ரஃபேல் நாயகன் அனில் அம்பானிக்கு லன்டன் நீதிமன்றம் வைத்த செக்!


3 சீன வங்கிகளுக்கு 100 மில்லியன் டாலர் செலுத்த அனில் திருபாய் அம்பானி குழுமத்தின்  தலைவர் அனில் அம்பானிக்க லன்டன் நீதிமன்றம் நிர்ணயித்த காலக்கெடு (27.03.20)வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்தது.

இந்த தொகையை செலுத்தத் தவறியதற்கு, அனில் அம்பானிக்கு கடுமையான தாக்கங்கள் ஏற்படுத்தக்கூடும், இதனால் இந்தியாவிலோ அல்லது வேறு இடங்களிலோ அவரது தனிப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்.

அம்பானி வியாழன்கிழமை நீதிமன்றத்தில் இறுதியாக பணம் செலுத்தும் காலக்கெடுவை ஒத்திவைக்க கடைசி முயற்சியை மேற்கொண்டுள்ளார், ஆனால் நீதிமன்ற நீதிபதியோ “had no real prospect of success and is totally without merit" இது  தகுதியற்ற வழக்கு என்று சொல்லி முடித்துவிட்டார்.

அவரின் நிறுவனங்களான Reliance communications Ltd நஷ்டத்தில் இயங்குவதாகவும், அதை ஒழுங்குப்படுத்த 3 சீன வங்கியில் கடன் வாங்கப்பட்டதாக அம்பானி கூறியுள்ளார்.

மேலும் நீதிபதி நடத்திய விசாரணையில் அம்பானி தனது வறுமையை மன்றாடி, தனது சொத்துக்களின் மதிப்பு பூஜ்ஜியமாகக் குறைந்துவிட்டதாகவும், தொடர்ச்சியான முதலீடுகள் நஷ்டத்திலயே சென்றதாக நிறுவனங்கள் மீது பழியை போட்டார்.

நீதிபதி டேவிட் வாக்ஸ்மென், உங்கள் குடும்பம் செல்வந்த குடும்பம் என்பது எங்களுக்கு தெறியும் அதனால், அனில் அம்பானி அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் பணத்தை திருப்பி செலுத்த வேண்டும் என்று தீர்ப்பளித்தார்.

அனில் அம்பானி எனது குடும்பம் பாரம்பரியமானது, இருந்தாலும் எனது குடும்பம் எனக்கு உதவாது, குடும்பத்தினர் உதவுவார்கள் என்று எனக்கு நம்பிக்கையில்லை என்று கூறினார்.

இதில் நாம் தெறிந்துகொள்ள வேண்டிய விஷயம் என்னவென்றால்?

1.இழுத்து மூடிய YES BANK அனில் அம்பானிக்கு 12,500 கோடி கடன் வழங்கியுள்ளது. அதே காலக்கட்டத்தில் திருபாய் அனில் அம்பானி குழுமம் ரானா கபூர் குடும்பத்திற்கு ரூ: 1,100 கோடி வழங்கியுள்ளது இதை Enforcement Directorate (ED) புலன் விசாரனையில் குறிப்பிட்டுள்ளனர்.

2. இன்று YES BANK நிலமை என்னவென்று நாம் அனைவருக்கும் தெறியும்,
இவருக்கு 12,500 கடன் வழங்கிய பணம் யாருடையது? சிறுக சிறுக சேமித்து வைத்த ஏழைகளுடையது, 1,100 கோடியை ரானா கபூர் குடும்பத்திற்கு தாரைவார்த்தியது யார் பணம்?
இன்று சர்வசாதாரனமாக ஊருகாய்போடகூட தகுதியில்லாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வங்கி நஷ்டத்தில் செல்லுகிறது அதனால் தனியாருக்கு விற்பனை செய்கிறோம் இழுத்து மூடுகிறோம் என்று கடந்து செல்கிறார்கள்!

3. லன்டன் நீதிமன்றங்களை போல் ஏன் இவர்கள் மீது இந்திய நீதிமன்றங்கள் கடுமையான நடவடிக்கை எடுக்க தயங்குகிறது? மோடி மத்திய அரசு ஏன் இவர்கள் மீது இறக்கம் காட்டுகிறது?

4.1 ரூபாய்க்குகூட உதவாத இந்த அனில் அம்பினியிடம் ஏன் ரஃபேல் போர் விமானங்களை அதிக பணத்திற்கு தயாரிக்க மோடி அரசு ஒப்பந்தம் செய்துள்ளது?

4. YES BANK போல இந்தியாவில் உள்ள இன்னும் எத்தனை வங்கிகளில் அனில் அம்பானி நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான கோடிகளை கடனாக வாங்கி திரும்ப செலுத்தாமல் இருக்கிறதோ???

5. இதுபோன்ற கார்பரேட்களுக்கு கோடி கணக்கில் தூக்கி கொடுங்க பிறகு நஷ்டமாகிடுச்சுனு அவன் ஊர விட்டு ஓடிருவான், பிறகு இவனுங்க வாங்குன கடனகளையெல்லாம் வெயிலிலும், மழையிலும் இரத்த வியர்வையை சிந்தி உழைக்கும் அப்பாவி மக்கள் மீது தினித்துவிடுவீர்கள்.

6. வாங்கிய கடனை இவர்களிடம் திருப்பி கேட்க துப்பில்லாமல், கொரோனா நிவாரன நிதி என்று நாட்டு மக்களிடம் கையேந்தி நிற்பது எவ்வளவு கேவளம், அவமானம் தெறியுமா??? இந்த தீய சக்திகளை நாட்டு மக்கள் அடையாளம் காணவும், இந்த தகவலை அனைத்து மக்களுக்கும் சேர்க்கவும்.
YES BANKல் அனில் அம்பானி 12,500 கடன் வாங்கியது ரானா கபூர் குடும்பத்திற்கு 1,100 வழங்கிய ஆதாரம்:
https://timesofindia.indiatimes.com/business/india-business/ed-summons-anil-ambani-over-rs-12500-crore-loan-in-yes-bank-probe/articleshow/74664456.cms

லன்டன் நீதிமன்றம் அனில் அம்பானிக்கு வைத்த செக் ஆதாரம்:
https://www.google.com/url?sa=t&source=web&rct=j&url=https://m.economictimes.com/industry/telecom/telecom-news/anil-ambani-asked-to-pay-100-million-by-uk-court/amp_articleshow/74014412.cms&ved=2ahUKEwi9pZndnsLoAhWS3eAKHX9TDpQQFjAIegQIBBAC&usg=AOvVaw3pI2FxyamvP2ctL0Cw9pML&ampcf=1

அ.மன்சூர் வேலூர்
Mansoor Vellore

Comments