வர விரும்ப மாட்டார்,
இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவரைத் தவிர ஏனெனில், உயிர்த்தியாகத்தின் சிறப்பை மறுமையில் அவர் காண்கிறார்.
எனவே, இந்த உலகிற்கு மீண்டும் வந்து மறுபடியும் ஒருமுறை இறைவழியில் போரிட்டுக் கொல்லப்படுவதை அவர் விரும்புவார்.
ஸஹீஹ் புஹாரி-(2795)
அல்லாஹ்வின் பாதையில் ஒருவர் கொல்லப்பட்டு மரணித்தால் அவருக்கு கிடைக்கும் வெகுமதிக்காக மீன்டும் உலகிற்க்கு வர ஆசைப்படுவார்களாம்!
அப்படி என்றால் அல்லாஹ்வால எவ்வளவு பெரிய கூழி கிடைக்கின்றது என்பதை
புறிந்துகொள்ளமுடிகிறது..
பத்ரு களத்தில் நின்றவர்களுக்கு அல்லாஹ்வை தவிற வேறு யார் மனநிறைவை தரமுடியும்???
அப்படியிருக்க, ரமலான்-17 ஆம் நாள் பத்ரு சஹாபாக்களின் பெயரை துதிக்கனுமாம்!
அவர்களின் பெயரால் 3 யாஸின் ஓதனுமாம்!
என்ன சொல்ல வரீங்க????
செத்த பிணத்தை கட்டி அழவுரீங்களே!
அதுபோல சஹாபாக்களை நினைக்க சொல்ரீங்களா?
அல்லாஹ்வோடு அவுலியாக்களை ஒப்பிட்டு வழிபாடு நடத்துரீங்களே! அதுபோல சஹாபாக்களை நினைக்க சொல்கிறீர்களா????
குர்ஆனில் உள்ள அத்தனை வசனங்களையும் படித்து அந்த அறிவுறைகளை தன்னுடைய வாழ்கையில் நடைமுறைப்படத்த வேண்டும்,
இதற்குதான் குர்ஆன் அருளப்பட்டது...
குர்ஆனில் உள்ள வெறும் யாஸின் அத்தியாத்தை மட்டும் எடுத்துக்கொன்டு அதை ஒரு சாங்கியமாக, சடங்காக வைத்து தர்ஹாவில் உள்ள செத்த பிணங்களிடம் வழிப்பாடு நடத்துவது போல சஹாபாக்களுக்கு நடத்த போரிங்களா???
நீங்கள் அவர்களை வழிபாடு நடத்ததான் அவர்கள் இந்த மார்கத்திற்காக உயிர்தியாகம் செய்தார்களா??
அவர்கள் திருப்தி அடையும் அளவிற்கு அல்லாஹ் கொடுத்துவிட்டான்...
நீங்கள் என்ன 3 யாஸின் சூராவை ஓதி அவர்களுக்கு கொடுக்க போரிங்க???
அவர்களது இறைவனிடம் அவர்களின் கூலி அத்ன் எனும் சொர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் என்றென்றும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டனர். இது தனது இறைவனை அஞ்சுபவருக்கு உரியது.
திருக்குர்ஆன் 98:8
உண்மையில் அவர்களின் தியாகங்களுக்கு நீங்கள் மதிப்பளித்தால் என்ன செய்ய வேண்டும்???
அல்லாஹ்விடத்தில் இறைவா! சத்திய சஹாபாக்களுக்கு அருள் புறி என்றுதானே பிரார்த்திகனும்!
இறந்த ஒருவருக்கு ஒரு மூஃமின் செய்யும் சிறந்த காரியம் அவருக்காக பிரார்த்தனை செய்வது, தயவு செய்து அதை செய்யுங்கள்.
அதைவிட்டுவிட்டு அவர்களின் பெயர்களை துதித்து, அவர்களின் தியாகங்களை இழிவு படுத்தாதிர்கள்.
துதிக்க தகுதியானவன் யார்?
நீங்கள் மாலைப் பொழுதை அடையும்போதும், காலைப் பொழுதை அடையும்போதும், அந்தி நேரத்திலும், நண்பகலிலும் அல்லாஹ்வைத் துதியுங்கள்! வானங்களிலும்,பூமியிலும் அவனுக்கே புகழனைத்தும்.
திருக்குர்ஆன் 30:18
இதைத்தான் நபிகளாரும், சஹாபாக்களும் செய்தார்கள்...
ஆனால் நீங்க என்ன சொல்ரீங்க?
இவர்களை துதிக்க சொல்கிறீர்கள்!
மக்களை ஏமாற்றிய காலம் சென்றுவிட்டது,
இனி மக்களை ஏமாற்றுவதற்காக குறுக்கு வழியில் நீங்கள் எப்படி சென்றாலும்,
அந்த குறுக்கு வழியை அல்லாஹ்வின் உதவியை கொன்டு அடைக்க ஏகத்துவபடை தயார் நிலையில் உள்ளது...
இது போன்று நபிகளார் காட்டிதராத வழிகளை உருவாக்கி மக்களை வழிகெடுக்க வேண்டாம்,
சமுதாய மக்களும் இதுபோன்ற விஷயங்ளை அறிந்தவர்களிடம் கேட்டு பிறகு, மற்றவர்களுக்கு அனுப்பவும்.
இவைகளை நீங்கள் நன்மைகள் என்று நினைத்து பிறருக்கு அனுப்புகிறீர்கள்,
மாறாக இது உங்களுக்கு தீமையாக மட்டுமே அமையும்...
ஏன் என்றால் நபிகளார் சொல்லாத ஒரு தகவலை நாம் பிறருக்கு எடுத்து வைப்பது, வழிகேட்டின் பாதைக்கு அழைத்து செல்வதற்கு சமம் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர். நன்மையை ஏவுகின்றனர். தீமையைத் தடுக்கின்றனர். நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர். அவர்களே நல்லோர்.
திருக்குர்ஆன் 3:114
நீங்கள், மனித குலத்துக்காகத் தேர்வு செய்யப்பட்ட சிறந்த சமுதாயமாக இருக்கிறீர்கள்! நன்மையை ஏவுகிறீர்கள்! தீமையைத் தடுக்கிறீர்கள்! அல்லாஹ்வை நம்புகிறீர்கள்!
திருக்குர்ஆன் 3:110
இப்படிக்கு
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment