திருமணத்திற்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக செல்பவரா நீங்கள்?

திருமணத்திற்கு அழைப்பு வந்ததும் முதல் ஆளாக செல்பவரா நீங்கள்?


அப்படியென்றால் இந்த அறிவுரையை உங்களுக்குதான் இறைவன் வழங்குகிறான்....


பெண்களுக்கு அவர்களின் திருமணக்கொடைகளை மனப்பூர்வமாகக் கொடுங்கள்! 

[திருக்குர்ஆன் 4:4]


இந்த வசனத்தை படித்த நீங்கள் யோசிப்பீர்கள்?

இந்த வசனம் திருமணம் செய்பவர்களுக்கானதே!? திருமணத்திற்கு செல்லக்கூடிய நமக்கு என்ன அறிவுரை இதில் உள்ளது என்று நீங்கள் நினைக்கலாம்!


நிச்சயம் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்ளும் மக்களுக்கு இதில் மறைமுகமான ஒரு அறிவுரை உள்ளது...


மஹர் மணக்கொடையை கட்டாயம் திருமணம் செய்யக்கூடிய பெண்ணுக்கு மணமகன் சார்பாக வழங்க வேண்டும் என்பதை இறைவன் அழுத்தமாக பதிவு செய்கிறான்.


எல்லா திருமணங்களிலும் இது நடக்கிறதா என்று கேட்டால் கேள்விகுறிதான், சிலர் பள்ளிவாசலின் லட்டர்பேடில் திருமண சான்றிதழ் வாங்குவதற்கு பெயருக்கு ஆயிரும் ரூபாய் மஹர் என்று எழுதுவார்கள், இது மஹரில் சேருமா? மஹர் என்பது மணமகளின் உரிமை அதை அவள்தான் முடிவு செய்வாள் பள்ளிவாசல் முடிவு செய்ய எந்த அதிகாரமும் இல்லை.


மேலும் பலர் லட்சக்கணக்கில் பணம் வீடு, வாகனம், நகை என வரதட்சனை வாங்குகிறார்கள் இதை லட்டர்பேடில் பதிவு செய்யும் பள்ளிவாசல்களும் கண்டிப்பதில்லை, வெட்கம் இல்லாமல் எல்லா திருமணங்களிலும் கலந்து கொள்பவர்களும் கண்டுகொள்வதில்லை!


திருமண அழைப்பு வந்தவுடன் எங்க கல்யாணம்? எத்தனை மணிக்கு போலாம்? என்ன டிரஸ் போடலாம்? மட்டன் பிரியாணியா? சிக்கன் பிரியாணியானு எத்தனை மனக்கேள்விகள் எழும்??????


திருமணத்தில் அல்லாஹ் சொல்லக்கூடிய சட்டங்களை பின்பற்றுவார்களா? என்று எத்தனை பேர் சிந்தித்தீர்கள்???


மணமகன் குடும்பத்தினரிடம் எவ்வளவு மஹர் கொடுத்து திருமணம் பேசியுள்ளீர்கள்? மணமகன் சார்பாகதானே  திருமணம் செய்யப்படுகிறது? வலிமா விருந்து மணமகனுடையதுதானே? நபிவழியில்தானே திருமணம்? என்று எத்தனை பேர் கேட்டிருப்போம்?


நீங்கள் செல்லக்கூடிய திருமணம் வரதட்சனையாக இருந்தால் அந்த பாவம் திருமணம் செய்யும் அவர்களுக்கு மட்டுமல்ல கலந்து கொள்ளும் உங்களுக்கு சேரும் என்பதை கவணத்தில் கொள்ள வேண்டும்.


வரதட்சனையால் எத்தனை குடும்பங்கள் நாசமாகியுள்ளது? எத்தனை பெண் பிள்ளைகளுக்கு திருமணம் நடக்காமல் இருக்கிறது? 


இறைவன் சொல்வதுபோல மஹர் கொடுத்து மணமகனின் செலவில் திருமணம் செய்தால் வரதட்சனையால் திருமணம் ஆகாமல் வாழ்க்கையை துலைத்து நிற்கும் ஆயிரக்கணக்கான அப்பாவி பெண்களின் வாழ்க்கை மலரும் அல்லவா???


இனியாவது நீங்கள் கலந்து கொள்ளும் திருமணங்களில் இறைவனின் சட்டத்தை பின்பற்றுகிறீர்களா? என்ற கேள்வியை கேளுங்கள்! வரதட்சனை திருமணங்களாக இருந்தால் அதை புறக்கணியுங்கள்! 


வரதட்சனை வாங்கும் எண்ணம் இருந்தால் அதை அடியோடு அழித்துவிடுங்கள்.


இல்லையென்றால் அல்லாஹ்வின் எச்சரிக்கை இதோ:


அல்லாஹ்வை அஞ்சிக் கொள்” என்று அவனிடம் கூறப்பட்டால், (அவனது) கவுரவம் அவனைப் பாவத்தில் தள்ளி விடுகிறது. எனவே அவனுக்கு நரகமே போதுமானது. தங்குமிடத்தில் அது கெட்டது. 

[திருக்குர்ஆன் 2:206]


அ.மன்சூர்(வேலூர்)



Comments