ஸலாம் என்றால் என்ன?

ஏக இறைவனின் திருப்பெயரால்...

முஸ்லிம்கள் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று ஒருவரை ஒருவர் சந்திக்கும்போது சொல்வார்கள்!

அதற்கான அற்தம் பெரும்பாலானவர்களுக்கு தெறியாது..

"ஸலாம்" என்றால் அமைதி,

அஸ்ஸலாமு அலைக்கும் (السلام عليكم) உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக என்பது இதன் பொருளாகும். இது அரபி வாக்கியமாகும்.

"ஸலாம்" என்பது பிரார்தனை, இறைவனுடைய அமைதி நம் மீதுஏற்பட ஒருவருக்கொருவர் பிரார்த்திப்பது.

இது ஒரு வகையில் மனஅமைதியை நமக்கு ஏற்படுத்தும்.

இந்த "ஸலாம்" என்ற வார்த்தைக்கு இன்னும் ஒரு தனிசிறப்பு உள்ளது...

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து 'அஸ்ஸலாமு அலைக்கும்'என்று கூறினார். நபியவர்கள் அவருக்கு பதில் ஸலாம் கூறினார்கள். பின்னர் அவர் உட்கார்ந்தார்.  நபி(ஸல்) அவர்கள் இவருக்கு பத்து நன்மைகள் என்று கூறினார்கள்.

பிறகு மற்றொருவர் வந்தார். அவர் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்' என்று கூறினார்.
நபி (ஸல்) அவர்கள் அவருக்கு பதில் கூறியவுடன் அவர் அமர்ந்தார். நபியவர்கள் இவருக்கு இருபது நன்மைகள் என்று கூறினார்கள்.

பிறகு மற்றொருவர் வந்தார். அவர் 'அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாதுஹ்‎' என்று கூறினார். அவருக்கு நபியவர்கள் பதில் கூறினார்கள். பிறகு அவர் உட்கார்ந்தார். நபி (ஸல்) அவர்கள் இவருக்கு முப்பது நன்மைகள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இம்ரான் பின் ஹசைன் (ரலி)
நூல் : அபூ தாவூத் (4521)

இஸ்லாத்தில் சிறந்த பண்பு ஸலாம் சொல்வது..

ஒருவர் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம் இஸ்லாத்தில் சிறந்தது எது? எனக் கேட்டதற்கு பசித்தோருக்கு நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதுமாகும் என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ்
இப்னு அம்ர்(ரலி)
ஸஹீஹ் புகாரி-12

இன்னும் இந்த "ஸலாத்திற்கு" நிறைய கூடுதல் சிறப்புகள் உண்டு.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்தஹூ.

Comments