சாதனைகளாக்கப்படும் அமல்கள்!
ஏக இறைவனின் திருப்பெயரால்...
சமீப காலமாக சமூக வளைத்தளங்களில் சில சாகச வீரர்கள் கடலுக்கு அடியில் தொழுகை நடத்துவதுபோலவும், நோன்பு திறப்பதுபோலவும், உத்திர பிரதேசத்தில் ஒரு பெண் மரத்தின்மேல் தொழுவது போன்ற காட்சிகளை பார்த்து வருகிறோம்...
அதை சிலர் பெருமையாகவும்,
சிலர் சாதனையாகவும், சிலர் அதை இஸ்லாத்தின் அத்தாட்சியாகவும், அதிசயமாகவும் பரப்பிவருவதையும் பார்க்கிறோம்!
இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்மந்தம்?
இதற்கு இஸ்லாம் என்ன சொல்கிறது?
இதுதான் இஸ்லாத்தின் அளவுகோலா?
இவர்கள் செய்வது நியாம்தானா?
இதை நாம் ஷேர் செய்து பரப்புவது சரிதானா?
என்பதை பார்ப்போம்:
தன்னைத்தானே சிரமப்படுத்திகொள்ள இஸ்லாம் அனுமதிக்கிறதா என்பதை பார்ப்போம்...
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا ۚ لَهَا مَا كَسَبَتْ وَعَلَيْهَا مَا اكْتَسَبَتْ
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.
அவர் செய்த நன்மை அவருக்குரியது.
அவர் செய்த தீமையும் அவருக்குரியதே.
திருக்குர்ஆன் 2:286
இந்த திருக்குர்ஆன் வசனத்தில் அல்லாஹ் தெளிவாக குறிப்பிடுகிறான்,
ஆன்மீகம் என்பது ஒருவரை சிரமப்படுத்தி துன்புறுத்தி செய்ய வேண்டிய நிர்பந்தமும்,அவசியமும் இல்லை என்று.
நீங்கள் என்ன நன்மை செய்கிறீர்களோ அது தான் உங்களுக்கு கிடைக்கும்,
நீங்கள் என்ன தீமை செய்கிறீர்களோ அதற்கான கூழிதான் கிடைக்கும்!
நிர்பந்தம், வற்புறுத்தல் என்பது அறவே இஸ்லாத்தில் கிடையாது என்பதை இந்த வசனத்தின் வாயிலாக அறிந்துகொள்ள முடிகிறது.
அவர்களின் சக்திகுட்பட்டு என்றால் என்ன?
இறைவன் நமக்கு வழங்கிய பலம் என்ன?
நம்முடைய பலத்தை தான்டி அவன் எந்த ஒரு நன்மைகளையும்(அமல்) அவன் நம்மிடம் எதிர்ப்பார்ப்பதில்லை என்பதைதானே குறிக்கிறது?
وَالَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا أُولَٰئِكَ أَصْحَابُ الْجَنَّةِ ۖ هُمْ فِيهَا خَالِدُونَ
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரே சொர்க்கவாசிகள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள். எவரையும் அவர்களின் சக்திக்கு மீறி நாம் சிரமப்படுத்துவதில்லை.
திருக்குர்ஆன் 7:42
ஒரு இறைவனை நம்பி, அவன் சொன்ன கடமைகளை செய்து, நன்மைகள் செய்தாலே போதுமான ஒன்று, அதன் மூலம் சொர்கத்திற்கு இலகுவாக போகலாம்!
உங்கள் சக்திக்கு மீறிய நன்மைகள் மூலம் நீங்கள் சொர்கம்போக வேண்டிய அவசியம் இல்லை!
நமக்கு என்ன சக்தியை அவன் கொடுத்துள்ளானோ அந்த பலத்தின் மூலமாக மட்டுமே நன்மைகள் செய்யுங்கள், அதுவே உங்களுக்கு போதுமான ஒன்று என்பதை
படைத்த இறைவனே சொல்லும் பொழது தன்னைதானே ஏன் துன்புறுத்திகொள்ள வேண்டும்?
தொழுகை, நோன்பு என்பது அழகான ஒரு அமல்! அதை கேளியாகவும், விளையாட்டாகவும் அறவே செய்யக்கூடாது...
அதை கடலுக்கடியில் செய்யக்கூடியவர்கள் இறையச்சத்தின் அடிப்படையில் செய்கிறார்கள் என்றாலும் அதை மார்கம் அனுமதிக்கிறதா?
நோன்பை அல்லாஹ் கடமையாக்கியதன் காரணம்!
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِن قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
நம்பிக்கை கொண்டோரே!
நீங்கள் இறைவனை அஞ்சுவதற்காக உங்களுக்கு முன்சென்றோர் மீது கடமையாக்கப்பட்டது போல் உங்களுக்கும் குறிப்பிட்ட நாட்களில் நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது.
திருக்குர்ஆன் 2:183
நோன்பின் நோக்கம்"இறையச்சம்" இந்த இறையச்சத்தின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டதுதான் நோன்பு எனும் கடமை...
இந்த நோன்பின் சட்டங்கள் அனைத்தையும் நாம் பார்த்தோம் என்றால்! மனிதர்களை தன்னைதானே வற்புறுத்திகொள்ளுமாறு எந்த ஒரு இடங்களிலும் காணமுடியாது...
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நோன்பு பாவங்களிலிருந்து காக்கின்ற கேடயமாகும் எனவே,
நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்!
முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்!
யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் 'நான் நோன்பாளி' என்று இருமுறை கூறட்டும்!
-என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 30. நோன்பு(1894)
நோன்பு என்பது நாம் அன்றாட செய்யக்கூடிய பாவங்களிலிரிந்து தன்னை தற்காத்துகொள்ளும் பாதுகாப்பு கேடயாமாக இருக்கின்றது!
நோன்பு என்பது ஒரு சிறந்த ஆன்மீக பயிற்சி!
மனிதனை மனிதனாக வாழ செய்யும் ஒரு அரண்!
இறைவன் நம் கண் முன்னே இல்லை என்ற நிலையிலும் அவன் நம்மை கண்கானிக்கின்றான் என்ற சிந்தனையை தூன்டுகூடிய ஒரு வாழ்கைநெறி!
உணவு,பானம்,இல்லறம் இவைகள் அனைத்தும் நமக்கு அனுமதி இருந்தும், அவைகள் நம் கண்ணெதிரே இருந்தும் அவைகளை நாம் உண்ண மாட்டோம்,
மனவைியிடம் இல்லறத்தில் ஈடுபடமாட்டோம்!
ஏன் என்றால் இறைவன் நம்மை கண்கானிக்கின்றான் என்ற "இறையச்சம்" நம் உள்ளத்தில் ஆழமாக குழிதோன்டி புதைக்கப்பட்டிருக்கும்...
இறைவன் அனுமதித்த ஹலாலாக்கப்பட்ட பெருட்களை ரமலான் மாதம் பகல் நேரங்களில் நாம் தொடுவதில்லையென்றால்! நோன்பு எப்படிப்பட்ட ஒரு சீர்திருத்தத்தை ஏற்படுத்துகிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.
ஒவ்வொரு வருடமும் ரமலான் மாதத்தில் இப்படிப்பட்ட நோன்பை நோற்பவர்கள் "இறையச்சம்" அவர்களின் உள்ளத்தில் ஆழமாக குடிகொன்டதின் விளைவாக அவர்களிடம் இருந்த தீய பழக்கங்களை வாழ்நாளில் செய்யவே கூடாது என்று எத்தனை நபர்கள் திருந்தியுள்ளார்கள் புகை,மது,விபச்சாரம்,வட்டி, இப்படி தீமையான காரியங்ளை செய்தவர்கள் அதைவிட்டும் ஒதுங்கி ஓடகூடியாதாக இந்த நோன்பு மிகப்பெரிய ஒரு மாற்றத்தை ஏற்படுத்துகிறது!
இப்படிப்பட்ட உயர்ந்த சீர்திருத்த பணியை இந்த நோன்பு இறையச்சத்தின் அடிப்படையில் செய்து வருகிறது,
நோன்பின் மூலம் இப்படி ஒரு அழகிய பாடத்தைதான் நாம் கற்க வேண்டும்....
இதை கடல் ஆழத்தில் சாதனையாக செய்வதால் இதை செய்பவர்களுக்கும், நோன்பு இருப்பவருக்கும், இதை பார்பவர்களுக்கும் என்ன பயன்???
மேலும் நபிகள் நாயகம்(ஸல்) சொல்கிறார்கள்
நீங்கள் நோன்பு இருந்தால் முட்டாள்தனமான காரியங்களை செய்யாதிர்கள் என்று சொன்னார்கள்!
இந்த காரியமானது இறையச்சத்தின் அடிப்படையில் செய்யப்பட்டதா?
இல்லை முட்டாள்தனத்தை காட்டுவதற்கு செய்யப்பட்டதா?? என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
சாதனைகளை அமல்களுடன் ஒப்பிடும்பொழுது அது முட்டாள்தனமாகவே கருதப்படும்...
நாம் நோன்பிலிருந்து அதன்மூலம் பெறும் பாடம் மற்றும் ஒழுக்கங்களை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப்படுத்தி, இறையச்சத்தை வளர்த்து காட்டுவதில்தான் உண்மையான சாதனை உள்ளது!
கடல் ஆழத்தில் நோன்பு திறப்பதால் ஒரு பயணும் இல்லை?
இவ்வளவு தெளிவாக நபிகளார் நமக்கு அறிவுரை சொல்லியிருக்கிறார்கள்!
அப்படி இருந்தும் நாம் முட்டாள்தனமான காரியங்களை செய்யாமல் இருப்பதுதான் சிறந்தது..
தொழுகை என்பது ஒரு அழகான வணக்கம் அதை எப்படி அழகுற செய்ய வேண்டும் என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் ஒவ்வொரு நிலையையும் நமக்கு மிகத்தெளிவாக கற்றுகொடுத்துள்ளார்கள்...
தங்களின் தொழுகையில் ருகூவு ஸுஜுதைச் சரியாகச் செய்யாத ஒருவரைப் பார்த்த ஹுதைஃபா(ரலி) அவர் தொழுகையை முடித்த பின்னர், நீர் தொழவில்லை இந்த நிலையில் நீர் மரணித்தால் நபி(ஸல்) அவர்களின் ஸுன்னத்தின் மீது மரணித்தவராக மாட்டீர் என்று கூறினார்.
-என அபூ வாயில் அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 8. தொழுகை(389)
தொழுகையில் அனைத்து நிலைகளையும் ஒருவர் சரியாக நபிகளாரை பின்பற்றிதான் தொழவேண்டும், அதற்கு மாற்றமாக தொழுதால் தொழாதவரைபோல நபிதோழர்கள் கருதியுள்ளார்கள்...!
அப்படியிருக்க கடல் ஆழத்தில் ஒரு மனிதர் தொழுவதால் அனைத்து நிலையையும் சரியாக பேண முடியுமா? என்பதையும் சிந்திக்க வேண்டும்.
அதேபோல ஒரு பெண் மரத்தின்மேல் தொழுகிறாள்!
இப்படி தொழுக வேண்டிய அவசியம் என்ன?
பெண்களுக்கு இப்படிதான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுக கட்டளையிட்டார்களா?
பெண்கள் தங்கள் வீடுகளில் தொழுதாலே போதுமான ஒன்று...
அப்படி இருக்க உலகில் தொழுவதற்கு இடமே இல்லாததுபோல மரத்தின்மேல் தொழுவது வேடிக்கையாக உள்ளது!
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையின் ஒவ்வொரு நிலையையும், தொழுகைக்கான சலுகைகளையும் நமக்கு அழகாக கற்றுக்கொடுத்திருக்கும் பொழது நாம் ஏன் நம்மை சிரமப்படுத்திகொள்ள வேண்டும்?
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரவு நேர உணவு வைக்கப்பட்டுத் தொழுகைக்காக இகாமத்தும் சொல்லப் படுமானால் நீங்கள் உணவை முதலில் உண்ணுங்கள்.
என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு(671)
தொழுகைக்கான முக்கியத்துவத்தை இஸ்லாம் சொல்லும் அளவிற்கு வேறு எங்கும் பார்க்கமுடியாது அந்தளவிற்க்கு மிகமுக்கியமான ஒரு வணக்கம் தொழுகை!
அப்படிப்பட்ட தொழுகைக்கு முன்னால் உணவு தயாரானால் உணவுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று சொல்லும் மார்கம் கடலிலும், மரத்திலும் தன்னை சிரமப்படுத்தி தொழுக சொல்லுமா?
இப்னு உமர்(ரலி) அறிவித்தார்:
நபி(ஸல்) அவர்கள் அவசரமாகப் புறப்படுவதாக இருந்தால் மஃரிப் தொழுகையை தாமதப் படுத்தி இஷாவுடன் சேர்த்துத் தொழுவார்கள்
ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 18. கஸ்ருத் தொழுகை(1091)
பயணம் என்று தெறிந்த பிறகு நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தொழுகையை தாமதப்படுத்தி அடுத்த வேலை தொழுகையில் சேர்த்து தொழுதுள்ளார்கள் என்றால்!?
கடலுக்கு அடியில் நாம் நோன்பு திறந்து தொழுக வேண்டிய அவசியம் எங்கு உள்ளது?
என்பதை நாம் புறிந்து நடக்கவேண்டும்.
மாறும் உலகில் மாறத மார்கமாக இஸ்லாம் இருக்கின்றது!
அதை அனுதினமும் புதுமையுடன் உருவாக்கி மறுமையில் இறைவனிடம் பாவத்தை சுமந்தவர்களாக இருப்பதிலிருந்து நாம் கவணமாக இருக்க வேண்டும்
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் எச்சரிக்கை:
உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் குர்ஆன்,
வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும், செயல்களில் தீயவை மார்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படுபவை ஆகும்.
-ஜாபிர்(ரலி)
நூல் முஸ்லிம்(1573)
எந்த ஒரு வணக்கவழிபாடாக இருந்தாலும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டி தந்தவைகளை நம்முடைய வாழ்கையில் நடைமுறைப்படுத்துவோம்..
அல்லாஹ் நம் அனைவரயைும் நேரான பாதையில் செலுத்துவானாக...
ஆக்கம்
அ.மன்சூர் வேலூர்

Comments
Post a Comment