அகீகா என்றால் என்ன?
ஏக இறைவனின் திருப்பெயரால்...
அகீகா என்றால் ஆட்டை அறுத்து குர்பானி கொடுப்பதாகும்!
குழந்தை பிறந்த ஏழாவது நாளில் ஆட்டை அறுத்து குர்பானி கொடுப்பது நபிவழியாகும்.
இது கட்டாய கடமை இல்லை வசதி உள்ளவர்கள், நன்மையை எதிர்பார்த்து இந்த வணகத்தை செய்யலாம்:
இது கட்டாய கடமை இல்லை வசதி உள்ளவர்கள், நன்மையை எதிர்பார்த்து இந்த வணகத்தை செய்யலாம்:
குழந்தையானது அதன் அகீகாவுடன் அடைமானம் வைக்கப் பட்டுள்ளது.
குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்.
திர்மிதி 1442.
குழந்தை பிறந்து ஏழாவது நாளில் ஆடு அறுக்கப்படும், குழந்தைக்கு பெயர் சூட்டப் படும், அதன் தலை முடி களையப்படும்.
திர்மிதி 1442.
ஒவ்வொரு குழந்தையும் அகீகாவுக்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளது. குழந்தையின் சார்பில் ஏழாம் நாளில் ஆட்டை அறுக்க வேண்டும்.
அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
புஹாரி-5472
அன்று முடியை மழித்து பெயர் சூட்ட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்,.
அறிவிப்பவர் : சமுரா (ரலி)
புஹாரி-5472
இன்னும் அபூதாவூத்,நஸாயீ, இப்னுமாஜா, அஹ்மத் போன்ற நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.
ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும், பெண் குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் அறுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்களிடம் அகீகாவைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் யாருக்கேனும் குழந்தை பிறந்து அதற்காக அவர் ஆட்டை அறுத்து வணக்கம்புரிய விரும்பினால் அவர் ஒரே மாதிரியான இரண்டு ஆட்டை ஆண்குழந்தைக்கும் ஒரு ஆட்டை பெண்குழந்தைக்கும் கொடுக்கட்டும்
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : அஹ்மத்-6530
என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல் : அஹ்மத்-6530
கடன் வாங்கியோ,வட்டிக்கு வாங்கியோ இந்த வணகத்தை செய்யக்கூடாது!
இந்த வணகத்தை செய்யாததால் நாம் குற்றவாளியாக ஆகமாட்டோம்!
இந்த வணகத்தை செய்யாததால் நாம் குற்றவாளியாக ஆகமாட்டோம்!
அதே போல் அகீகா என்பது பிறந்த ஏழாம் நாள் கொடுக்கப்பட வேண்டிய சட்டம்,
அதை மற்ற நாட்களில் செய்வதாலோ!
அல்லது வசதி வரும் காலத்தில் செய்வதாலோ!
அல்லது வயதான காலத்தில் செய்வதாலோ!
அதற்கான நன்மையை பெற முடியாது.
அதை மற்ற நாட்களில் செய்வதாலோ!
அல்லது வசதி வரும் காலத்தில் செய்வதாலோ!
அல்லது வயதான காலத்தில் செய்வதாலோ!
அதற்கான நன்மையை பெற முடியாது.
சிலர் வயதான காலத்தில் செய்கிறார்கள்,
வசதி வந்ததும் செய்கிறார்கள், இப்படி செய்வதை நபிகள் நாயகம்(ஸல்) நமக்கு கற்றுகொடுக்கவில்லை.
வசதி வந்ததும் செய்கிறார்கள், இப்படி செய்வதை நபிகள் நாயகம்(ஸல்) நமக்கு கற்றுகொடுக்கவில்லை.
அகீகா என்பது குழந்தைப் பிறந்த ஏழாவது நாள் கொடுக்கப்பட வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் கூறுகிறது.
ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.
ஆனால் சில பலவீனமான ஹதீஸ்களில் பதினான்காம் நாளும் இருபத்து ஒன்றாம் நாளும் கொடுக்கலாம் என்று வந்துள்ளது.
அகீகாவாக கொடுக்கப்படும் பிராணி ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல்: பைஹகீ
பாகம்-9 பக்கம்-303
இது பலவீனமான செய்தி.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல்: பைஹகீ
பாகம்-9 பக்கம்-303
இது பலவீனமான செய்தி.
மேலும் அலி (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவருக்கும் பிறந்த ஹசன் மற்றும் ஹுஸைன் (ரலி) அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் அகீகா கொடுத்துள்ளார்கள்.
குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
குழந்தையின் உறவினர்கள் யார் வேண்டுமானலும் அகீகா கொடுக்கலாம் என்பதை இதன் மூலம் அறியலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் மற்றும் ஹுஸைன் ஆகியஇருவருக்காக அகீகா கொடுத்தார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : நஸயீ-4142
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : நஸயீ-4142
அகீகா கொடுக்கும் போதே குழந்தைக்கு பெயர் வைத்து அதன் முடியை களைவது நபிவழியாகும்.
ஒவ்வொரு குழந்தையும் அதற்கான அகீகாவுடன் பிணையாக்கப்பட்டுள்ளது.
அது பிறந்த ஏழாவது நாளில் ஆட்டை அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜூன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் -2455
அது பிறந்த ஏழாவது நாளில் ஆட்டை அதற்காக அறுக்கப்படும். அதன் முடி களையப்பட்டு அதற்கு பெயர் சூட்டப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : சமுரா பின் ஜூன்துப் (ரலி)
நூல் : அபூதாவூத் -2455
சிலர் பிறந்த குழந்தையின் முடியை எடுத்து அதன் எடைக்கு நிகரான வெள்ளியை தர்மம் செய்வார்கள் அது நபிவழி என்று சிலர் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.
ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.
ஆனால் அவை அனைத்தும் பலவீனமான செய்தியாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களுக்கு ஓரு ஆட்டை அகீகாவாக கொடுத்தார்கள். தனது மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி ஃபாத்திமாவே ஹசன் தலையை மழித்து அவரது முடியின் எடைக்கு நிகராக வெள்ளியை தர்மம் செய்வீராக என்று கூறினார்கள். எனவே நான் அதை நிறுத்துப்பார்த்தேன். அதனுடைய எடை ஒரு திர்ஹம் அல்லது சில திர்ஹம்களின் எடையாக இருந்தது.
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)
அறிவிப்பவர் : அலீ (ரலி)
நூல் : திர்மிதி (1439)
இந்த ஹதீஸை பதிவுசெய்த இமாம் திர்மிதி அவர்களே இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர் அறுந்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஏனெனில் இதனுடைய அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் அலீ என்பவர் அலீ (ரலி) அவர்களை சந்திக்கவில்லை.
இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.
இந்த வகையில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது தொடர்பாக வரும் அனைத்துச் செய்திகளும் ஆதாரமற்றவையாக இருப்பதால் இதை செயல்படுத்த வேண்டியதில்லை.
மேலும் ஹஸன்(ரலி) மற்றும் ஹுஸைன்(ரலி) அவர்களுக்காக நபி(ஸல்) அவர்கள்தான் ஆட்டை அறுத்து அகீகா கொடுத்துள்ளார்கள்.
ஃபாத்திமா (ரலி) அவர்களால் அகீகா கொடுக்கமுடியாத சூழ்நிலை இருந்ததாலே நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனது பேரன்மார்களுக்கு அகீகா கொடுத்துள்ளார்கள்.
இந்நிலையில் வசதியற்ற நிலையில் இருந்த ஃபாத்திமா(ரலி) அவர்களுக்கு தலைமுடிக்கு நிகராக வெள்ளியை கொடுக்க எப்படி சொல்லியிருப்பார்கள்?
இஸ்லாம் மார்கம் நமது சக்திகேற்ப தவிற வேறு எந்த வழியிலும் சிரமம் படுத்துவதில்லை.
அகீகா விஷயத்தில் மார்க சட்டம் இதுவே(அல்லாஹ் அறிந்தவன்).
-அ.மன்சூர் வேலூர்
Comments
Post a Comment