சென்னையில் தண்ணீர் பிரச்சனை தீற என்ன வழி?

இனியாவது அரசு படிப்பினை பெறுமா?

கடும் மழைவெள்ளத்தையும் பார்த்தாச்சு!
கடும் தண்ணீர் பஞ்சத்தையும் பார்த்தாச்சு!

ஏரியை தூர்வாரமல் கால்வாய்களை தூர்வாராமல் அலட்சியமாக இருந்ததால் அளவுக்கு அதிகமான தண்ணீர் கிடைத்தபோது அதை சேமிக்க முடியாமல் கடலுக்கு அனுப்பினோம்!

இன்று தண்ணீரை தேடி தெரு தெருவாக அலைகிறோம்!

இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

சென்னை சுற்றி உள்ள ஏரிகளின் பட்டியல்:
1.செங்குன்றம் ஏரி
2.புழல் ஏரி
3.செம்பரம்பாக்கம் ஏரி
4.செங்கல்பட்டு ஏரி
5.மதுராந்தகம் ஏரி
6.பூண்டி ஏரி
7.சோழவரம் ஏரி
8.பழவேற்காடு ஏரி

இந்த 8 ஏரிகளை சரியாக பராமரித்தாலே தண்ணீர் பிரச்சனை மற்றும் வெள்ள பிரச்சனையிலிந்து மீளலாம்.

ஆலோசனை:1
இந்த 8 ஏரிகுட்பட்ட பரப்பளவின் ஆக்கிரமிப்புகளை ஏரிக்குட்பட்ட எல்லைக்குள் கொண்டுவரவேண்டும்.

ஆலோசனை:2
ஏரியின் பரப்பளவு எல்லைகளை பலமான மேடுகளால் சீர் செய்ய வேண்டும்.

ஆலோசனை:3
ஏரியில் உள்ள தண்ணீர் வற்றும்போதெல்லாம் தாமதிக்காமல் வற்றிய பகுதிகளில் உடனடியாக ஆழபடுத்த வேண்டும்.

ஆலோசனை:4
ஏரிக்கு பிறபகுதிகளிலிருந்து வரும் கால்வாய்களின் இருப்பகுதிகளையும் அடிக்கடி சீர் செய்ய வேண்டும்.

ஆலோசனை:5
ஏரிக்கு வரும் பிறபகுதி தண்ணீர் வீணாக கழிவுநீர் கால்வாய்களில் கலக்காமல் இருக்க நீர்தேக்கங்கள் அதிகமாக உள்ள பகுதியை சிரிய குளங்களாக உருவாக்கிஅதில் தண்ணீரை சேமித்து அதிலிருந்து நிறைந்து வரும் தண்ணீரை வேறு எங்கும் கலக்காமல் புதிய கால்வாய்களை உருவாக்க வேண்டும்.
புதிய குளங்கள் மற்றும் மழைநீர் கால்வாய்கள் உருவாக்கினால் ஏரியை சுற்றியுள்ள கிராமங்களுக்கும் தண்ணீர் பிரச்சனை தீரும்.

மழை நீரை சேமித்து தண்ணீர் பஞ்சத்திலிருந்து மீள இன்னும் நிறைய வழிகள் உள்ளன இந்த அடிப்படை சீரமைப்புகளை அரசாங்கம் சரியாக செய்தால் தண்ணீர் பிரச்சனையிலிருந்து ஓரளவுக்கு நம்மை பாதுகாத்துகொள்ள முடியும்.

அரசு அதிகாரிகளுக்கு சென்றடையும்வரை ஷேர் செய்யவும்.

அன்புடன்
அ.மன்சூர் வேலூர்

Comments