ரஜப் மாதமும் பித்அத்தும்
ஏக இறைவனின் திருப்பெயரால்...
ரஜப் மாதத்தின் பெயரால் பின்பற்றப்படும்
பித்அத்க்கள்...
பித்அத்க்கள்...
ரஜப் மாதம் என்றாலே நமது சமுதாய மக்கள் பல்வேறு சாங்கியங்களை பின்பற்ற தொடங்கிவிடுவார்கள்...
ரஜப் மாதத்தை பொருத்தவரை அதைப்பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் ஒரு தெளிவான பதிலை சொல்லுகிறான்:
வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாஒகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (திருக்குர்ஆன் 9:36)
புனித மாதத்தில் போர் செய்வது குறித்து உம்மிடம் கேட்கின்றனர். அதில் போரிடுவது பெருங்குற்றமே. அல்லாஹ்வின் பாதையை விட்டும், மஸ்ஜிதுல் ஹராமை விட்டும் மற்றவர்களைத்தடுப்பதும், அவனை ஏற்க மறுப்பதும், அதற்கு மஸ்ஜிதுல் ஹராமுக்கு உரியோரை அங்கிருந்து வெளியேற்றுவதும் அல்லாஹ்விடம் இதைவிடப் பெரியது. கொலையை விட கலகம் மிகப் பெரியது எனக் கூறுவீராக! (திருக்குர்ஆன் 2:217)
நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த பழைய நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. அவற்றில் மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். மற்றொன்று ரஜப் மாதமாகும்.
அபூபக்ரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : புகாரி 3197, 4406, 4662, 5550
புனித மாதங்கள் 4 அதில் ரஜப் மாதமும் ஒன்று!
அந்த மாதத்தில் போர் செய்யக்கூடாது.
அதை தவிற வேறு எந்த சிறப்பையும் மார்கம் நமக்கு சொல்லவில்லை.
அந்த மாதத்தில் போர் செய்யக்கூடாது.
அதை தவிற வேறு எந்த சிறப்பையும் மார்கம் நமக்கு சொல்லவில்லை.
ஆனால் இன்று நம் சமுதாய மக்கள் அறியாமையில் முன்னோர்களின் வழிமுறையை ஆதாரமற்ற செய்திகளை ரஜப் மாதத்தில் செய்து வருவதை பார்க்கிறோம்!
அந்த அமல்கள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் காட்டி தராத வழி...
இது நபி(ஸல்) அவர்கள் பெயரால் புதியதாக உருவாக்கப்பட்ட பித்அத் ஆகும்...
ரஜப் மாதத்தின் பெயரால் பின்பற்றப்படும் ஆதாரமற்ற தகவல்ளை பார்ப்போம் அதில் முதலாவதாக:
1.நபிகளார் ரஜப் மாதம் மிஹ்ராஜ் பயணம் மேற்கொண்டதாக கூறி ரஜப்-27அன்று சிறப்பு தொழுகையை தொழுவது மற்றும் அந்த நாளை சிறப்பாக கொண்டாடுவது.
2.ரஜப் மாதத்தில் செய்யும் சிறப்பு உம்ரா.
3.ரஜப் மாதத்தில் வைக்கும் சிறப்பு நோன்பு.
4.ரஜப் மாதத்தில் முதலாவது ஜும்ஆத் தினத்தில் ஸலாதுர் ரகாஇப் என்ற தொழுகையைத் தொழுதல்.
5.ரஜப் மாத்தில் மட்டும் தர்மம் புரிதல். அதற்குத் தனிச் சிறப்பு உள்ளதாக நம்பிக்கை வைத்தல்.
நபி(ஸல்) மிஹராஜ் பயணத்திற்கென்று எந்த சிறப்பு தொழுகையையும் கற்று கொடுக்கவில்லை.
அதிகபட்சமாக ரமலான் மாதத்தில் செய்யும் உம்ரா நபி(ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்ததற்கான நன்மை கிடைக்கும் என்று ரமலான் உம்ராவை சிறப்பித்துள்ளார்கள்.
ஒவ்வொரு திங்கட்கிழமை மற்றும் வியாழன்கிழமை, மாதத்தில் மூன்று நோன்பு ஆஷூரா நோன்பு ஷவ்வால் 6நோன்பு என இந்த நோன்புகளை நபி(ஸல்) அங்கிகரித்துள்ளார்கள் மேலுமம் ரஜப் மாதத்தில் நபி(ஸல்) நோன்பு வைக்கவில்லை என்று ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள்.
மேலும் அந்நாளின் சிறப்புகள் பற்றி பரப்பப்படும் பொய்யான ஹதீஸ்களை பார்போம்:
லயிப் ஹதீஸ்-1. ரஜப்-27 நபியாக அனுப்பப்பட்டதாக வரும் ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-2.ரஜப் மாதம் முதல் நாள் சிறப்பு தொழுகை தொழுவதாக வரும் ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-3.வாத்தில் ஆறாவதாக உள்ள வாசலின் பெயர் ரஜப் என்ற ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-4.ரஜப் அல்லாஹ்வின் மாதம் என்று வரும் ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-5.நபி(ஸல்) அவர்கள் ரமலானுக்கு பிறகு ரஜப் மற்றும் ஷாபானை தவிற வேறு எந்த நாட்களிலும் நோன்பும் வைத்ததில்லை என்று வரும் ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-6.ரஜப் மாதத்தில் ஓதும் சிறப்பு துஆ என்ற ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-7.சொர்கத்தில் உள்ள ஒரு ஆற்றின் பெயர் ரஜப் என்று வரும் ஹதீஸ்.
லயிப் ஹதீஸ்-8. ஏனைய மாதங்களைவிட ரஜப்ப மாதத்திற்கு சிறப்பு இருப்பதாக வரும் ஹதீஸ்....

இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் ஆகும்.
நன்மையை எதிர்பார்த்து செய்யும் அமல்களை நபி(ஸல்) காட்டிதந்த வழிமுறையில் செய்வதால் மட்டுமே மறுமையில் பயன் தரும்.
அதை தவிற்த்து நபி(ஸல்) காட்டிதராத அமல்களை செய்வோம் என்றால் அது நமக்கு கடுகளவுகூட பயன் தராது...
மாறாக தீமையை பெற்று தரும்.
மாறாக தீமையை பெற்று தரும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4
அறிவிப்பவர் : அபூஹுரைரா(ரலி)
நூல்கள் : புகாரீ 110, முஸ்லிம் 4
மேலும் நபி(ஸல்) எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும்.
நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது மார்க்கம் என்ற பெயரில் புதிதாக உருவானவை ஆகும்.
புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560

நேரான பாதையில் வாழ்ந்து மரணிக்கககூடிய பாக்கியத்தை நம் அனைவருக்கும் அல்லஹ் தந்தருள் புறிவானாக...
அ.மன்சூர் வேலூர்
Comments
Post a Comment