பெண்களின் தியாகம்

ஏக இறைவனின் திருப்பெயரால்...

ஒவ்வொரு ஆண்பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களும், ஒவ்வொரு திருமணமான ஆண்களும், திருமணம் செய்யப்போகும் இளைஞர்களும், பெண்களும் அவசியம் படிக்கவும்....

இறைவன் குர்ஆனில் ஒரு அழகான செய்தியை பதிவு செய்கிறான்:

நீங்கள் சிந்திப்பதற்காக ஒவ்வொரு பொருளிலும் ஜோடிகளைப் படைத்தோம்.
திருக்குர்ஆன்  51:49

உலகில் உள்ள எல்லா படைப்புகளும் ஜோடியாகவே படைக்கப்பட்டுள்ளதாக இறைவன் இந்த வசனத்தில் சொல்கிறான்...

இந்த ஜோடிகள் அனைத்ததையும் நாம் கவணித்தால்! ஜோடி ஒன்றிலிருந்து ஒரு உயிர் உருவாகிவருவதை நாம் பார்க்கமுடிகிறது!

அந்த உயிரை சுமக்கக்கூடிய இனம் பெண்ணினமாகவே இருக்கிறது.

இதில் நாம் கவணிக்கவேண்டிய மிக முக்கியமான விஷயம் என்னவென்றால்!
கருவை சுமக்கக்கூடிய உயிரிணங்கள் அனைத்திற்கும் மனித இனமான பெண்களை தவிற்த்து மற்ற அனைத்திற்கும் மாதவிடாய் என்ற ஒரு சிரமத்தை இறைவன் ஏதற்கும் ஏற்படுத்துவதில்லை!

மாதவிடாய் காலங்களில் விலங்கினங்களோடு ஒப்பிட்டு பார்க்கையில் பெண்கள் பெரும்பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

இந்த மாதவிடாய் பற்றி குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்:

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் கேட்கின்றனர்.
அது ஓர் தொல்லை. எனவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் உடலுறவு கொள்ளாமல் விலகிக் கொள்ளுங்கள்!
அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை நெருங்காதீர்கள்!
திருக்குர்ஆன்  2:222

மாதவிடாய் என்பது ஒருவகை தொல்லை, அது ஒரு சிரமம் என்பதை இறைவன் தெளிவாக குறிப்பிடுகிறான்,

இப்படிப்பட்ட சிரமத்தை ஏன் இறைவன் பெண்களுக்கு ஏற்படுத்தினான் என்பதை நாம் உணர்ந்தோம் என்றால் அவர்களின் படைப்பு ஒரு உன்னதமானது என்பதையும்,
அவர்கள் உண்மையில் சிரமத்தை தன் வாழ்நாள் முழுவதும் அனுபவிக்கிறார்கள் என்பதை நாம் உணரமுடியும்!

ஒரு ஆண், ஒரு பெண்னோடு மட்டும் இறைவனுடைய படைப்பு  முற்றுப்பெற்றிருக்கும் என்றால்!
இறைவன் பெண்களுக்கு மாதவிடாயை ஏற்படுத்திருக்கமாட்டான்.

அதாவது உலகில் ஒரே ஆண், ஒரே பெண் என்ற நிலை இருப்பதாக இருந்திருந்தால் மாதவிடாய் என்ற ஏற்பாடே தேவையில்லை.

ஏன் என்றால் ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்துதான் அடுத்தடுத்த சந்ததி உருவாக முடியும்.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம்.
நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் இறைவனை அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன், நன்கறிபவன்.
திருக்குர்ஆன்  49:13

ஒரு ஆண், ஒரு பெண்ணிலிருந்து மனித இனம் பல்கி பெருகவேண்டும் என்றால்?வெறுமென சாதாரணமாக ஆக முடியாது அதற்கான ஏற்பாடுகளை ஆண்,பெண் இருவருக்குள்ளே உருவாக்கவேண்டும்!

கரு பெண்ணிடம் உருவாக வேண்டும் என்பதற்காகவே பெண்ணித்திற்கு இறைவன் மாதவிடாயை ஏற்படுத்தியுள்ளான்!

பெண்கள் வயதுக்கு வந்த நாள் முதல் பெண்களுக்கு தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் சினை முட்டைகள் உற்பத்தியாகும்.
அந்த கருமுட்டைகள் கரு உண்டாக தேவையான ஆணுடைய விந்து கிடைக்கப்பெறாத சந்தர்ப்பத்தில் அம்முட்டைகளுடன் கருவறை சுவர்களும் சுத்திகரிக்கப்பட்டு கழிவுகளாக வெளியேற்றப்படும். இந்த நிகழ்வே மாதவிடாய் எனப்படுகிறது.

ஒவ்வொரு மாதமும், பெண்கள் திருமணம் ஆகும் வரையும், திருமணம்  ஆன பிறகு கரு உண்டாகும் வரை இந்த சிரமம் அவர்களுக்கு இருக்கும்.

அடுத்த சந்ததியை உருவாக்க பெண்ணின் பங்கு மிக முக்கிய காரணமாக உள்ளது.

இந்த சிரமமான காலங்களில் பெண்களை தொட்டால் தீட்டு என்று சில கிரமாப்புறங்களில் ஒதுக்கிவைக்கக்கூடிய காட்சிகளையெல்லாம் நாம் பார்க்கிறோம்!

மாதவிடாய் காலங்களில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தன்னுடைய மனைவியிடத்தில் எப்படி நடந்து கொன்டுள்ளார்கள் தெறியுமா???

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நபி(ஸல்) அவர்கள் என்னுடைய மடியில் சாய்ந்து கொண்டு குர்ஆனை ஓதும் வழக்கமுடையவர்களாக இருந்தார்கள்.
-என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம்-297

பெண்கள் மாதவிடாய் காலங்களில் சலிப்படைந்துவிடகூடாது, தனிமையை உணரக்கூடாது என்பதற்காகவே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் மனைவியிடத்தில் அன்பாக, இருந்துள்ளார்கள் புனிதவேதமான குர்ஆனை மடியில் சாய்ந்து ஓதும் அளவிற்கு நெருக்கமாக இருந்துள்ளார்கள்.

ஒரே காரணம்தான் மாதவிடாய் என்ற சிரமத்தின் மூலம் பெண்கள் பலஹீனம் அடைந்துவிடகூடாது என்பதற்காக.

திருமணத்திற்கு பிறகு கருவுற்று மாதமாக இருக்கக்கூடிய காலங்கள்:

ஜோடிகளாக இருக்கக்கூடிய எத்தனையோ உயிரிணங்கள் கருவை சுமக்கின்றது!
ஆனால் பெண்கள் படும் சிரமங்களை அந்த உயிரிணங்கள் படுவதில்லை!

விலங்கினங்கள், பறவையினங்கள் மற்ற ஏனைய உயிரிணங்கள் அனைத்தையும் இறைவன் குணிந்தவாறு அதாவது செங்குத்தாக தன்னுடைய கை,கால்களால் நடந்து செல்லுமாறு, ஊர்ந்து செல்லுமாறும், பறந்து செல்லுமாறும் படைத்துள்ளான்.

இப்படி இவைகள் குணிந்த நிலையில் நடந்து, பறந்து செல்வதால் வயிற்றில் கருவை சுமக்கும்பொழுது ஒரு குழந்தையை தொட்டில் படுக்க வைப்பதால் எந்த அளவிற்க்கு பாதுகாப்பாக இருக்குமோ? அதே பாதுகாப்பை எந்த ஒரு கவலையும் இல்லாமல் கருவை சுமக்கலாம்.

குழந்தையை தொட்டிலில் தூங்க வைப்பதற்க்கும், தோலில் தூங்கவைப்பதற்கும் இடையே உள்ள வித்தியாசம் போல மிக பெரிய வித்தியாசங்கள் கருவை சுமக்கும் விலங்கினங்களுக்கும், பெண்ணிணத்திற்கும் உள்ளது.

தொட்டிலில் குழந்தையை படுக்க வைப்பதன் மூலம் பெரும் சுமைகள் இருக்காது, ஆனால் தன் தோலில் குழந்தையை தூங்க வைப்பதால்! இருகைகள் தாங்கி பிடித்தவாறு, மிகவும் கவணமாக கவணிக்க வேண்டும்.

இதே நிலைதான் விலங்கினங்களுக்கும் மனிதஇனத்திற்கும் உள்ள வித்தியாசம்!

ஒரு விலங்கு கர்பமானால் கருவை தொட்டிலில் வைத்தால் எப்படி இருக்குமோ அதே நிலைதான்!
ஏன் என்றால் நான்கு கால்களால் கால்நடைகள்  நடப்பதால் அதன் வயிற்றுப்பகுதி நான்கு கால்களுக்கு இடையில் தொட்டில்போல சுமந்து செல்கிறது, அதுமட்டுமல்லாமல் வயிற்றுப்பகுதி பூவிஈர்ப்பு விசையால் வயிற்றுக்கு அழுத்தம் கொடுக்க முடியாத சூழ்நிலை உருவாகிறது,
இதனால் கருவை சுமக்கும் காலங்களில் பெரும் சுமைகள் கால்நடைகளுக்கு கிடையாது!

இதே ஒரு பெண் கர்பமானால்?
தன் இரு கால்களால் நடப்பதால், வேலை செய்வதால் கருவை  தொட்டில் போல் சுமக்க இயலாது, மாறாக தன்னுடைய வயிற்றில் தாங்கியப்படியே திட்டதட்ட 9 மாதங்கள் கழிக்க வேண்டும்,
ஒரு சராசரி மனிதனுடைய எல்லா அடிப்படை தேவைகளையும் சிரமத்துடனே செய்ய முடியும்,
மனிதனின் அத்தியாவசிய தேவையான 3 அடிபடை விஷயமான தூக்கம், உணவு, ஆடை இவைகள் அனைத்தயைும் கர்பமாக இருக்கக்கூடிய காலங்களில் பெண்களால் சரிவர பேணமுடியாது....

மற்ற நாட்களில் உண்ணும் உணவை கருவுற்ற காலங்களில் உண்ண இயலாது,

மற்ற நாட்களில் இருக்கும் தூக்கம் கருவுற்ற காலங்களில் தூங்க முடியாது,
குப்புற சாய்ந்து படுக்க முடியாது.

மற்ற நாட்களில் அணியும் ஆடைகளை கர்பகாலங்களில் அணியமுடியாது மாறாக கர்பமாவதால் உடலமைப்பு முற்றிலும் மாற்றமடைந்துவிடும்.

இவ்வளவு சிரமங்களை ஒரு பெண் கருவுறும் காலங்களில் குழந்தையாடு சேர்த்து சுமக்கிறாள்!

இதை குர்ஆன் ஒரு வசனத்தில் எவ்வளவு அழகாக சொல்கிறது!

மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தியுள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப்பட்டவளாகச் சுமந்தாள்.
திருக்குர்ஆன்  31:14

ஒரு பெண் குழந்தையை வயிற்றில் சுமப்பது சுமை, பலஹீனம் என்று இறைவனே குறிப்பிடும்பொழது, அது எவ்வளவு பெரிய சிரமம் என்பதை நம்மாள் புறிந்துகொள்ள முடிகிறது.

பிரசவ காலங்களும் அதன் வேதனையும்:

இறுதியாக குழந்தை பிறக்கும்பொழது அது ஆண்குழந்தையா? பெண் குழந்தையா? என்றுதான் நாம் எதிர்பார்த்திருப்போம்!

ஆனால் பெண்கள் பிரசவ அறைக்கு செல்லும் பொழுது அவர்களின் நிலை?

ஒரு சிரிய உதாரணம்: ஒரு முழு மாம்பழத்தை நம்மிடம் கொடுத்து அதை வெட்டாமல் விழுங்குங்கள் என்று சொன்னால் நாம் செய்வோமா???

ஏன் என்றால் சாத்தியமில்லாத ஒன்று, அதை அறுத்து சாப்பிடமுடியும், வருடக்கணக்கில் நாம் முயற்சி செய்தாலும் முடியாது!
ஒரு முழு மாம்பழத்தை முழுமையாக நம்மால் விழுங்க முடியாது!

ஆனால், பெண் மாம்பழத்தைவிட பெரிய நிலையில் உள்ள ஒரு குழந்தையை பெற்றெடுத்துவிடுவாள்!

நம்முடைய தொன்டைகுழி மிகவும் சிறியது,
அந்த தொன்டைக்குள் நிர்ணயிக்கப்பட்ட அளவை தவிற நாம் எப்படிப்பட்ட உணவை உண்டாலும் அது ஏற்காது,
மாறாக தொன்டை அடைத்து இறந்துவிடுவோம்.

ஆனால் ஒரு பெண் ஒரு உயிரை எந்த  பாதிப்புமில்லாமல் ஈன்றெடுக்கிறாள்!
இதுதான் வித்தியாசம்....

பிறகு அந்த குழந்தையை பராமரிக்கும் வேலைகள்:

அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்துவாயாக!
என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
திருக்குர்ஆன்  31:14

அந்த குழந்தைக்கு திட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் பால் கொடுத்து பராமரிக்க வேண்டும்!

அந்த காலக்கட்டங்களிலும் நாம் நினைத்த உணவுகளை உண்ண முடியாது,
குழந்தை பால்குடி மறக்கும்வரை குழந்தைகேற்ற உணவையே அந்த பெண் உண்டு கழிப்பாள்!

மீன்டும் மாதவிடாய், கருவுற்றல் இப்படியென தொடரும்...

இதுவரை உடல்ரீதியாக பெண்களின் தியாகத்தை பார்த்தோம், மனரீதியாக அவர்களின் தியாகம்:

திருமண வாழ்கையில் அடி எடுத்து வைக்கும் ஒவ்வொரு பெண்களும் மனரீதியாக பாதிக்கப்படுவது தன்னுடைய பொற்றோர்கள், உடன்பிறந்தவர்கள், உறவுகள், வீடு, வாசல் என அனைத்தையும் பிரிந்து கனவனுடைய வீட்டிற்கு செல்லும்பொழது...

அந்த பிரிவிலிருந்து அவர்கள் மீன்டுவர சில மாதங்கள் ஆகும்...

இதில் வரதட்சனை கொடுமை வேறு!
சில வீடுகளில் மாமியார், நாத்தனார் கொடுமை என மனரீதியாக பெரிய சிரமங்களையெல்லாம் சந்திக்க நேரிடும்...

இவ்வளவு தியாகங்களை செய்யக்கூடிய பெண்களிடத்தில் நாம் திருமணத்தின் மூலம் வரதட்சனையை கேட்கலாமா?????

திருக்குர்ஆன் ஆண்களுக்கு ஒரு அழகான அறிவுரையை சொல்கிறது:

பெண்களுக்கு அவர்களின் மணக் கொடைகளை கட்டாயமாகக் கொடுத்து விடுங்கள்! அவர்களாக மனமுவந்து அதில் எதையேனும் விட்டுத் தந்தால் மனநிறைவுட னும், மகிழ்வுடனும் அதை உண்ணுங்கள்!
திருக்குர்ஆன்  4:4

ஆண்கள்தான் பெண்களுக்கு திருமணக்கொடையை கொடுக்க வேண்டும் என்று இறைவன் சொல்லும்பொழது!
எப்படி பெண்ணிடம்  கையேந்தி நிற்கமுடிகிறது?

அவர்களின் தியாகத்திற்கு குவியளையே அவர்களுக்கு கொடுத்தாலும் அதற்கு ஈடாகாது!

பெண்களின் தியாகத்திற்கும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து அவர்களிடம் அழகிய முறையில் நடந்துகொள்வதுதான் ஒரு ஆணின் அழகு இதைதான் இஸ்லாமும் வலியுறுத்துகிறது.

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இறுதி பேருரையில் ஆண்களுக்கு செய்த எச்சரிக்கை:

கவனியுங்கள்! பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!

1. அவர்களுக்கு நன்மையே நாடுங்கள்.
2. அவர்கள் உங்களுக்குக் கட்டுப்பட்டவர்கள்.
3. அல்லாஹ்வுடைய அமானிதமாக அவர்களை நீங்கள் பெற்றுள்ளீர்கள்.
4. எப்படி உங்கள் மனைவியர் மீது உங்களுக்கு உரிமைகள் இருக்கின்றனவோ, அதே போல் உங்கள் மனைவியருக்கும் உங்கள் மீது உரிமைகள் இருக்கின்றன.
5. அவர்கள் உங்களுக்குச் சிறந்த முறையில் பணிவிடை ஆற்றட்டும்!
6. அவர்களுக்குரிய கடமை என்னவென்றால், நீங்கள் எவரை விரும்ப மாட்டீர்களோ, அவரை அவர்கள் வீட்டுக்குள் அனுமதிக்காமல் இருக்கட்டும்.
7. இன்னும், மானக்கேடான செயலைச் செய்யாமல் இருக்கட்டும்!
8. அவர்கள் குற்றம் புரிந்தால், அவர்களைத் தண்டிக்கிற உரிமையும் உங்களுக்கு உண்டு. 9. அது அவர்களை இலேசாக காயம்படாதபடி தண்டிப்பதாகும்.
10. அவர்களுக்கு ஒழுங்கான முறையில் உணவும் உடையும் வழங்குங்கள், அவர்களுக்கு நன்மையை நாடுங்கள்.
11. அவர்கள் உங்களின் உதவியாளர்களாகவும் உங்களைச் சார்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.

அல்லாஹ்வின் பெயரை முன்மொழிந்தே நீங்கள் அவர்களுடன் மணவாழ்க்கை மேற்கொண்டுள்ளீர்கள்!
-ஸஹீஹ் முஸ்லிம் 2334, ஸஹீஹ் ஜாமிஇ 7880)

நபிகளாரின் இந்த அழகான அறிவுரையை ஒவ்வொரு ஆணும், பெண்ணும், பெற்றோர்களும் ஏற்றுக்கொன்டு நடந்தால் அமைதிகரமான வாழ்கை கிடைக்கும் என்பதில் மாற்றுகருத்தில்லை....

எனது இந்த பதிவின் நோக்கம், பெண்களின் தியாகங்களையும், உணர்வுகளுக்கும் மதிப்பளித்து திருமணத்தின் போது வரதட்சனையாகவோ, பொருளாகவோ, நகையாகவோ, வாகனமாகவோ எந்த ஒரு சிரமத்தையும் அந்த பெண்ணிடமோ அல்லது, பெண் வீட்டாரிடமோ எதிர்பார்க்காமல் நபிவழி முறைப்படி திருமணம் செய்தால்....!

சமுதாயத்தில் உள்ள ஏழை பெண்களின் திருமண கனவு நினவாகும்!

அன்புடன்
அ.மன்சூர் வேலூர்

Comments