வேலூர் மாநாகரம் விரிவடைய சில டிப்ஸ்


வேலூர் மாநாகரம் விரிவடைய மற்றும் போக்குவரத்து நெரிசல் குறைய மாநகராட்சிக்கு சில ஆலோசனை...



வேலூர் சதுப்பேரியில் அமைந்துள்ள ஐடா ஸ்கடர் பகுதி வேகமாக வளரும் பகுதியாக உள்ளது.
எதிர்காலத்தில் CMC சார்ந்த மருத்துவமனைகள், பள்ளிகூடங்கள், கல்லூரிகள் வர நிறைய வாய்ப்புள்ளது.
அதுமட்டுமல்லாமல் அந்த பகுதியில் மனைகளை மக்கள் ஆர்வமாக வாங்கியும் வருகின்றனர்.

அதே சமயம் சஒதுப்பேரி வழியாக வேலூரின் புறநகர் பகுதியான ஊசூர் மற்றும் செம்பேடு, ஜமால்புறம்,அப்துல்லாபுரம்,தொரப்பாடி மற்றும் சென்னை-பெங்களூர் தேசிய நெடு்சாலைகளை சுலபமாக கடக்க முடியும்.

சதுப்பேரி சாலைகளை விரிவாக்கம் செய்து ஐடா ஸ்கடர் மற்றும் கொணவட்டம் மதினா நகரை இணைத்து பேருந்துகள் செல்ல போக்குவரத்து சாலையை அமைத்தால் சதுப்பேரி முதல் அப்துல்லாபுரம் வரை நிறைய புதிய வீடுகள், அலுவலகங்கள் வர ஏராளமான வாயப்பு உள்ளது.
அதுமட்டுமல்லாமல் கொணவட்டம்,சேன்பாக்கம், முள்ளிப்பாளையம்,கருகம்பத்தூர் பகுதிகளுக்கு வேலூர் கோட்டையை சுற்றி வராமல் ஐடாஸ்கடர் மதினாநகர் வழியாக இலகுவாக கடந்து போகலாம்.
இதனால் ஆர்.என்.பாளையம், கஸ்பா,ரவுண்டானா,வசந்தபுரம் பகுதிகள் கடும் போக்குவரத்து நெரிசலிலிருந்து தப்பிக்க முடியும்.

சதுப்பேரி மற்றும் கொணவட்டம் புதிய சாலை இணைந்தால் வேலூர் மாநகரம்  பெரியளவில் விரிவடையும் என்பதில் கடுகளவும் ஐயம் இல்லை.

"கோடு போட்டால் ரோடு போடுவோம்" என்ற பழமொழியை நினைவில் கொண்டு,
வேலூர் மாநகரம் சதுப்பேரி மற்றும் கொணவட்டத்தை இரண்டு வழிச்சாலையாக உருவாக்கினால்.
பொதுமக்கள் தயக்கமின்றி வேலூர் வெளிப்புற பகுதிகளில் குடியேறுவார்கள்.

அன்புடன்
அ.மன்சூர் வேலூர்

Comments