சிந்திக்காத மனிதர்கள் இவர்கள்தான்!

 சிந்திக்காத மனிதர்கள் இவர்கள்தான்!


ஒரு நன்மை அல்லது ஒரு நற்செயல் இதை நாம் செய்வது இறைவனின் திருப்தியை பெறுவதற்காக என்றால்? நாம் செய்யும் அந்த நற்செயல்  இறைத்தூதரின் வழிகாட்டுதலா என்று அவசியம் சிந்திக்க வேண்டும்!


இன்று ஏராளமான மார்கத்திற்கு முரணான விஷயங்களை கண்மூடிதனமாக செய்துவருகிறோம்!


மனோ இச்சை மற்றும் முன்னோர்களின் வழிமுறையை இறைவன் திருப்தி பெறுவான் என்ற அடிப்படையிலயே செய்துவருகிறோம்.


உதாரணத்திற்கு இறந்தவர்களின் வீடுகளில் மய்யத்திற்கு அருகாமையில் அமர்ந்து குர்ஆன் ஓதுவது, அடக்கம் செய்த இடத்தில் பேரித்தம்பழம் சாக்லேட் கொடுப்பது, மூன்றாம்நாள் ஃபாத்தியா என்ற பெயரில் அரிசியில் பழங்களை பிசைந்து ஃபாத்தியா ஓதி படைப்பது போன்ற ஏராளமான மூடநம்பிக்கை மற்றும் புதிய காரியங்களை இறைவன் பொருந்தி கொள்வான் என்ற நம்பிக்கையிலயே செய்து வருகின்றனர்.


இவர்கள் எது நன்மையை தரும் என்று செய்கிறார்களோ அது மார்கத்தில் உள்ளதா? இல்லையா? என்பதை சிந்திக்கவில்லை!


எத்தனையோ உலக விஷயங்களை நோக்கி பயணிக்கும் நாம் மறுமை வெற்றியை தீர்மானிக்கும் திருக்குர்ஆனையும் மார்க சட்டங்களை தினமும் படிக்க முயற்சி செய்வதில்லை, அப்படி மார்கத்தை படித்திருந்தால் நிச்சயம் முட்டாள்தனமான காரியங்களை நோக்கி நகராமல், எல்லா விஷயங்களையும் இறைவன் நமக்கு வழங்கிய அறிவின் மூலம் சிந்திப்போம்...


இனியாவது இறைவன் திருமறையில் நம்மிடம் என்ன பேசுகிறான்? உத்தமதூதர் முகமதுநபி(ஸல்) அவர்கள் நம் வாழ்வியலுக்கான சட்டங்களை எப்படி சொல்லியுள்ளார்? என்பதை படிப்போம்! இல்லையென்றால் கீழே உள்ள வசனத்திற்கு பொருத்தமானவர்களாக நாம் ஆகிவிடுவோம்.


அல்லாஹ்விடம் உயிரினங்களில் மிகக் கெட்டவர்கள் சிந்திக்காத செவிடர்களும், ஊமையர்களுமே ஆவர்.

[திருக்குர்ஆன் 8-22]


அ.மன்சூர்(வேலூர்)



Comments