வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்யக்கூடியவர்களா நீங்கள்?

வட்டிக்கு பணம் வாங்கி வியாபாரம் செய்யக்கூடியவர்களா நீங்கள்?


வட்டிக்கு விட்டு பணம் சம்பாதிப்பவர்கள்,

வட்டிக்கு வாங்கி வியாபரம் செய்பவர்கள், 

வட்டிக்கு வாங்கி முதலீடி  செய்பவர்கள்,

வட்டிக்கு வாங்கி படிக்கக்கூடியவர்கள்,

வட்டிக்கு வாங்கி திருமணம் செய்பவர்கள், வட்டிக்கு வாங்கி வீடு கட்டக்கூடியவர்கள், வட்டியை ஆதரிப்பவர்கள் என வட்டியின் வாடையில் வாழக்கூடிய அனைவரையும் அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்!


வட்டியை உண்போர் மறுமை நாளில் ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். “வியாபாரம் வட்டியைப் போன்றதே’’ என்று அவர்கள் கூறியதே இதற்குக் காரணம். அல்லாஹ் வியாபாரத்தை அனுமதித்து வட்டியைத் தடை செய்து விட்டான். தமது இறைவனிடமிருந்து தமக்கு அறிவுரை வந்த பின் விலகிக் கொள்பவருக்கு முன் சென்றது உரியது. அவரைப் பற்றிய முடிவு அல்லாஹ்விடம் உள்ளது. மீண்டும் செய்வோர் நரகவாசிகள். அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.

[அல்குர்ஆன் 2:275]


அல்லாஹ் இந்த வசனத்தில் சாதாரண எச்சரிக்கையை விடவில்லை கடுமையான எச்சரிக்கையை விடுகிறான்.


வட்டிக்கு கொடுப்பவர்கள் அல்லாஹ்வை அஞ்சிகொள்ளுங்கள் இல்லையெனில் மறுமையில் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கி கொள்வீர்கள். அல்லாஹ்வுடை தண்டனை மிகக்கடுமையாக இருக்கும்.


இரண்டாம் நிலையில் உள்ள மக்கள் நாங்கள் என்ன வட்டிக்கா விடுகிறோம்? வட்டிக்கு வாங்கிதானே எங்கள் பிரச்சனைகளை சரி செய்கிறோம் என்று நியாயம் பேசுகின்றனர்.


இதோ அவர்களுக்கான எச்சரிக்கை:


வட்டி வாங்குபவரையும், வட்டி கொடுப்பவரையும் அதை எழுதுபவரையும் அதன் இரு சாட்சிகளையும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.

[அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) ஆதாரம்: முஸ்லிம்  4177]


யார் ஒருவர் வட்டிக்கு வாங்கி செலவு செய்கிறாரோ அவருக்கு இறைவனின் சாபம் உள்ளது.


வட்டிக்கு வாங்கிதான் வாழ வேண்டுமென்ற அவசியமே இல்லை, அந்த சூழ்நிலையை நாம்தான் உருவாக்குகிறோம்!


வட்டிக்கு வாங்காமல் வியாபாரம் செய்யனும், வீடு கட்டனும் இன்னபிற பிரச்சனைகளை சரி செய்யனும் என்ற சிந்தனை நமக்கு இருந்தால் நிச்சயம் இறையுதவி நமக்கு கிடைக்கும்...


வட்டி ஷைத்தானின் வழி அதை வாங்கிதான் நமது பிரச்சனையை சரி செய்யனும் என்று உங்களுடைய உள்ளத்தில் வந்துவிட்டால் ஷைத்தான் உங்களின் உள்ளத்தை திசை திருப்பிவிட்டு அவனின் பாதையை உங்களுக்கு காண்பித்துவிடுவான்.


வட்டியின் வாடை இல்லாமல் நான் எனது பிரச்சனையை சரி செய்வேன் என்ற சிந்தனை உங்களுக்கு ஏற்பட்டால் நிச்சயம் அல்லாஹ் உங்களுக்கு அவனின் நேரான பாதையை காண்பிப்பான்...


நமது சிந்தனையை சரி செய்ய வேண்டும், அல்லாஹ்வின் மீது முழு நம்பிக்கை வைக்க வேண்டும் அதுதானே இறைநம்பிக்கை? எந்நிலையிலும் அல்லாஹ் மட்டுமே நமக்கு போதுமானவன் என்ற நிலை நம்மிடம் இல்லையென்றால் பிரச்சனைகளுக்கு தீர்வு எப்படி கிடைக்கும்???


இனியாவது வட்டியின் வாடையை நுகராமல் அதில் இருக்கக்கூடியவர்கள் வெளியேற முயற்சி செயய்யுங்கள்....


அ.மன்சூர் (வேலூர்)



Comments