வேலூர் விமான நிலையம்(Vellore Airport)

இன்னும் சில மாதங்களில் பயன்பாட்டிற்கு வரவுள்ள வேலூர் உள்நாட்டு விமான நிலையம்...



சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை அப்துல்லாபுரத்தில் விமான பயிற்சி தளமாக இருந்த வானூர்தி நிலையத்தை உள்நாட்டு விமான நிலையமாக மாற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வருவது வேலூர் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதனால் வேலூர் மக்களின் நீண்ட நாள் கனவு நினைவாகிறது.
வேலூருக்கு விமான நிலையம் வருவதால் நடக்கவிருக்கும் சில பயன்கள்:

1.உலகதரம் வாய்ந்த CMC மருத்துவமனைக்கு வடநாடு மற்றும் கேரளா வெளிநாடான பங்களாதேஷிலிருந்து ஆயிரக்கனக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வேலூர் வருகின்றனர் அவர்கள் இலகுவாக இனி விமானம் மூலம் வேலூர் வரலாம்.

2. VIT கல்லூரிக்கு உலகளவிலிருந்து மாணவ,மாணவிகள் வந்து படிக்கின்றனர் அவர்கள் இனி விமான மூலம் இலகுவாக வேலூர் வரலாம்.

3.வேலூருக்கு விமான நிலையம் வருவதால் சுற்றுலா மற்றும் ஆன்மீகரீதியான பயன்பாட்டார்கள் அதிககரிக்க வாய்ப்பு உள்ளது அதோடு புதிய சுற்றுலா தளங்கள் உருவாகும்.

4. வேலூரை சுற்றியுள்ள பகுதி உள்மாவட்டம்  மற்றும் அருகாமையில் உள்ள வெளிமாவட்டமான திருப்பத்தூர், திருவண்ணாமலை,கிருஷ்ணகிரி, ஆம்பூர்,வாணியம்பாடி, ஆற்காடு,இராணிப்பேட்டை போன்ற ஏராளமான பகுதி மக்களுக்கு வேலூர் விமான நிலையம் பயனாக இருக்கும்.

5. வெளிநாடுகளில் இருக்கும் வேலூர் மக்கள் இனி சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்து அங்கிருந்து உள்நாட்டு விமானம் மூலம் வேலூருக்கு வரலாம்.

6. வேலூர் அப்துல்லாபுரம் வளர்ச்சியடைந்து நகரம் விரிவடையும், விமான நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகள் வேகமாக முன்னேரும்.

7.புதிய தொழிற்சாலை,வியாபாரம்,சுற்றுலா,
கல்வி,ஆன்மீகம், என இப்படி பல நன்மையான விஷயங்கள் வேலூர் விமான நிலையம் வருவதால் நடக்கவுள்ளது.

சொந்த மண்ணில் விமான நிலையம் வருவதை மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன்
-அ.மன்சூர் வேலூர்

Comments