ஹாஜி என்று பெயருக்கு பின்னால் பயன்படுத்தலாமா?
ஹாஜி என்று பெயருக்கு பின்னால் பயன்படுத்தலாமா?
இந்திய முஸ்லிம்கள் ஹஜ்ஜிக்கு சென்று வந்தால் தனது பெயருக்கு பின்னால் ஹாஜி என்ற பட்டத்தை சேர்த்துவிடுவதை நம்மால் காணமுடிகிறது.
இது எந்தளவிற்கு பார்க்கப்படுகிறது என்றால்? ஹஜ்ஜிக்கு சென்று வந்தால் தனது பெயருக்கு பின்னால் "ஹாஜி" என்ற பட்டம் சூட்டுவது முஸ்லிம்களின் சடங்குபோல என்று பிறமத மக்களும் பாமர முஸ்லிம்களும் பார்க்கப்படுகிறார்கள்.
ராவுத்தர் மறக்கையார் என்றிந்தவர் ஹஜ்ஜுக்கு சென்று வந்தவுடன் ஹாஜியாராக மாறி விடுகிறார்!
இதனாலயே திருமண பத்திரிக்கைகளில் நான் ஹஜ் செய்துவிட்டேன் என்பதை குறிக்க பெயருடன் "ஹாஜியை" குறிப்பிடுகின்றனர்.
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஹஜ் செய்துள்ளார்கள் அவர்களுடன் ஆயிரக்கணக்கான சஹாபாக்கள் ஹஜ் செய்துள்ளார்கள் அவர்கள் யாரும் தனது பெயருக்கு பின்னால் "ஹாஜி" என்று அழைத்து கொள்ளவில்லை அழைத்துகொள்ளுமாறு கட்டளை இடவுமில்லை.
அப்படியிருக்க இந்த பெயருக்கு பின்னால் அழைக்கப்படும் இந்த பட்டம் நமக்கு எதற்கு?
இது புகழை குறிக்காதா?
பெருமையை குறிக்காதா?
நபி(ஸல்) காலத்தில் மதினாவாசிகள் ஹஜ்ஜுக்கு சென்று வந்தவுடன் தனது வீட்டு முன்வாசல் வழியாக நுழையமாட்டார்கள் மாறாக பின்வாசல் வழியாக நுழைவார்கள் காரணம்? ஹஜ்ஜுக்கு சென்று வந்தால் அதை ஒரு வழக்கமாக கடைப்பிடித்தனர் அதை கண்டித்து அல்லாஹ் வசனம் இறக்கினான்...
இஹ்ராமுடைய நிலையில் உங்கள் வீடுகளுக்குள் நீங்கள் அவற்றின் பின்வாசல் வழியாக வருவதில் நன்மை இல்லை. மாறாக, இறைவனை அஞ்சுபவரே நன்மை உடையவராவார். வீடுகளுக்குள் அவற்றின் முன்வாசல்கள் வழியாகவே வாருங்கள். நீங்கள் வெற்றி பெறுவதற்காக அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்!
[திருக்குர்ஆன் 2:189]
ஹஜ் என்பது ஒரு கடமையான வணக்கம் அதை இறைவனுக்காகவும் மறுமை வெற்றிக்காகவும் மட்டுமே செய்ய வேண்டுமே தவிற புகழுக்காக, பெருமைக்காக இருக்கக்கூடாது.
"ஹாஜி" என்றால் அல்லாஹ்வின் விருந்தாளி என்று பொருள், மக்கா வரக்கூடிய அனைவரையும் அந்த மக்கள் அப்படிதான் அழைப்பார்கள் நீங்கள் மக்காவிற்கு உம்ராவே அல்லது தொழுக சென்றாலோ உங்ளை "ஹாஜி" என்ற பெயரில்தான் அழைப்பார்கள்.
மேலும் ஹாஜி என்றால் ஒரு ஹஜ் செய்தவராகவும் அல்-ஹாஜ் என்றால் பல ஹஜ் செய்தவராகவும் அழைக்கப்படுகிறது இது அனைத்தும் பெருமையை குறிக்கும் பெருமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நான் உங்கள் மீது மிகவும் பயப்படுவது சிறிய இணை வைத்தலாகும்! அப்போது நபித்தோழர்கள், “அல்லாஹ்வின் தூதரே, சிறிய இணை வைத்தல் என்றால் என்ன? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ரியா (முகஸ்துதி)” என்று பதிலளித்தார்கள். நீங்கள் உங்கள் அமல்களை உலகத்தில் யாருக்குக் காட்டுவதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள். அவர்களிடம் கூலி கிடைக்குமா என்று பாருங்கள் என்று அடியார்களின் அமல்களுக்குக் கூலி கொடுக்கும் நாளில் அல்லாஹ் கூறி விடுவான்.
அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரதியல்லாஹு அன்ஹு)
நூல்: அஹ்மத்: 23630-22528
அ.மன்சூர் (வேலூர்)
Comments
Post a Comment