தப்லீக் ஜமாஅத் இஜ்திமாவினால் சமுதாயத்திற்கு என்ன பயன்?
தப்லீக் ஜமாஅத் சகோதரர்களே சிந்திப்பீர்களா?
பிரமான்டமாக இலட்சக்கணக்கான மக்களை திரட்டி இஜ்திமா
உங்களின் நோக்கம் என்ன???
இலட்சக்கணக்கான மக்களை திரட்டி எதை போதிக்கிறீர்கள்???
இஸ்லாம் எவ்வளவு அறிவுபூர்வமானது என்பதை அல்லாஹ் நபிக்கு எப்படி இஸ்லாத்தை அறிமுகம் செய்ய சொல்கிறான் என்பதை பார்க்கவும்:
மனிதர்களே! நான் உங்கள் அனைவருக்கும் அல்லாஹ்வின் தூதராவேன். அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி உரியது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாருமில்லை. அவன் உயிர்ப்பிக்கிறான்; மரணிக்கச் செய்கிறான் என்று முஹம்மதே! கூறுவீராக! அல்லாஹ்வையும், அவனது தூதராகிய எழுதப் படிக்கத் தெரியாத இந்த நபியையும் நம்புங்கள்! இவர் அல்லாஹ்வையும், அவனது வார்த்தைகளையும் நம்புகிறார். இவரைப் பின்பற்றுங்கள்! நேர்வழி பெறுவீர்கள்.
திருக்குர்ஆன் 7:158
இஸ்லாம் என்பது அல்லாஹ்வை மட்டுமே வணங்கி,அவனது தூதரை தவிற வேறு யாரையும் பின்பற்ற கூடாது என்ற இந்த இரண்டு தத்துவங்களுக்குள் அடங்கிவிட்டது...
உண்மையில் மக்களுக்கு இதை போதிக்கதான் இஸ்திமா நடத்துகிறீர்களா?
இஸ்திமாவில் மக்களுக்கு நீங்கள் போதிப்பது என்ன?
அமல்களின் சிறப்புகள் புத்தகம் மற்றும் ஸதகாவின் சிறப்புகள் புத்தகம் இதிலிருந்துதான் பிரச்சாரம் செய்கிறீர்கள்?
இந்த புத்தகம் மார்க ஆதாரமா?
குர்ஆனின் உங்களுக்கு சாதகமான வசனங்களை மட்டும் எழுதிவைத்து மற்ற அனைத்தும் தனிமனித கற்பனை காவியங்கள்...
இந்த புத்தகத்தில் இமாம்களின் கூற்று உள்ளது, பெரியார்களின் கூற்று உள்ளது,
ஏராளமான கட்டு கதைகள் உள்ளது, நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் அவர்கள் சொல்லாத எத்தனையோ பொய்யான தகவல்கள் உள்ளது...
நபிகள் நாயகம்(ஸல்) அவர்களின் பெயரால் சொல்லப்படும் பொய்களுக்கு எவ்வளவு பெரிய தீமை உள்ளது என்பது உங்களுக்கு தெறியுமா???
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
என்மீது யார் வேண்டுமென்றே பொய்யுரைப்பானோ அவன் நரகத்தில் தனது இருப்பிடத்தை அமைத்துக் கொள்ளட்டும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)
நூல்கள்: புகாரீ 110, முஸ்லிம் 4
நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லாத காரியங்களை ஒருவன் செய்தால் அவனுக்கு நரகம் என்று எச்சரிக்கிறார்கள்,
அமல்கள் விஷயங்களில் நாம் எவ்வளவு கவனமாக இருக்க வேண்டும்?
தாயத்து கட்டலாம் தவறில்லை...
தர்ஹா செல்லலாம் தவறில்லை...
தட்டு,தகடு தொங்கவிடலாம் தவறில்லை...
ஃபாத்திஹா ஓதலாம் தவறில்லை...
இறந்தவர்களுக்கு கத்தம் செய்யலாம் தவறில்லை...
பராஅத் இரவு கொன்டாடலாம் தவறில்லை...
27 நோன்பு கொன்டாடலாம் தவறில்லை...
முஹரம் கொன்டாடலாம் தவறில்லை...
வரதட்சனை வாங்கலாம் தவறில்லை...
வட்டிக்கு வாங்கலாம் தவறில்லை...
பீடி,சிகரெட் பிடிக்கலாம் தவறில்லை...
இன்னும் ஏராளம்....
இப்படி மார்க விஷயங்களில் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொல்லாத எத்தனை விஷயங்களை அங்கிகரித்து, ஜமாஅத்திற்கும்,தொழுகைக்கும் வந்தால் போதும் என்று பிரச்சாரம் செய்கிறீர்கள்???
இவைகள் அனைத்திற்கும் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் தனது வாழ்கையில் எங்கயாவது செய்ததாக உங்களால் ஒரே ஒரு ஆதாரத்தை காட்ட முடியுமா??
அனைத்தும் மார்கத்தின் பெயரால் புதியதாக உருவாக்கப்பட்ட "பித்அத்".
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அவனுடைய அந்தப் புதுமை நிராகரிக்கப்பட்டதாகும்.
-என ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி-2697
தொழுகையை மட்டும் தொழ வேண்டும் என்று மக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்தால் போதுமா???
நன்மையை ஏவி தீமையை தடுக்க வேண்டாமா???
நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல்வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.
திருக்குர்ஆன் 3:104
அல்லாஹ் நன்மையையும் ஏவ வேண்டும், தீமையையும் தடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகிறான்...
இறைவனுக்கு இணையாக எத்தனை பாவமான காரியங்கள் சமுதாயத்தில் நம்பப்படுகிறது!
வீடு வீடாக ஏரி இஜ்திமாவிற்கும்,ஜமாஅத்திற்கும்,
மஜ்லிஸிர்கும் அழைக்கிறீர்களே?
எத்தனை வீட்டு வாசல்களில் இணைவைப்பு பொருட்களான தட்டு,தாயத்து, தகடு,தேங்காய் தொங்கவிடப்பட்டுள்ளது,
அது "ஷிர்க்" என்றும், அதனால் நமக்கு ஒரு நன்மை,தீமையும் இல்லை என்பதை எடுத்து சொல்லியுள்ளீர்களா???
உக்பா பின் ஆமிர் (ரழி) அவர்கள் கூறுகையில் நபி (ஸல்) அவர்களிடத்தில் பத்து பேர் கொண்ட ஒரு கூட்டம் வந்தது. அதில் ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தார்கள். ஒருவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லை. அப்போது அந்தக் கூட்டத்தினர், ஒன்பது நபர்களிடத்தில் பைஅத் செய்தீர்கள். ஆனால் இவரிடத்தில் மட்டும் பைஅத் செய்யவில்லையே ஏன்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தாயத்து இருக்கிறது என்று சொல்லி தன்னுடைய கையினால் அதைத் துண்டித்தார்கள். பிறகு பைஅத் செய்தார்கள். பின்னர் யார் தாயத்தை தொங்க விட்டுக் கொண்டாரோ அவர் இணை வைத்து விட்டார் என்று கூறினார்கள்.
நூல்: அஹ்மத் (16781)
தாயத்து அணிந்த மனிதரிடம் நபி(ஸல்) அவர்கள் பைஅத் செய்யவில்லை!
காரணம்?
இறைவனுக்கு நிகராக கயிறின் மீது நம்பிக்கை வைத்த காரணத்தால்...
ஆனால் இன்று சர்வசாதாரமாக மார்கத்தை படித்த ஆலிம்கள் அற்ப பணத்திற்காக, தனது கையாலயே தாயத்தை தயார் செய்து விற்பதை பார்கிறோம்!
எத்தனை முஸ்லிம்கள் ஏதும் அறியாமல் ஆலிம்சா சொன்னால் சரியாகதான் இருக்கும் என்று தாயத்து அணிந்து தொழுகிறார்கள்!
நோன்பு வைக்கிறார்கள்! தர்மங்கள் செய்கிறார்கள்!
ஆனால்! நபி(ஸல்) தாயத்து கட்டியிருப்பவர் அல்லாஹ்வுக்கு "ஷிர்க்" செய்தவராவார் என்று சொல்லியுள்ளார்களே
அதை வேடிக்கை பார்த்து மவுனமாக கடந்து செல்கிறீர்கள்?
தாயத்து அணிந்தவர்களிடம் அதன் தீமையை எடுத்து சொல்லி பாவத்திலிருந்து மீட்டெடுக்காமல், தாயத்து அணிந்திருந்தாலும் பராவாயில்லை, ஜமாஅத்திற்கு வா என்று அழைக்கிறீர்கள்??
தாயத்து,தகடு,தர்ஹா அனைத்தும் "ஷிர்க்" என்று ஏன் இஸ்திமாவில் பகிரங்கமாக சொல்வதில்லை?
அணுதினமும் அல்லாஹ்விடம் நாம் அனைவரும் ஒரு வாக்குறுதி தருகிறோம்;
திருக்குர்ஆனின் சூரத்துல் ஃபாத்திஹாவில்
இறைவா உன்னையே வணங்குகிறோம். உன்னிடமே உதவியும் தேடுகிறோம்.
திருக்குர்ஆன் 1:5
இந்த வசனத்திற்கு உங்கள் மதிப்பீடு என்ன??
இந்த வசனத்தை தொழுகையில் ஒருநாளும் ஓதாமல் இருப்பதில்லையே!
இதன் மூலம் அல்லாஹ்விடம் நாம் என்ன உறுதிமொழி எடுக்கிறோம்???
இறைவா! உன்னை மட்டுமே வணங்குகிறோம், உன்னிடம் மட்டுமே உதவி தேடுகிறோம் என்றல்லவா இதன் அற்தம்??
தொழுகையில் அல்லாஹ்விடம் உன்னை மட்டுமே வணங்குகிறோம் என்று உறுதிமொழி எடுத்துவிட்டு...
பெரியார்களிடத்திலும்,இமாம்களிடத்திலும்,
அவுலியாக்களிடத்திலும் உதவி கேட்பது அல்லாஹ்வுக்கு செய்யும் துரோகம் இல்லையா?
அல்லாஹ்வை வணங்குவதிலும், உதவி தேடுவதிலும் மாறு செய்தால் பரவாயில்லையா?
சற்று சிந்தித்து பாருங்கள் என் அருமை சகோதரர்களே!
நீங்கள் ஜமாஅத்திற்கு அழைக்கும் முஸ்லிம்களிடம் "அகீதாவை" பகிரங்கமாக எடுத்து சொல்லுங்கள்,
"அகீதாவை" பகிரங்கமாக எடுத்து சொல்லாமல் தொழுகைக்கு மட்டும் அழைப்பதால் சொர்கம் சென்றுவிட முடியுமா??
நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்:
அவர்களில் ஒரு நல்ல மனிதர் இறந்து விட்டால் அவரது அடக்கத் தலத்தின் மேல் வணக்கத் தலத்தை எழுப்பிக் கொள்கின்றனர். இவர்கள் தாம் அல்லாஹ்வின் படைப்புகளில் மிகவும் கெட்டவர்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 427, 434, 1341, 3873
தங்கள் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்ட யூதர்களையும், கிறித்தவர்களையும் அல்லாஹ் சபிக்கிறான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 436, 437, 1330, 1390, 3454, 4441, 4444, 5816
எவ்வளவு தெளிவாக எச்சரித்தும் அல்லாஹ்விற்கு செய்யும் "ஷிர்க்கை" வேடிக்கைபார்த்து தொழுகைக்கும், இஸ்திமாவிற்கும் அழைக்கிறீர்கள்?
நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!
திருக்குர்ஆன் 39:66
தனக்கு ஷிர்க் செய்வதை அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்ற எச்சரிக்கை உங்கள் கண்களுக்கு தெறியவில்லையா???
தனக்கு இணை கற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள பாவத்தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.
திருக்குர்ஆன் 4:48
திருக்குர்ஆனில் எத்தனை உபதேசங்கள், எத்தனை எச்சரிக்கைகள்....
இவைகள் எதுவும் உங்கள் அறிவுக்கு எட்டவே இல்லையா???
அல்லாஹ் குர்ஆனில் எத்தனை நபிமார்களின் வரலாற்றை குறிப்பிட்டு படிப்பினையை வழங்கியிருக்கிறான்...
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது "என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
திருக்குர்ஆன் 31:13
கையேந்தி அல்லாஹ்விடம் பிரார்தனை செய்ய சொன்னால்! இறந்தவர்களை அவுலியாக்களாக ஆக்கி அவர்களிடம் அழுது புலம்பி, ஒப்பாரிவைத்து ஸஜ்தா செய்து பிரார்தனை செய்வதை பார்க்கிறோம்...
இந்த தீமைகளையெல்லாம் மக்ளிடம் பகிரங்கமாக சொல்லாமல், இஸ்திமாவிற்கு அழைத்து என்னத சொல்லப்போகிறீர்கள்?
எத்தனை சமுதாய தீமைகள் தலைவிரித்தாடுகிறது....
வரதட்சனை கொடுமையால் கன்னி பெண்கள் திருமணம் ஆகாமல், காலத்தை கழிக்கும் அவலம்!
எத்தனை தகப்பன்கள் தனது மகளுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்காக வட்டி பாவமான காரியம் என்று தெறிந்தும்,
வட்டியை வாங்கி திருமணம் செய்து கொடுக்கிறார்கள்???
மஹர் கொடுத்துதான் திருமணம் செய்ய வேண்டும், பெண்ணிடத்தில் கடுகளவுகூட எதுவும் வாங்கக்கூடாது என்று ஏன் இஸ்திமாக்களில் பகிரங்கமாக சொல்வதில்லை?
எத்தனை இளைஞர்கள் புகை,மது, என இளமையை கழிக்கிறார்கள்!
இவைகள் ஹராமான காரியம் என்று ஏன் இஸ்திமாக்களில் உடைத்து சொல்வதில்லை?
சமுதாயத்தில் அத்தனை தீமைகளையும் கண்டுகொள்ளாமல் வெறும் தொழுகைக்காக அழைப்பதுதான் நபிவழியா??
நபி(ஸல்) அவர்களின் ஏகத்துவ பிரச்சாரம் எப்படி இருந்தது???
நன்மைை ஏவி, தீமையை தடுத்துதான் தாவா பணி செய்தார்கள்....
நாங்கள் வெறும் தொழுகையை மட்டும்தான் ஏவுவோம், தீமைகளை தடுக்கமாட்டோம் என்றால் எப்படி?
அப்படியென்றால் தொழுகையை மட்டும் தொழுதால் போதும்? அல்லாஹ்விற்கு இணையாக யாரை வேண்டுமானாலும் வைக்கலாம்? இதுதானே உங்கள் நிலைபாடு?
அல்லாஹ்வின் வசனங்களை மறந்து, மார்க ஆதாரம் இல்லாத செய்திகளை மக்களுக்கு சொல்லி எந்த நன்மையையும் ஏவாமல், தீமையை தடுக்காமல் கூட்டத்தை கூட்டி,
முன்னோர்கள் எழுதிய கட்டு கதைகளை போதித்து, இறுதியில் தனிமனித துஆவில் சிறப்பு இருக்கிறது என்று சொல்லி அழைப்பதில் ஒரு பயணும் இல்லை...
அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! முரண்படாதீர்கள்! அவ்வாறு செய்தால் கோழைகளாகி விடுவீர்கள்! உங்களின் பலம் அழிந்து விடும்.
திருக்குர்ஆன் 8:46
அல்லாஹ்வின் வேதமும், தூதரின் வழிகாட்டுதலும், வீரமும்,விவேகமும்,அறிவும் நம்மிடமிருக்க கட்டுகதைகளும்,முன்னோரின் வழியும் நமக்கு எதற்கு?
ஒவ்வொரு முஸ்லீமும் யார் எதை நோக்கி அழைத்தாலும், மார்க அடிப்பயைில் ஆதாரத்தை காட்டுமாறு கேளுங்கள், குர்ஆன்,ஹதீஸில் உள்ளதா என்பதை பாருங்கள் அதனடிப்படையில் இம்மையில் பயணித்தால் மட்டுமே மறுமையில் வெற்றிபெற முடியும்...
கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை என்று கூறுகின்றனர். அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். தன்னை மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.
திருக்குர்ஆன் 39:3
பல இலட்சம் மக்கள் கூட கூடிய இடத்தில் சத்தியத்தை பகிரங்கமாக உடைத்து பேசுங்கள், நன்மையை ஏவுங்கள், தீமையை தடுங்கள், அல்லாஹ்வின் வேதமான குர்ஆனும், நபிகளாரின் வழிகாட்டுதல்கள் மட்டுமே மார்கம் என்ற சிந்தனைக்கு மக்களை மாற்றி உருவாக்குங்கள்....
மார்கம் காட்டிதராத அத்தனை பித்அத்களையும் அடித்து நொறுக்குங்கள்...
ஒரு சிறந்த சமுதாயத்தை உருவாக்குங்கள், அனைவரும் திருக்குர்ஆனை தனது தாய்மொழியில் படிக்க ஆர்வமூட்டுங்கள்....
இதை நீங்கள் செய்யாதவரை நீங்கள் நடத்தும் இஸ்திமாக்கள் இம்மை,மறுமையில் கடுகளவும் பயன் தராது.
இறைவன் நம் அனைவருக்கும் நேரிய வழியையும், தெளிவான சிந்தனையையும் வழங்கி அருள் புறிய துஆ செய்தவனாய்.
அன்புடன்:
அ.மன்சூர் வேலூர்
Comments
Post a Comment