நபி(ஸல்) அவர்களின் "முடி" என்று மக்களை வழிகெடுக்கும் பாேலிகள்...
மக்களை வழிகெடுக்கும் போலிகள்:
இந்த தட்டில் உள்ள கருப்புநிறத்தில் இருப்பது நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் தலை முடியாம்...
இதை வருடம் வருடம் மீலாதுநபி என்ற பெயரில் மக்களின் பார்வைக்கு சில ஊர்களில் வைப்பார்கள்!
நபிகள் நாயகத்தின் தலைமுடிக்கு சிறப்பு உண்டா? உண்மயில் அது நபி(ஸல்) அர்களின் தலை முடிதானா?
முதலில் இஸ்லாம் நபிகள் நாயகம் பற்றி என்ன சொல்கிறது என்று பாருங்கள்,
முஹம்மத் உங்களின் ஆண்களில் எவருக்கும் தந்தையாக இருக்கவில்லை. மாறாக அல்லாஹ்வின் தூதராகவும், நபிமார்களில் முத்திரையாகவும் இருக்கிறார். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்.
(திருக்குர்ஆன் 33:40)
(திருக்குர்ஆன் 33:40)
முஹம்மது நபி(ஸல்) அவர்கள் எல்லாம் வல்ல இறைவனின் இறுதி தூதர் என்று இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
தூதர்களை பொறுத்தவரை அவர்களின் மிக முக்கியப்பணி ஏக இறைவனை மக்கள் மன்றத்தில் எடுத்துச்சொல்லி அவர்களிடமுள்ள தீமைகளை தடுப்பதே ஆகும்.
இதே பணியைதான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் 23 ஆண்டுகள் செய்தார்கள்.
இந்த 23 ஆண்டுகளில் எந்த ஒரு இடத்திலும் தன்னை உயர்த்தியும், தன்னை பெருமைப்படுத்தியும் பேசவில்லை, மாறாக எல்லா இடங்களிலும் தன்னை இறைவனின் அடிமையாகவே அறிமுகம் செய்கிறார்கள்.
மேலும் யாரும் நபிகளாரை புகழ்ந்து பேசினாலோ அல்லது உயர்த்தி பேசினாலோ அதை வெறுக்கவும், கடுமையாக எச்சரிக்கை செய்யவும் செய்தார்.
மேலும் ஆன்மிகத்தின் பெயரில் அறிவார்ந்த சித்தாந்தங்களையே மக்களுக்கு போதித்தார்.
மூடநம்பிக்கைகளை அறவே இல்லாமல் ஒழித்தவர் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள், அப்படிப்பட்ட மனிதர் மீது இன்று சில போலி மதவியாபாரிகள் அவதூறுகளை பரப்பியும், பொய்களை பரப்பியும் மக்களை வழிகெடுக்கின்றனர்.
நபிகள் நாயகத்தின் "முடி" அவர் பிறந்த ஊரான மக்காவிலும் அவர் வாழ்ந்த ஊரான மதினாவிலும் இல்லை.
மாறாக மதினாவிலும், மக்காவிலும் சர்வதேச அளவில் நபிகளார் காலத்து வரலாற்றை கொண்ட அருங்காட்சியகங்கள் உள்ளது அதில் நிறைய கடந்த கால பொருட்கள் உள்ளது அதில் நபிகளாரின் முடி என்று ஒன்றும் இல்லை.
அவர்களுக்கே கிடைக்காத "முடி" நம்மூர் பாய்களுக்கு எப்படி கிடைத்தது என்று தெறியவில்லை!
சரி ஒருவேளை நபிகளாரின் "முடி"யாகவே இருக்கட்டும் அதன் மூலம் என்ன நன்மை???
கடுகளவும் நன்மை இல்லை.
கடுகளவும் நன்மை இல்லை.
இவயெல்லாம் பணம் சம்பாதிக்கும் திருட்டுவழி...
நபி "முடி" என்று சொன்னதும் மக்கள் யோசிக்காமல் ஓடி வருவார்கள் அதன் மூலம் பணம் சம்பாதிக்கலாம் என்ற கேடுகெட்ட புத்தி தவிற வேறு ஒன்றும் இதில் இல்லை.
இதோ நபிகளாரின் எச்சரிக்கை...
நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: நஸயீ 1560
நூல்: நஸயீ 1560
நரகத்தை நோக்கி அழைக்கும் இதுபோன்ற புதுமைகளையும், பொய்களையும் சமுதாய மக்கள் புறக்கணிக்க வேண்டும்.
மேலும் அல்லாஹ் நபிகளாரை பற்றி சொல்கிறான்...
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.
(திருக்குர்ஆன் 33:21)
(திருக்குர்ஆன் 33:21)
அல்லாஹ்வின் தூதரிடத்தில் அழகான முன்மாதிரி உள்ளது என்றால் என்ன?
அறிவுபூர்வமான ஆன்மீக சிந்தனை,
நேரான சத்தியபாதையின் வழிகாட்டி,
நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் குணம்,
உயர்வுதாழ்வு இல்லாத அனைவரையும் சமமாக மதிக்கும் குணம்,
உலக ஆசைகளையும், ஆசாபாசங்களையும் வெறுக்கும் குணம், ஏழ்மையை விரும்பும் பண்பு இப்படி ஏராளமான அழகான முன்மாதிரிகளை கொண்ட ஒரு மனிதர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
நேரான சத்தியபாதையின் வழிகாட்டி,
நன்மையை ஏவி, தீமையை தடுக்கும் குணம்,
உயர்வுதாழ்வு இல்லாத அனைவரையும் சமமாக மதிக்கும் குணம்,
உலக ஆசைகளையும், ஆசாபாசங்களையும் வெறுக்கும் குணம், ஏழ்மையை விரும்பும் பண்பு இப்படி ஏராளமான அழகான முன்மாதிரிகளை கொண்ட ஒரு மனிதர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
இப்படிப்பட்ட ஆன்மீக சீர்திருத்தவாதியை நாம் எப்படி அணுக வேண்டும்? எப்படி பார்க்க வேண்டும்? மூடநம்பிக்கையை ஒழித்தவருக்கு, இன்று அவரின் பெயராலயே மூடநம்பிக்கையை செய்யலாமா???
இப்படி நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் மூடநம்பிக்கைகளை செய்வது வேதனை அளிக்கிறது.
நம் சிந்தனையை சீர் செய்ய திருக்குர்ஆனையும், நபிகளாரின் வழிகாட்டுதல்களையும் படிக்க முயற்ச்சிக்கவும்.
அ.மன்சூர் வேலூர்
Comments
Post a Comment