திருக்குர்ஆன் கூறும் வானம்!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

கன்னியமிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லடியார்களே!
அன்பு சகோதர,சகோதரிகளே நம் அனைவரின் மீதும் ஏக இறைவனுடைய சாந்தியும்,சமாதானமும் என்றென்றும் நீடி நிலவட்டுமாக...

எந்த திருக்குர்ஆனை தீவிரவாதத்தை போதிக்கும் வேதம் என்றும், மனித இனத்திற்கு எதிரான வேதம் என்றும் இஸ்லாத்தை அழிக்க நினைப்பவர்கள் மக்கள் மத்தியில் பொய்யான அவதூறுகளை பரப்புகின்றார்களோ!

அதே குர்ஆனை வைத்து இது தீவிரவாதத்தை போதிக்கும் வேதம் இல்லை, மனிதநேயத்தை போதிக்கும் வேதம், அறிவியல் சான்றுகளை பேசும் வேதம், குடும்பவியலை பற்றி பேசும் வேதம், மன அமைதிக்கு மருந்தாகும், மனித படைப்பை பற்றி தெளிவாக சொல்லும் வேதம், பிரபஞ்ச படைப்பை பற்றி பேசும் வேதம், ஏற்றத்தாழ்வை சுக்குநூறாக்கும் வேதம் என்றும், இன்னும்  ஏராளமான சிந்திக்கும் தார்மீக சித்தாந்த கருத்தை உள்ளடக்கிய வேதமாக  ஒட்டுமொத்த உலக மக்களுக்கும் ஏற்ற ஒரு உலகபொதுமறை வேதமாக திருக்குர்ஆன் இருக்கிறது என்பதை திருக்குர்ஆனின் வசனங்கள் வாயிலாகவே பார்கலாம்!

இறைவன் வழங்கிய பகுத்தறிவை இந்த திருக்குர்ஆன் வசனங்கள் மூலம் சிந்திக்குமாறு அன்புடன் கேட்டுகொள்கிறோம்!

أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ ۚ وَلَوْ كَانَ مِنْ عِندِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
திருக்குர்ஆன்  4:82

திருக்குர்ஆன் நூற்றுக்கும் அதிகமான அறிவியல் தகவல்களை விளக்குகிறது அதில் ஒன்றான திருக்குர்ஆனின் இந்த வசனத்தை ஆய்வுக்கு எடுத்துகொள்வோம்!

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும்,
இரவு பகல் மாறிமாறி வருவதிலும்,
மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலில் செல்லும் கப்பலிலும்,
அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும்,
பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும்,
ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும்,
காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும்,
வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன்  2:164

இந்த வசனத்தின் முதலாவது தகவலான வானத்தை பற்றி பார்போம்!
வானங்கள் மற்றும் பூமி படைக்கப்பட்டதில் சான்றுகள் உள்ளது அதை நீங்கள்  சிந்தியுங்கள் என்று சொல்கிறது...

பொதுவாக நம்மில் பலர் வானத்தை பற்றி எந்த அளவிற்கு புறிந்து வைத்துள்ளோம்?
வானம் என்பது நீல நிறத்தில் இருக்கும்,
வானம் என்றால் மேகம் இருக்கும்,
வானம் என்றால் மழை பொழிய செய்யும்,
வானத்தில்தான் சூரிய குடும்பம் உள்ளது,
வானத்திலிருந்துதான் வெளிச்சம் வருகிறது என்று வானத்தை பற்றி இப்படி புறிந்து வைத்திருப்போம்!
வானத்தை பற்றி இதுவரை யாரும் சொல்லாத ஒரு தகவலை திருக்குர்ஆன் சொல்கிறது;

أَلَمْ تَرَوْا كَيْفَ خَلَقَ اللَّهُ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا

ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா?
திருக்குர்ஆன்  71:15

திருக்குர்ஆன் சொல்லும் இந்த செய்தியை விஞ்ஞானிகள் மறுக்காமல் நூறு சதவிகிதம் வாய்ப்பு உள்ளது என்று சொல்கிறார்கள்.

நாம் பார்க்கக்கூடிய இந்த வானம் என்பது வெறுமென மேகம் மற்றும் சூரிய குடும்பத்தோடு நின்றுவிடாமல் பல அடுக்குகளை கொன்டவையாகதான் இருக்க முடியும் என்பது விஞ்ஞானிகளின் தற்போதைய கண்டுபிடிப்பு.
நாம் பார்க்கக்கூடிய சூரியன்,சந்திரன்,நட்சத்திரங்கள் மற்றும் ஏனைய கோள்கள் அனைத்தும் வெறும் ஆரம்பம் மட்டுமே முடிவவல்ல...

நாம் பார்க்ககூடிய இந்த வானம் பல அடுக்குகளின் ஒன்றாகதான் இருக்க முடியும் விஞ்ஞானிகளின் கருத்தும்கூட..
மேலும் விண்ணியல் துறை விஞ்ஞானிகள் குறிப்பிடுகிறார்கள் கடலில் ஒரு டம்ளர் தண்ணீர் அளவிற்குதான் நாங்கள் விண்வெளியை தொட்டுள்ளோம்,
தொட வேண்டிய தூரம்????
கேள்விக்குறி மட்டுமே!

فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

திருக்குர்ஆன் மேலும் சொல்கிறது...
இரண்டு நாட்களில் ஏழு வானங்களை அமைத்தான். ஒவ்வொரு வானத்திலும் அதற்குரிய கட்டளையை அறிவித்தான்.
கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அவற்றை பாதுகாக்கப்பட்டதாக ஆக்கினோம்.
இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன்  41:12

இதில் கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம் அவற்றை பாதுகாப்பானதாக ஆக்கியுள்ளோம் என்று இறைவன் கூறுகிறான்,
இதில் மூன்று மிகபெரிய உண்மை மறைந்துள்ளது!

முதலாவது: சூரிய குடும்பத்தோடு இருக்கும் நட்சத்திரங்களைதான் விளக்குகளால் அலங்கரித்தோம் என்று இறைவன் கூறுகிறான்,
இன்று வரை விஞ்ஞானிகளால் நட்சத்திரத்தின் எல்லை முடிவை சொல்லவே முடியவில்லை,
மாறாக அதன் எல்லை மற்றும் தூரத்தை ஔி ஆண்டு எண்ணிக்கையில் குறிப்பிடுகிறார்கள்,
நட்சத்திரத்தின் தூரம் பல பில்லியண் , மில்லியண் தூரம் அல்ல, பலகோடி டிரில்லியண் ஔி ஆண்டு தூரமாகதான் இருக்க முடியும்.

இந்த கீழ்வானமே இவ்வளவு தூரம் என்றால் அடுத்தடுத்த வானங்கள் எவ்வளவு தூரம் இருக்கும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்.
திருக்குர்ஆன் கூறும் ஏழு வானத்தில் முதலாவது வானமாக அதாவது அடிவானம், பூமிக்கு மேற்பரப்பில் உள்ள வானம் நட்சத்திரங்கள் மின்னும் வானம் இதைதான் திருக்குர்ஆன் கீழ்வானம் என்று குறிப்பிடுகிறது...

إِنَّا زَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِزِينَةٍ الْكَوَاكِبِ

முதல் வானத்தை நட்சத்திரங்கள் எனும் அலங்காரம் மூலம் நாம் அலங்கரித்துள்ளோம்.
திருக்குர்ஆன்  37:6

முதல் வானத்தை நட்சத்திரம் என்னும் விளக்குகளால் அலங்கரித்துள்ளோம் என்ற இந்த வசனத்தை மேலும் நாம் சில விஞ்ஞானரீதியான ஆய்வுகளோடு சற்று ஒப்பிட்டு பார்ப்போம்!

வானியல் என்பது வரலாற்றில் மிகவும் பழைமையான அறிவியல் துறைகளில் ஒன்றாகும்.
அறிவியல் தொழில்நுட்பம் வளராத காலங்களில், எகிப்து மற்றும் நுபிய நாகரிக நினைவுச் சின்னங்கள் அவர்களின் வானியல் அறிவைப் பறைசாற்றுகின்றன.

ஆரம்பகால நாகரிகங்களான பாபிலோனிய, கிரேக்கம், இந்தியா, ஈரான், சீன மற்றும் மாயன் நாகரிகங்களில் குறிப்பிட்ட கால இடைவேளைகளில் விண்வெளியை அவதானித்துக் குறிப்புகள் எடுப்பது வழக்கமாயிருந்தது.

ஆனாலும் ஒரு தனித்துவமான அறிவியல் துறையாக வளருவதற்கு தொலைநோக்கியின்(Telescope) கண்டுபிடிப்பு இன்றியமையாததாக இருந்தது, அதன் பயன்பாடு ஆரம்பித்த பின்னரே வானியல் துறையின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.

கலீலியோ கலீலி (Galileo Galilei) இத்தாலி நாட்டைச்சார்ந்தவர், 17ஆம் நூற்றாண்டில் அறிவியல் புரட்சியில் மிக பெரிய பங்கை ஆற்றியுள்ளார்.
இவரை விண்ணியல் தொலைநோக்கின் அறிவியல் தந்தை என்றெல்லாம் அடைமொழியில் அழைப்பார்கள்.

விண்வெளியில் உள்ள கோள்களின் முகங்களை உறுதி செய்தல்,
வெள்ளியின் வெவ்வேறு முகங்களை உறுதி செய்தவர், வியாழனின் நான்கு பெரிய சந்திரனை கண்டுபிடித்தவர் அந்த நிலவுகளுக்கு கலீலியின் நிலவுகள் என்றும் பெயர் உள்ளது,
சூரிய புள்ளிகளை ஆராயச்சி செய்வது என தொலைநோக்கி(Telescope) மூலம் விண்ணியல் கண்டுப்பிடிப்புகளில் பெரிய பங்கு இவருக்கு உள்ளது.

நமது கட்டூரையில் கலீலியோவை பேச வேண்டிய அவசியம் என்ன?
ஏன் இவரைப்பற்றி குறிப்பிடுகிறோம் என்றால்?
குர்ஆன் கூறும் விண்ணியல் தத்துவங்களை, தனது ஆய்வின் மூலம் முழுமையாக இல்லையென்றாலும் சிலவற்றை கண்டுபிடிக்க மிக முக்கிய காரணமானவர்.

பன்டைய காலத்தில் விண்ணியல்துறையில் போதிய அறிவு அக்காலத்து மக்களிடத்தில் இல்லாத காரணத்தால் கண்ணால் பார்க்கக்கூடிய சூரியன், சந்திரன், நட்சத்திரம் என வானில் இவைகள் மட்டுமே இருப்பதாக நினைத்துவந்தனர்.

17ஆம் நூற்றாண்டுக்கு பிறகு கலிலீயோவின் தொலைநோக்கு(Telescope) கருவிகள் மூலம் விண்ணியிலில் பல்வேறு வகையான கோள்கள்,மற்றும் நட்சத்திரங்கள் உள்ளது என்பதை உலகுக்கு தெறியவந்தது.

فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அவற்றை பாதுகாக்கப்பட்டதாக ஆக்கினோம்.
இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன்  41:12

விண்வெளியில் இருக்கக்கூடிய கேலக்ஸி(Galaxy) கூட்டங்களையும் சேர்த்துதான் திருக்குர்ஆன் அடிவானத்தை விளக்குகளால் அலங்கரித்துள்ளோம் என்று குறிப்பிடுகிறது.

الْجَوَارِ الْكُنَّسِ

மறைந்தும் மறையாமலிருக்கிற,
முழுதும் மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
திருக்குர்ஆன்  81:16

வாண்வெளியில் பல கோடி நட்சத்திரங்கள் மறைந்து உள்ளது, மறையாமல் உள்ளது, முழுமையாக மறைகிறது, திடிரென வானில் பல கோடி நட்சத்திரங்கள் தென்படும்,
திடிரென சில நட்சத்திரங்கள் தென்படும் அதில் சிலவற்றை நாம் பூமியிலிருந்து கண்முன்னே காண்கிறோம்!
திருக்குர்ஆன் வசனங்கள் இறங்கிய காலக்கட்டத்தில் இந்த வசனங்களுக்கு பதில் இருந்திருக்காது,
ஆனால் தொழில்நுட்பம் பல்கி பெருகி இருக்கக்கூடிய நம் காலகட்டத்தில் முழுமையாக இந்த வசனங்கள் பொருந்தி போகிறுது.

நாம் வாழக்கூடிய காலக்கட்டத்தில் விஞ்ஞானம் அடிவானத்தில் ஒரு சிறு பகுதியைதான் ஆராய்ந்துள்ளார்கள்,
அந்த ஆய்வுகளிலயே திருக்குர்ஆன் கூறும் பல தகவல்கள் உடன்படுகிறது.
மேலும் எதிர்காலத்தில் திருக்குர்ஆன் கூறும் ஏழு வானங்களை பற்றிய பல ஆய்வுகள் கண்டுப்பிடிக்கப்படலாம்!
மேலும், திருக்குர்ஆன் கூறும் அடிவானத்திலுள்ள விளக்குகள் விஞ்ஞான மொழியில் விண்மீன் பேரடைகள் கேலக்ஸி(Galaxy) என்று அழைக்கிறார்கள்,
இந்த கேலக்ஸி குடும்பத்தில் 100 பில்லியணுக்கு அதிகமான விண்மீன்கள் உள்ளது என்றும் குறிப்பிடுகிறார்கள்,
சூரிய மண்டலத்துக்கு வெளியே பூமிக்கு அண்மையிலுள்ள நட்சத்திரம்
புரொக்சிமா செண்டோரி(proxima centauri) என்பதாகும்.
இதுபோன்ற நட்சத்திரங்கள் பூமிக்கு அருகாமையில் வரும்பொழுது சூரியனை போன்று காட்சியளிக்கும்.
சமீபத்தில் அமெரிக்காவில் இதுபோன்ற நட்சத்திரம் தென்பட்டது,
அது சூரியன் என்று பரபரப்பாக பேசப்பட்டது.
இது பூமியிலிருந்து 4.2 ஒளியாண்டுகள்
4 இலட்சம் கோடி கிலோமீட்டர்கள் தொலைவில் உள்ளது. அதாவது இந்த நட்சத்திரத்திலிருந்து வரும் ஒளி பூமியை வந்தடைய 4.2 ஆண்டுகள் ஆகும்.

அண்டவெளியில்  சுமார் 70 கோடி கோடி கோடி (70,000,000,000,000,000,000,000) நட்சத்திரங்கள் இருக்கக்கூடுமென மதிப்பிடப்பட்டுள்ளது.

وَمَا خَلَقْنَا السَّمَاءَ وَالْأَرْضَ وَمَا بَيْنَهُمَا لَاعِبِينَ

வானத்தையும், பூமியையும், அவற்றுக்கு இடைப்பட்டவற்றையும் விளையாட்டாக நாம் படைக்கவில்லை.
திருக்குர்ஆன்  21:16

அண்டவெளியில் சுமார் 70கோடி கோடி கோடி நட்சத்திரங்கள் இருக்கக்கூடும் என்ற விஞ்ஞாணிகளின் கூற்றுபடி,
விண்வெளியில் பால் வழி(Milky way) என்றும், விண்மீன் நட்சத்திரங்கள் என்றும், பெரும் நட்சத்திர கூட்டங்கள் என்றும், கோள்கள், நிலாக்கள், சிறுகோள்கள், வால்வெள்ளிகள், நெபுலா பல்வேறு வகையான தூசுகள் நிறைந்த நட்சத்திரக்கூட்டங்கள் உள்ளதாக குறிப்பிடுகின்றனர், இவைகள் ஒவ்வொன்றுக்கும் தனி தனி சிறப்புகள் இருக்கின்றது.
மேலும், அண்டத்தில் பல பில்லியன் கணக்கான விண்மீன் பேரடைகள் (Galaxy) உள்ளன. ஒவ்வொரு விண்மீன் பேரடைகளிலும் 100 பில்லியனுக்கும் அதிகமான விண்மீன்கள் உள்ளன.

திருக்குர்ஆன் 21:16 வசனத்தில் சொல்லும் பூமிக்கும் வானத்திற்கும் இடையில் உள்ளவைகள்  இவைகளாகதான் இருக்க முடியும், இன்னும் இதுபோன்று பல இருக்கவும் வாய்பு உள்ளது (இறைவன் நன்கறிந்தவன்)...

أَفَلَمْ يَنظُرُوا إِلَى السَّمَاءِ فَوْقَهُمْ كَيْفَ بَنَيْنَاهَا وَزَيَّنَّاهَا وَمَا لَهَا مِن فُرُوجٍ

அவர்களுக்கு மேலே உள்ள வானத்தை எவ்வாறு அமைத்து அதை அழகுபடுத்தியுள்ளோம் என்பதை அவர்கள் கவனிக்கவில்லையா? அதில் எந்த ஓட்டைகளும் இல்லை.
திருக்குர்ஆன்  50:6

இந்த வசனத்தில் வானத்தை அழகுடன் படைத்தது மட்டுமல்லாமல்,
அதில் எந்தவிதமான ஓட்டைகளும் இல்லை என்று இறைவன் கூறுகிறான்...
இறைவன் இங்கு ஓட்டைகள் என்று குறிப்பிடும் அரபு வார்த்தை ஃபுரூஜ் (فُرُوجٍ) இந்த வார்த்தை பிளவுகளை குறிக்கும் சொல்,
ஒரு பொருளை உருவாக்கக்கூடியவர்,
அந்த பொருளின் தரத்தையும், அதில் எந்தவிதமான குளறுபடியும் இல்லாமல் இறுதியாக சரிபார்த்து உறுதி செய்ய வேண்டும்,
இது சாதரண மனிதன் தயாரிக்கக்கூடிய எந்தவித பொருளாக இருந்தாலும் சரி,
இதுதான் நிலைபாடு.
அப்படி இருந்தும் மனிதன் தயாரிக்கக்கூடிய பொருட்களில் பிரச்சனை வருவதை பார்க்கிறோம்!
ஆனால் இறைவன் இங்கு குறிப்பிடுகிறான்;

வானத்தை அழகுடன் படைத்தது மட்டுமல்லாமல் வானத்தில் எந்த ஒரு குறைகளையும் உங்களால் காணமுடியாது என்று உறுதியான வார்த்தையை பயன்படுத்துகிறான்.
மேலும் பிளவுகள் இருந்தால்தான் அண்டத்திலிருக்கக்கூடிய விண்மீண் கற்கல் பூமியை தாக்கமுடியும்!
அப்படி பிளவுகள் எதுவும் இல்லாத காரணத்தால்தான் விண்மீன் கற்கலால் பூமிக்கு எந்தவிதமான ஆபத்தும் இன்றுவரை இல்லை, உலகம் சீராக இயங்கி கொன்டிருக்கிறது.
மேலும் கேலக்ஸியில் பல பில்லியண் தூசு படலங்கள் உள்ளதாகவும் குறிப்பிடுகின்றனர்,
அந்த தூசு படலங்களால்கூட பூமிக்கு இதுவரை எந்த பாதிப்பும் வந்ததில்லை.
இந்த நட்சத்திரக்கூட்டங்கள் எல்லாமே ஒருவகையான விண்மீன் கற்கல்,
அந்த கற்கள் பூமியின் மீது மோதினால் பூமி தூள் தூளாக நொருங்கிவிடும், ஆனாலும் இந்த நட்சத்திரக்கூட்டங்கள் பூமியில் மோதாது!
ஏனென்றால்????

திருக்குர்ஆனின் இந்த வசனம் தெளிவாக  சொல்கிறது....

فَقَضَاهُنَّ سَبْعَ سَمَاوَاتٍ فِي يَوْمَيْنِ وَأَوْحَىٰ فِي كُلِّ سَمَاءٍ أَمْرَهَا ۚ وَزَيَّنَّا السَّمَاءَ الدُّنْيَا بِمَصَابِيحَ وَحِفْظًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

கீழ் வானத்தை விளக்குகளால் அலங்கரித்தோம். அவற்றை பாதுகாக்கப்பட்டதாக ஆக்கினோம்.
இது அறிந்தவனாகிய மிகைத்தவனின் ஏற்பாடாகும்.
திருக்குர்ஆன்  41:12

الَّذِي خَلَقَ سَبْعَ سَمَاوَاتٍ طِبَاقًا ۖ مَّا تَرَىٰ فِي خَلْقِ الرَّحْمَٰنِ مِن تَفَاوُتٍ ۖ فَارْجِعِ الْبَصَرَ هَلْ تَرَىٰ مِن فُطُورٍ

கீழ்வானம் பாதுகாப்பானது என்று திருக்குர்ஆன் மீன்டும் நூறுசதவிகிதம் உறுதியாக சொல்கிறது.
அவனே ஏழு வானங்களை அடுக்கடுக்காகப் படைத்தான். அளவற்ற அருளாளனின் படைப்பில் எந்த முரண்பாடுகளையும் நீர் காணமாட்டீர். மீண்டும் பார்ப்பீராக! எதேனும் குறையைக் காண்கிறீரா?
திருக்குர்ஆன்  67:3

அடிவானம் பாதுகாப்பு வளையத்திற்குள் உள்ளதாக திருக்குர்ஆன் கூறும் பல சான்றுகளை விஞ்ஞான உண்மையுடன்  பார்த்தோம்!
மேலும், வானத்தின் பாதுகாப்பை பற்றி திருக்குர்ஆன் கூறுவதை பார்ப்போம்.

وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَّحْفُوظًا ۖ وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.
திருக்குர்ஆன்  21:32

திருக்குர்ஆன் கூறும் இந்த வசனத்தில் பாதுகாக்கப்பட்ட முகடு ஸக்ஃபன் (سَقْفًا) என்ற வார்த்தையின் மற்றொறு அற்தம் கூரையை குறிக்கும்,
வெட்டவெளியாக உள்ள ஆகாயத்தில் எந்தவிதமான கூரைகளும் கண்ணுக்கு தென்படவில்லையே என்று நினைக்கலாம்?
வீடு கட்டுவதற்காக நாம் எதற்காக மேற்கூரை அதாவது தளத்தை பயன்படுத்துகிறோம்?
வெயில்,மழையின் தாக்கத்திலிருந்து நம்மை காத்துகொள்ள மேற்கூரையை பயன்படுத்துகிறோம்!
வெட்டவெளியில் எவ்வளவு வெளிச்சம்,வெப்பம்,மழை இருந்தாலும் வீட்டுக்குள் சென்றவுடன் அது நம்மீது படாமல் பாதுகாத்து கெள்கிறோம்!
அதேபோல பூமியில் வாழக்கூடிய உயிரிணங்களுக்கு சூரியனிலிருந்து வரும் ஆபத்துக்களை தடுக்கக்கூடியதாக இந்த கூரை உள்ளது.
திருக்குர்ஆன் சொல்லக்கூடிய இந்த வானம் பூமியின் மேற்பரப்பில் உள்ள ஓசேன் படலத்தை (Ozone Layer) குறிக்ககூடியதாக உள்ளது.
பூமியிலிருந்து சுமார்16 கி.மீ. உயரம் வரை காற்றின் முதல் அடுக்கு உள்ளது.
இந்த அடுக்கில் நைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் டை ஆக்ஸைடு அதிகம் உள்ளதால் இது கூரை போல் செயல்படுகிறது.

அதற்கு அடுத்ததாகதான் ஓசேன் படலம்  (Ozone Layer) உள்ளது
ஓசேன் படலத்தை பற்றி நாம் அனைவரும் ஓரளவிற்க்கு அறிந்து வைத்துள்ளோம் அதைப்பற்றி அதிகம் விளக்கவேண்டிய அவசியம் இல்லை, இருந்தாலும் ஓசேனின் தனிசிறப்பை சுருக்கமாக பார்ப்போம்.

பூமிக்கு மேல் சுமார் 50 கிலோ மீட்டர் தூரத்தில் ஓசேன் என்ற படலம் பூமியின் மேற்பரப்பில் சூரியனிலிருந்து வெளியாகும் புறஊதாக்கதிர்கள்(Ultraviolet) மிகவும் சக்தி வாய்ந்த இந்த உயிர்க்கொல்லியை தடுத்து நிறுத்துகிறது.

இந்த புறஊதாக்கதிர்கள்(Ultraviolet) சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் இறுதியாக கண்ணுக்கு தெறியாத உயிர்களை கொல்ல பயன்படுகிறது.
சக்திவாய்ந்த இந்த புறஊதாகதிர்கள் (Ultraviolet) எளிதில் பூமியில் உள்ள உயிரிணங்களை அழித்துவிடும், ஆனால் ஓசேன் படலத்தால் பூமிக்கு மேற்பரப்பில் தடுத்து நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது,
அதேபோல் சூரியனிலிருந்து வரக்கூடிய வெப்பத்தை தடுக்கும் வானத்துடன் கலந்திருக்கும் காற்றுமண்லம்.
சந்திரனும், பூமியும் திட்டத்தட்ட சூரியனின் பார்வைக்கு ஒரே தொலைவில் உள்ளதாகதான் கணக்கு.
ஆனால், சந்திரனில் பகல் நேரத்தில் 127 டிகிர வெப்பமும், பூமியில் 40 முதல் 50 டிகிரி வரை வெப்பமும் உள்ளது.
100 டிகிரிக்கு மேல் வெப்பம் பூமியில் பதிவானால் ஓட்டுமொத்த பூமியும் பாலைவனமாகி சுடுகாடகாக மாறிவிடும்,
சொல்லப்போனால் 127 டிகிரி வெப்பம்தான் பூமியை நோக்கி வருகிறது,
இந்த 127டிகிரி வெப்பத்தை எது தடுக்கிறது?
திருக்குஆன் கூறும் பாதுகாப்பான முகடு (Ozone Layer) மற்றும் காற்று...

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَالْفُلْكِ الَّتِي تَجْرِي فِي الْبَحْرِ بِمَا يَنفَعُ النَّاسَ وَمَا أَنزَلَ اللَّهُ مِنَ السَّمَاءِ مِن مَّاءٍ فَأَحْيَا بِهِ الْأَرْضَ بَعْدَ مَوْتِهَا وَبَثَّ فِيهَا مِن كُلِّ دَابَّةٍ وَتَصْرِيفِ الرِّيَاحِ وَالسَّحَابِ الْمُسَخَّرِ بَيْنَ السَّمَاءِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَعْقِلُونَ

காற்றுகளை மாறிமாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும், பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் உணரும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன்  2:164

ஓசேன் படலத்திற்கு கீழ் உள்ள காற்று மண்டலம்தான் சூரியனிலிருந்து வரும் வெப்பத்தை மூன்றில் இரண்டு மடங்கை தடுத்து நிறுத்துகிறது,
127 டிகிரி வெப்பத்தை குறைத்து -0 முதல் +40 வரை வெவ்வேறு பகுதிகளுக்கு வெவ்வேறு மாதிரி தருகிறது.
வெப்பத்தின் உஷ்னத்தை தடுக்க நாம் குளிர்சாதனங்களை பயன்படுத்துவோம்,
அதே போல்தான் 127 டிகிரி வெப்பத்தை இறைவன் காற்று மூலம் மாறி மாறி  வீச செய்து சூரிய வெப்பத்தை பூமிக்கு வராமல் காற்று மண்டலம் மூலம் தடுத்துள்ளான்.

வானிலிருந்து மழை இறங்கவேண்டும் என்பதற்காக இறைவன் நீர் சுழற்சி மூலம் பூமியிலிருக்கக்கூடிய தண்ணீரை ஆவியாக்கி மேகத்தின் மூலம் சேமித்துவைக்கிறான்.

இந்த நீராவி சுழற்சியைதான் திருக்குர்ஆன் திருப்பித்தரும் வானம் என்று கூறுகிறது.
திருக்குர்ஆன் கூறும் திருப்பித்தரும் வானம் பற்றிய தகவலை அறிவியல் உலகம் மறுக்கவில்லை!

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இது ஒரு சான்று...

Comments