பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ

முன்னுரை:
உலகில் பிறக்கும் இலட்சக்கணக்கான பிள்ளைகள் எந்த நிலையில் பிறப்பார்கள் என்று இறைவனே நன்கறிந்தவன்!

நம்மை, நம் பெற்றோர்கள் வாயிலாக முஸ்லிமான தாயின் வயிற்றில்,
முஸ்லிமாக பிறக்க வைத்த அல்லாஹ்வுக்கே புகழ்!

எனது கட்டூரையின் தலைப்பு பெற்றேருக்கு செய்ய வேண்டிய கடமை பற்றியதாகும், பெற்றோருக்கு செய்ய வேண்டிய கடமை என்று சொன்னவுடன், நம் அனைவரின் சிந்தனையிலும் முதலில் வருவது?
தாய்,தந்தையரை பராமரிக்க வேண்டும், அவர்களுக்கு உணவளிக்க வேண்டும், அவர்களுக்கு உடையளிக்க வேண்டும் அவர்களிடம் அழகான முறையில் நடந்துகொள்ள வேண்டும் என்பவைகள்தான்!

இது பொதுவான ஒன்று, பெற்றோர்களை பிள்ளைகள்தான் பராமரிக்க வேண்டும் அதில் மாற்றுகருத்தில்லை, அது ஒவ்வொரு பிள்ளைகளின் மிதுள்ள கடமை…

அல்லாஹ் பெற்றோர்களிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அறிவுறுத்துவதை பாருங்கள்;

என்னைத் தவிர யாரையும் வணங்காதீர்கள்! பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள்! என்று உமது இறைவன் கட்டளையிட்டுள்ளான். உம்முடன் இருக்கும் தாய் தந்தை ஆகிய அவ்விருவருமோ, இருவரில் ஒருவரோ முதுமையை அடைந்து விட்டால் அவ்விருவரை நோக்கி 'சீ' எனக் கூறாதீர்! அவ்விருவரையும் விரட்டாதீர்! மரியாதையான சொல்லையே அவ்விருவரிடமும் கூறுவீராக!
திருக்குர்ஆன்  17:23

அன்புடன் பணிவு எனும் சிறகை அவ்விருவருக்காகவும் தாழ்த்துவீராக!சிறுவனாக இருக்கும் போது என்னை இருவரும் பராமரித்தது போல் இறைவா! இவ்விருவருக்கும் அருள் புரிவாயாக! என்று கேட்பீராக!
திருக்குர்ஆன்  17:24

இது பிள்ளைகளுக்கான அல்லாஹ்வின் அறிவுரை….

கருவரையிலிருந்து வெளியேறி அவன் தனது காலில் ஊன்றி நிற்கும்வரை ஒரு பாதி வாழ்கை முடிந்துவிடுகிறது, தனது சொந்த காலில் நிற்க ஆரம்பித்ததிலிருந்து பெற்றோருக்கு மரணம் வரும் வரை மிதம் பாதி வாழ்கை கழிகிறது,
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள உறவு உலக வாழ்கையின் இருபாதிகளாக இவ்வாறே முடிவுபெற்றுவிடுகிறது…

நமது வாழ்கையில் ஒரு பாதியில் பெற்றோருக்காக என்ன செய்தோம் என்பதில்தான் உண்மையான மனதிருப்தியில் இறைவனை சந்திக்க முடியும்...

உண்மையில் பிள்ளைகள் பெற்றோருக்கு செய்யும் கடமைகளில் சிறந்தது,
தனது பெற்றோரை மறுமையில் சொர்கத்திற்கு அழைத்து செல்வதுதான், அதற்காக ஒரு பிள்ளை உலக வாழ்கையில் முயற்சி செய்யுமென்றால்!
இம்மை வாழ்கையில் பெற்றோர்களின் பராமரிப்பு மற்றும கடமை பற்றிய கேள்விக்கே இடமில்லை! ஏனென்றால் அவன் தனது பெற்றோரை மறுமைக்கு தயார் படுத்துகிறான்.

பெற்றோருக்கு உணவளித்து, பராமரிப்பது அந்த சாலிஹான பிள்ளைக்கு பிரச்சனையில்லை!
மாறாக அந்த பிள்ளை தனது தாய்,தந்தையை சொர்கத்திற்கு அழைத்து செல்வதை இலட்சியமாக கொன்டுள்ளது.

எனது இந்த கட்டூரையில் தொகுப்புரையாக பெற்றோரை மறுமைக்கு தயார் படுத்தும் பிள்ளைகள் பற்றியும், அதை தவறிய பிள்ளைகளை  பற்றியும்தான் பார்க்க இருக்கிறோம்.

தொகுப்புரை;

தனது பெற்றோருக்கு நன்மை செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தினோம். அவனை அவனது தாய் சிரமத்துடன் சுமந்தாள். சிரமத்துடனே ஈன்றெடுத்தாள். அவனைச் சுமந்ததும், பால் குடியை மறந்ததும் முப்பது மாதங்கள். அவன் தனது பருவ வயதையும் அடைந்து நாற்பது வயதை அடையும் போது "என் இறைவா! எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்தவும், நீ பொருந்திக் கொள்ளும் நல்லறத்தை நான் செய்யவும் வாய்ப்பளிப்பாயாக! எனக்காக எனது சந்ததிகளைச் சீராக்குவாயாக! நான் உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நான் முஸ்லிம்களில் ஒருவன்'' என்று கூறுகிறான்.
திருக்குர்ஆன்  46:15


இந்த வசனத்தில் மனிதனுடைய ஒட்டுமொத்த வாழ்கையின் அத்தியாயத்தை இரத்திணச்சுருக்கமாக அல்லாஹ் குறிப்பிட்டுவிட்டான்!

இறைவா எனக்கும் என் பெற்றோருக்கும் நீ செய்த அருட்கொடைக்கு நன்றி செலுத்த வாய்பளிப்பாயக என்றால் என்ன???

இந்த வார்த்தையை சாலிஹான பிள்ளைகளை தவிற வேறு யாராலும் சொல்ல முடியாது!

இப்படிபட்ட வார்த்தையை சொல்லி ஒரு பிள்ளை தனது பெற்றோருக்காக பிரார்த்திக்கும் என்றால் உண்மையில் அந்த பெற்றோர்கள் பாக்கியசாலிகள்!

என்னை என் பெற்றோர்கள் முஸ்லிமாக பெற்று, வளர்த்துவிட்டார்கள் அது மிகப்பெரிய அருட்கொடை அந்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்துகிறேன்!
என் பெற்றோருக்கு அருள் புறி இறைவா!

என்னை முஸ்லிமாக பெற்று வளர்த்த, என் பெற்றோரை முஸ்லிமாக மரணிக்கச்செய் இறைவா! என்று எத்தனை பிள்ளைகள் நமது பெற்றோருக்காக அல்லாஹ்விடம் இறைஞ்சி பிரார்தனை செய்திருப்போம்??

எங்கள் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டோரையும் விசாரணை நடைபெறும் நாளில் மன்னிப்பாயாக!
திருக்குர்ஆன் 14:41


என் இறைவா! என்னையும், எனது பெற்றோரையும், நம்பிக்கை கொண்டு எனது வீட்டில் நுழைந்தவரையும் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் மன்னிப்பாயாக”
திருக்குர்ஆன் 71 : 28

இந்த துஆக்களை அல்லாஹ் கற்று தருகிறான், உங்கள் பெற்றாருக்காக அல்லாஹ்விடம் இப்படி இறைஞ்சுங்கள் என்று!

இவைகளெல்லாம் தனது பெற்றோர்களுக்கு பிள்ளைகள் செய்யும் சிறந்த நற்செயல்கள்!

இதுபோன்ற பிரார்தனைகளை பெற்றோருக்காக செய்ய எத்தனை பேருக்கு அல்லாஹ் வாய்பை கொடுத்துள்ளான்? என்பதை சிந்திக்க வேண்டாமா?

எத்தனை பெற்றோருக்கு இந்த பாக்கியங்கள் கிடைத்திருக்கும்? என்பதையும் சிந்திக்க வேண்டாமா?

நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் இந்த பாக்கியத்தை தரவில்லையே??

நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் இந்த மார்கத்தை உலகுக்கு எடுத்து சொன்னவர்!
அல்லாஹ் அவரைதான் இறுதி தூதராக தேர்வுசெய்து வாழ்கைநெறியை மனித இனத்துக்கு கற்றுகொடுத்தான்.

ஆனால்! அப்படிப்பட்ட மாமனிதருடைய பெற்றோரின் நிலை என்ன தெறியுமா?

ஒரு மனிதர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து என் தந்தை எங்கே இருக்கிறார் என்று கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நரகத்தில் என்றார்கள். அவர் கவலையுடன் திரும்பிச் சென்றார். அவரை மீண்டும் அழைத்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என் தந்தையும், உன் தந்தையும் நரகத்தில் தான் இருப்பார்கள் என்று கூறினார்கள்.
நூல் : முஸ்லிம்521

படிக்ககூடய நமக்கு எவ்வளவு வேதனையாக உள்ளது, அல்லாஹ்வின் தூதருடைய தந்தைக்கு நரகமா?? என்று…

நமக்கே இதை ஜீரனிக்க முடியவில்லையே நபிகள் நாயகம்(ஸல்) அவர்களுக்கு எப்படி இருந்திருக்கும்?
அவர்கள் இந்த வேதனையில் எப்படி கடந்திருப்பார்கள்?

சிந்திக்க கடமைப்பட்டுள்ளோம்!

ஒரு முறை நபிகள் நாயகம்(ஸல்) தனது பெற்றோர் மண்ணறையில் அமர்ந்து தாடி நனையும் அளவிற்கு அழுது கொன்டிருக்கிறார்கள்,

சுற்றியுள்ள நபிதோழர்களுக்கு  கவலையை ஏற்படுத்தும் அளவிற்கு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் அழுகின்றார்கள்,

நபிதோழர்கள் அல்லாஹ்வின் தூதரே ஏன் இப்படி அழுகிறீர்கள்? என்று கேட்க...

என் தாய்,தந்தையரின் பாவங்களுக்காக மன்னிப்பு கேட்டு பிரார்த்திக்க அல்லாஹ்விடம் நான் அனுமதி கேட்டேன். அல்லாஹ் மறுத்து விட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல் : முஸ்லிம் 2303

உலகில் உள்ள ஏனைய பெற்றோரின் இம்மை, மறுமை நலவை உலகிற்கு பாடம் நடத்திய நபிகளாரின் பெற்றோருக்கு இந்த நிலை என்றால் நமது பெற்றோரின் நிலை???

நபிகளாரின் பெற்றோருக்கு, நரகம் என்ற வேதனை இருக்கின்றது என்பதை நினைத்து! உள்ளம் எவ்வளவு வேதனை பட்டிருக்கும்!?
எவ்வளவு துடித்திருக்கும்!?

இத்தனைக்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தந்தை பிறக்கும்போதே இறந்தவர், தாயார் ஐந்து வயதில் இறந்தவர்.

பெற்றோரின் பாச உணர்வு என்னவென்றே தெறியாத பருவம்!
அந்த நிலையிலும் தனது பெற்றோர்களுக்காக நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கவலைபட்டு கண்ணீர் சிந்தி அழுகிறார்கள் என்றால்???

நம்மை வளர்த்து ஆளாக்கி, நமது துன்பங்களை தனது துன்பமாக கருதி, வறுமையிலும் நமக்கு உணவளித்து, சீராட்டி, பாராட்டி நம்மை சிரிக்க வைத்து, நம்மை வளர்த்த நமது பெற்றோர்கள்????

இன்றும் இரத்த வியர்வை சிந்தி எத்தனை பெற்றோர்கள் பிள்ளைகளை வளர்கிறார்கள் தெறியுமா?

அப்படிபட்ட பெற்றோர்களுக்கு உலகில் நன்மை செய்து, மறுமையில் சொர்கத்திற்கு கூட்டி செல்லவேண்டாமா?

பெற்றோர் சம்மந்தமாக நபிஸல் அவர்கள் கூறும் அழகான செய்தியை பாருங்கள்…

நபி(ஸல்) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதரே! நற்செயல்களில் சொர்க்கத்திற்கு மிகவும் நெருக்கமானது எது? என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் தொழுகையை உரிய நேரத்தில் நிறைவேற்றுவது என்று கூறினார்கள்.

அடுத்து எது? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டேன். அதற்கு ”தாய் தந்தையருக்கு நன்மை புரிவது” என்றார்கள்.

எது? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டபோது, ”அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவது” என்றார்கள்.
நூல் : முஸ்­லிம் (138)

தாய் தந்தையருக்கு நன்மை புறிவது நற்செயல்களில் ஒன்று என்று நபிஸல் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்,

இஸ்லாத்தில் எவ்வளவோ நற்காரியங்கள் உள்ளது, அந்த பட்டியலில் பெற்றோருக்கு நாம் செய்யும் நன்மைகளுக்குகூட நற்கூலி கிடைக்கிறது!

ஒரு பிள்ளையை பெற்று,வளர்த்து ஆழாக்குவது சாதாரண ஒன்றல்ல?
கடும் போராட்டத்தால் அவர்கள் சிந்திய வியர்வை துளிகளின் தியாகத்தில் வளர்ந்த மரம்தான் நாம்! தண்ணீர் ஊற்றி வளர்த்த அவர்களுக்கே நாம் நிழல்தர மறந்தோம் என்றால்! மறுமையில் இறைவனின் நிழல் எப்படி கிடைக்கும் நமக்கு???

தாயின் கருணை எப்படியாபட்டது என்பதை பாருங்கள்!

ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
ஒரு பெண்மணி தன்னுடைய இரண்டு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை.
எனவே, அதை அவரிடம் கொடுத்தேன். அவர் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்துவிட்டார்.
அவர் அதிலிருந்து சாப்பிடவில்லை.
பிறகு அவர் எழுந்து சென்றார்.
அப்போது நபி(ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும் அவர்கள், இவ்வாறு பல பெண் குழந்தைகளால் சோதிக்கப்படுகிறவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள' எனக் கூறினார்கள். (புகாரி-1418)


கடும் பசியிலும் தனக்கு உணவு இல்லையென்றாலும் பிள்ளைகாக எடுத்து வைக்கும் சிந்தனை உணர்வு உலகத்தில் தாயை தவிற வேறு யாருக்குமில்லை!


இந்த பெற்றோர்களுக்கா நாம் உணவளிக்க தயங்குகிறோம்?


இப்படிபட்ட நமது பெற்றோர்களுக்கு நாம் இம்மையில் பணிவிடை செய்து, மறுமையில்  வெற்றியின் பாதைக்கு அழைத்து செல்லவேண்டாமா?


மரணத்திற்கு பிறகு எந்த உறவுக்கும் கிடைக்காத ஒரு மிக பெரிய வாய்ப்பை பெற்றோர்களுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கிறான்….


மனிதன் மரணித்துவிட்டால் மூன்று விடயங்களை தவிர மற்ற அனைத்து அமல்களும் அவனை விட்டும் நின்று விடுகின்றன.


1.அவன் செய்த நிலையான தர்மம் (ஸதகதுல் ஜாரியா)
2.மக்களுக்காக விட்டுச் செல்லும் பயன் படும் கல்வி அறிவு.
3.அவனுக்காக துஆச்செய்யும் சாலிஹான பிள்ளைகள்.
இவைகளால் அவனுக்கு மரணத்திற்குப் பிறகும் கூலி கிடைத்துக் கொண்டே இருக்கும் என நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் அபு ஹுரைரா(ரலி)
ஆதாரம்: முஸ்லிம்-1631
பெற்றோர்களுக்கு இறந்த பிறகும் சென்று சேரும் நலவின் பட்டியலில் பிள்ளைகளின் துஆ உள்ளது…
இன்றைக்கு பெரும்பாலன பிள்ளைகளை பார்க்கிறோம்! மார்ககல்வி அறிவு இல்லாத காரணத்தால் பெற்றோர்கள் இறந்த பிறகு அவர்களுக்கு செய்ய வேண்டிய கடமை என்னவென்று தெறியாமல் ஹஜரத்மார்களின் உதவியை நாடி செல்லும் சூழ்நிலையை நாம் கண்கூடாக பார்க்கிறோம்!
அந்த ஹஜரத்மார்கள் மார்கம் என்ற பெயரில் நன்மைக்கு பதிலாக பாவத்தை செய்கின்றனர்!
இறந்த பின்பு பெற்றோருக்கு இது தான் நாம் செய்ய வேண்டிய சடங்குகள் என்று பல அனாச்சாரங்ளை ஹஜரத்மார்கள் சொல்லி  கண்மூடிதனமாக செய்ய வைக்கின்றனர், அவைகள் நமது பெற்றோருக்கு ஒருபோதும் சென்று சேராது, மாறாக நம்முடைய பாவகணக்கில் வந்து சேர்ந்துவிடும்!
மூன்றாம் நாள் பாத்தியா,
பத்தாம் நாள் பாத்தியா,
நாற்பதாம் நாள் பாத்தியா,
ஒரு வருட கத்தம் பாத்திய என்று பெற்றோருக்கும் பிள்ளைக்கு உள்ள தொடர்புகளை கத்தம் பாத்தியாவோடு (கத்தம்) செய்துவிடுகின்றார்கள்!


சிலர் வருடத்திற்கு ஒரு முறை இறந்த தினத்தன்று கபருக்கு சென்று பூமாலைகளை ஜோடித்து பாத்தியா ஓதி திரும்பிவிடுவார்கள்,
இதுதான் மார்ககல்வி அறிவு இல்லாத பிள்ளைகள் பெற்றோரின் இறப்புக்கு பிறகு செய்யும் சடங்குகள்.
இது இறந்த பிறகு கடுகளவுகூட நமது பெற்றோருக்கு சென்று சேராது!
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் உள்ள தொடர்பு ஒரு வருட பாத்தியாவிலயே முடிவுபெற்றுவிடுகிறது!


மண்ணறை வாழ்கையைில் பெற்றோர்கள் எப்படி வாழ்கிறார்கள் என்று நாம் கவலைப்படமாட்டோம்!
மண்ணறையில் அவர்களின் நிலை என்னவென்று நாம் சிந்திக்க மாட்டோம்!
இது தான் நம்மை வளர்த்து, ஆளாக்கிய பெற்றோருக்கு செய்யும் நன்றிகடனா??
நமக்கு மரணம் வரும் வரையில் அவர்களுக்காக நாம் பாவமன்னிப்பு கேட்கவேண்டாமா?
ஒவ்வொரு வேலை தொழுகைக்கு பிறகும் அவர்களின் இம்மை,மறுமை வாழ்கைகாக அல்லாஹ்விடம் பிரார்த்திக்க வேண்டாமா?


பெற்றோரின் இறுதி காலங்களில் மார்க சிந்தனையிலயே நாட்களை கழிக்க உறுதுனையாக இருக்க வேண்டாமா?
மன்னிப்பு இல்லையென்று தெறிந்தும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தமது பெற்றோரின் மன்னிப்புக்காக அழுது துஆ கேட்க அனுமதி கேட்டார்களே! நாம் கேட்க வேண்டாமா?
நபி தோழர்களும்,தோழியர்களும் தமது பெற்றோர்களின் மறுமை வாழ்கைக்காக எவ்வளவு கவணம் எடுத்துள்ளார்கள் என்று பாருங்கள்;
ஆயிஷா(ரலி) அறிவித்தார்:
ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, என்னுடைய தாய் திடீரென்று மரணித்துவிட்டார். அவர் அப்போது பேச முடிந்திருந்தால் நல்ல தர்ம காரியம் செய்திருப்பார்.
எனவே, அவருக்காக நான் தர்மம் செய்தால் அதற்கான நன்மை அவரைச் சேருமா? என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் 'ஆம்' என்றனர்.
ஸஹீஹ் புகாரி-1388


இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்:
ஜுஹைனா கூட்டத்தைச் சார்ந்த ஒரு பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் வந்து,
என் தாய் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்து அதை நிறைவேற்றாமல் இறந்துவிட்டார். அவர் சார்பாக நான் ஹஜ் செய்யலாமா?என்று கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள், 'ஆம்! அவர் சார்பாக நீ ஹஜ் செய், உன் தாய்க்குக் கடன் இருந்தால் நீ தானே அதை நிறைவேற்றுவாய். எனவே, அல்லாஹ்வின் கடன்களை நிறைவேற்றுங்கள், கடன்கள் நிறைவேற்றப்படுவதற்கு அல்லாஹ் அதிகம் உரிமை படைத்தவன்' என்றார்கள்.
ஸஹீஹ் புகாரி-1858

இறந்த பெற்றோர்கள் மனதால் நினைத்த அமல்களை!
ஆர்வத்துடன் சஹாபாக்கள் மற்றும் சஹாபிய பெண்மணிகள் போட்டி போட்டு செய்துள்ளார்கள்!

நாம் நம்முடைய சிந்தனையை பெற்றோரின் இம்மை நலவுக்காகவும்,மறுமையில் அவர்கள் வெற்றியடைய வேண்டும் என்பதற்காகவும் முயற்சி செய்ய  வேண்டும்!
நமக்கு மரணம் வரும்வரை அவர்களுக்காக அல்லாஹ்விடம் துஆகேட்ட வண்ணம் இருக்க வேண்டும் என்பதினை அனைவரின் கவணத்திற்கும் கொன்டுவந்தவனாக தொகுப்புரையை நிறைவு செய்கிறேன்.

முடிவுரை:

உலகில் அனைத்திற்கும் நிவாரணம் உண்டு,
மறுமையில் நாம் செய்த அமல்களை தவிற வேறு எதற்கும் நிவாரணம் இல்லை!

நாமும் நன்மைகளை செய்வோம், நமது பெற்றோரையும் நன்மை செய்யுமாறு ஏவுவோம்!

அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். அப்போது இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?
திருக்குர்ஆன்  89:23

பெற்றோர்களை நரகத்திலிருந்து பாதுகாப்போம்!
அந்த பெற்றோர்கள் மூலம் சுவர்கத்திற்கு செல்வோம்!

என்னை முஸ்லிமாக வளர்த்து, எனக்கு மார்கத்தை கற்றுகொடுத்த, என் பெற்றோருக்கு  இறைவன் உயர்ந்த சொர்கமான ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸை வழங்குவானாக!

அன்புடன்:
அ.மன்சூர் அலி(ஜித்தா)
சவுதி-0531355322

Comments