திருக்குர்ஆன் கூறும் பூமியின் படைப்பு!

ஏக இறைவனின் திருப்பெயரால்...

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் என்பதற்கு
பூமியின் படைப்பை பற்றி விஞ்ஞான ஆய்வுகளுடன் திருக்குர்ஆனின் வசனங்களை ஒப்பிட்டு பார்ப்போம்!

مَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَّا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا ۗ أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ ۚ بَلْ هُمْ قَوْمٌ يَعْدِلُونَ

நீங்கள் இணைகற்பித்தவை சிறந்தவையா? அல்லது பூமியை வசிப்பிடமாக்கி, அவற்றுக்கிடையே ஆறுகளை உருவாக்கி அவற்றுக்கு முளைகளையும் அமைத்து இரண்டு கடல்களுக்கிடையே தடுப்பையும் ஏற்படுத்தியவனா? 
அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை! அவர்களில் அதிகமானோர் அறிவதில்லை.
திருக்குர்ஆன்  27:61

திருக்குர்ஆனின் இந்த வசனத்தில் பூமியை வசிப்பிடமாக்கி உள்ளாேம் என்ற ஒரு சொல் இடம்பெற்றுள்ளது!

(قَرَارً) "ஃகராரன்",
ஃகராரன் என்ற அரபு வார்த்தையின் மற்றொரு பொருள் "உறைவிடம்" இந்த உறைவிடத்திற்கு தமிழில் பல பெயர்கள் உள்ளது அந்த பெயர்கள் இருப்பிடம், வாழுமிடம்,பொருள்கள் இருக்கும் இடம் என்றெல்லாம் அழைக்கப்படுகிறது.

அப்படியென்றால்! பூமியில் மட்டும்தான் மனிதர்கள் வாழ முடியும் என்பதை இந்த வசனம் குறிப்பிடுகிறது.

நமது பிரபஞ்சத்தில் பூமியுடன் சேர்த்து பல்வேறு கோள்கள் உள்ளன,

அத்தனை கோள்கள் இருக்கும் நிலையில் மனிதர்களுக்கு பூமியில்தான் வசிப்பிடம் ஏற்படுத்தியிருக்கிறோம்
என்று திருக்குர்ஆன் ஆணித்தரமாக சொல்கிறது என்றால்!
ஏனைய கோள்களில் மனிதர்கள் வாழ முடியாது என்றுதானே அற்தம்!

திருக்குர்ஆன் சொல்வதுபோல பூமியை தவிற ஏனைய கோள்களில் மனிதர்கள் வாழ முடியாது என்பதுதான் உண்மை,

நாம் வாழும் இந்த பூமியுடன் ஏனைய கோள்களை ஒப்பிட்டு பார்த்தாலே பல உண்மைகள் தெறியவரும், பூமியை தவிற ஏனைய கோள்களில் மனிதர்கள் வாழ முடியாது என்பதை புறிந்துகொள்ளலாம்.

சூரியனை சுற்றியுள்ள ஒவ்வொரு கோள்களையும் ஆய்வுகளுக்கு எடுத்துகொள்ளலாம்;

புதன் கோள் (Mercury) சூரியனுக்கு மிக அருகில் உள்ள கோளாகும். மேலும் இது சூரியக் குடும்பத்தில் மிகச்சிறிய கோளாகும். இது ஒரு முறை சூரியனைச் சுற்றி வர 88 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
இதற்கு நிலவுகள் எதுவும் இல்லை.

நிலவு இல்லாமல் நாட்களையும், மாதத்தையும் கணக்கிட முடியாது! சூரியனும்,சந்திரனும் பூமிக்கு சரியான காலம் காட்டியாக உள்ளது.

فَالِقُ الْإِصْبَاحِ وَجَعَلَ اللَّيْلَ سَكَنًا وَالشَّمْسَ وَالْقَمَرَ حُسْبَانًا ۚ ذَٰلِكَ تَقْدِيرُ الْعَزِيزِ الْعَلِيمِ

அவனே காலைப் பொழுதை ஏற்படுத்துபவன். இரவை அமைதி தருவதாகவும், சூரியனையும் சந்திரனையும் காலம் காட்டியாகவும் அமைத்தான். இது மிகைத்தவனாகிய அறிந்தவனின் எற்பாடு.
திருக்குர்ஆன்  6:96

பகல் நேரத்தில் வெப்பம் 427 °C ஆகவும் இரவுநேரத்தில குளிர் −173 °Cஆகவும் உள்ளது.

தோற்றத்தில் கிட்டத்தட்ட பூமியின் நிலவை ஒத்தது புதன். இது வெட்டவெளியுடன் கூடிய பல பெரும்பள்ளங்களைக் (craters) கொண்டு விளங்குகிறது. புவிநிலவைப் போலவே புதனும் வளிமண்டலம் அற்று உள்ளது.

மனிதர்கள் குடியேற்றம் என்ற நோக்கில் பார்க்கும் போது நிலவில் மனிதர்கள் குடியேறுவதற்கு தேவைப்படும் அத்தியாவசியங்கள் இங்கும் தேவைப்படுகின்றன.

மேலதிகமாக சூரியனின் வெப்பத்தில் இருந்து தற்காத்துகொள்வதற்காக வெப்பக் கேடயங்களும் தேவைப்படும்.

புதன் கிரகத்தில் நீர் பனிக்கட்டியாக அதன் மையப்பகுதிகளில் உள்ளது. இவை பல கோடி ஆண்டுகளாக சூரிய வெளிச்சம் இல்லாத இடங்களாக இருந்ததால் இன்றும் ஆவியாகாமல் உள்ளது.
அதனால் நீர் ஆதாரம் இல்லாத சூழல் உள்ளது.

புதனில் மனிதர்கள் குடியேற வேண்டுமென்றால் அதிக தொழில் நுட்பங்களை உருவாக்குதல், இதற்கான வெப்பக் கேடயங்களை தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து உருவாக்குதல், இக்கோளில் இருந்து வேறு கோளுக்கு செல்ல மிக அழுத்தமும் வேகமும் தரக்கூடிய விண்கலன்களை உருவாக்குதல் போன்றவை புதனில் மனிதர்கள் குடியேறுவதற்கு பெரும் தடைகளாய் உள்ளன.

சூரியனுக்கு மிக அண்மையில் உள்ள கோள்களான புதனும் வெள்ளியும் மட்டுமே சூரியக் குடும்பத்தில் இயற்கை நிலவுகள் இல்லாத கோள்களாகும். ஏதேனும் இயற்கை நிலவு ஏற்படுமானால் சூரியனின் ஈர்ப்புவிசை அதன் சுற்றுப்பாதையில் குறுக்கிட்டு அதை கோளில் விழச் செய்துவிடும்.

புதன் கோளில் உள்ள அனைத்தையும் பூமியுடன் ஒப்பிட்டு பாருங்கள், மனிதர்கள் வாழ ஏற்ற இடம் பூமியா? அல்லது புதனா?
என்ற உண்மை புறியும்!

إِنَّ فِي اخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ وَمَا خَلَقَ اللَّهُ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَّقُونَ

இரவு, பகல் மாறி மாறி வருவதிலும், வானங்களையும், பூமியையும் அல்லாஹ் படைத்திருப்பதிலும் இறைவனை அஞ்சுகின்ற சமுதாயத்திற்குச் சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன்  10:6

திருக்குர்ஆன் கூறுவதுபோல பூமியை தவிற வேறு எந்த கோள்களிலும் வாழ முடியாது என்பதை புதன் கோளில் உள்ள சூழ்நிலைகளைவைத்து பல விடயங்களை பார்த்தோம்!

அதை தொடர்ந்து பூமிக்கு அருகாமையில் அடுத்ததாக உள்ள வெள்ளி (Venus) பற்றி பார்ப்போம்.

வெள்ளி (Venus) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து இரண்டாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும்.

சூரியக் குடும்பத்திலே மிகவும் வெப்பமான வளிமண்டலத்தைக் கொண்ட கோள் வெள்ளியாகும். இதன் சூழல் உயிரினங்கள் வாழ முடியாத நிலையைக் கொண்டுள்ளது.

கோளின் தரைப்பரப்பில் வளிமண்டல அழுத்தம் புவியை விட 92 மடங்காக உள்ளது. சூரியக் குடும்பத்தின் மிகவும் வெப்பமிகுந்த கோளாக விளங்கும் வெள்ளியின் தரைமட்ட வெப்பநிலை (462 °C; 863 °F)ஆக உள்ளது.

ஆனால்! பூமியில் உள்ள வளிமண்டலத்தில் சூரியனிலிருந்து வரும் உயர் வெப்பம் மற்றும் கதிர் வீச்சுகளை வானத்திலயே தடுத்து நிறுத்துகிறது அது எப்படி சாத்தியம்?

திருக்குர்ஆன் அதற்கு பதிலளிக்கிறது...

وَجَعَلْنَا السَّمَاءَ سَقْفًا مَّحْفُوظًا ۖ وَهُمْ عَنْ آيَاتِهَا مُعْرِضُونَ

வானத்தைப் பாதுகாக்கப்பட்ட முகடாக்கினோம். அவர்களோ அதில் உள்ள சான்றுகளைப் புறக்கணிக்கின்றனர்.
திருக்குர்ஆன்  21:32

அதைதான் ஓசேன் படலம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர்,
ஓசேன் படலம் பற்றி திருக்குர்ஆன் கூறுவதை கடந்த தொடரில் விளக்கியுள்ளோம்!

பூமியில் மனிதர்கள் வாழ்வதற்காகன வசதிகள் செய்த இறைவனுக்குதான் தெறியும் பூமியை தவிற வேறு எங்கும் வாழ முடியாது என்று, மனிதர்கள் வாழ்வதற்கான வசதிகளோடு பூமியை இறைவன் படைத்துள்ளான்,
அதனால்தான் பூமியில் உயிரணங்கள் உயிர் வாழ்கிறது.

வெள்ளியின் தரைப்பகுதி வறண்ட பாலைவனமாக, அவ்வப்போதைய எரிமலை வெடிப்புகளால் புதுப்பிக்கப்பட்ட வண்ணம், உள்ளது.

வெறும் தரைப்பகுதியில் புற்பூண்டுகள் முளைகாத நிலத்தில்,தொடர்ந்து எரிமலை வரக்கூடிய பகுதி, ஒவ்வொரு நாளும் வெவ்வேறு மாதிரி நிலங்கள் எரிமலையால் உருகுலைந்து போகும் இப்படிபட்ட இடத்தில் உயிரணங்கள் எப்படி வாழ முடியும்?

திருக்குர்ஆனின் பதிலை பாருங்கள்;

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ مَهْدًا وَسَلَكَ لَكُمْ فِيهَا سُبُلًا وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجْنَا بِهِ أَزْوَاجًا مِّن نَّبَاتٍ شَتَّىٰ

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான்.உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி,
அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக  வெளிப்படுத்தினோம்.
திருக்குர்ஆன்  20:53

வெள்ளி சூரியனை ஒவ்வொரு 224.7 புவி நாட்களில் சுற்றி வருகின்றது.
இக்கோளிற்கு இயற்கைத் துணைக்கோள் ஏதுமில்லை.

வெள்ளிக் கோள் பரப்பின் சூழல் தற்போது மனிதர்கள் வாழும் சூழலை பெறவில்லை. ஆனால் வெள்ளிக் கோள் பரப்பில் இருந்து ஐம்பது கிலோமீட்டர்களுக்கு மேல் உள்ள வளி மண்டலம் மனிதர் வாழ்வதற்கு ஏற்ற அடிப்படை வாயுக்களான நைட்ரசனையும் ஆக்சிசனையும் பெற்றுள்ளது.

அதனால் வெள்ளியின் வானில் காற்றில் எடை குறைந்த மிதக்கும் நகரங்களை உருவாக்கி வேண்டுமானால் குடியேறலாம்.

ஆனால் இதில் மிகப்பெரிய அளவுக்கு பொறியியல் தொழில்நுட்பச் சவால்களும், இந்த உயரத்தில் உள்ள கந்தக அமிலத்தின்(Sulfuric acid) அடர்த்தியும் இதற்கு தடையாக இருக்கும்.

இதுபோன்ற சம்பவங்கள் ஆங்கில படங்களில் வேண்டுமானால் சாத்தியமாக இருக்கலாம்!
நிஜவாழ்கையில் பூமியை தவிற வேறு எந்த கோள்களிலும் வாழ வசதிகள் இல்லை.

திருக்குர்ஆன் உயிரிணங்களை பற்றிபேசும் போது அவ்வபோது அவர்கள் வாழவதற்கு பூமியில் மட்டும்தான் இடமும், வசதியும் உள்ளது என்றும், அதை நீங்கள் சிந்தியுங்கள் என்றும் பல இடங்களில் ஆழமாக கூறுகிறது!

وَمِنْ آيَاتِهِ خَلْقُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَمَا بَثَّ فِيهِمَا مِن دَابَّةٍ ۚ وَهُوَ عَلَىٰ جَمْعِهِمْ إِذَا يَشَاءُ قَدِيرٌ

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதும் உயிரினங்களை அவ்விரண்டிலும் பரவச் செய்திருப்பதும், அவனது சான்றுகளில் உள்ளவை.
திருக்குர்ஆன்  42:2

பூமியில்தான் உயிரிணங்கள் வாழ முடியும் என்ற திருக்குர்ஆனின் வசனங்களை புதன் மற்றும் வெள்ளிகோள்களுடன் ஒப்பிட்டு பல அறிவியல் சான்றுகளை பார்தோம்!

அதை தொடர்ந்து செவ்வாய்(Mars)கோளில் உயிரிணங்கள் வாழ முடியுமா? என்பதை பார்ப்போம்.

செவ்வாய் (Mars) சூரியக்குடும்பத்தில் உள்ள ஒரு கோள் ஆகும். இது சூரியனிலிருந்து நான்காவது கோளாக உள்ளது.
இக்குடும்பத்தில் மிகச்சிறிய கோளான புதனுக்கு அடுத்ததாக இரண்டாவது சிறிய கோளாக செவ்வாய் இருக்கிறது.

இந்த செவ்வாய் கோள்தான் விஞ்ஞானிகளுக்கு பெரிய சவாலாக இருக்கின்றது!

செவ்வாயில் உயிரிணங்கள் இருக்கின்றதா? இல்லையா? என்பதுதான் அந்த சவால்..

செவ்வாய் கோளில் தண்ணீர் இருப்பதால் உயிரிணங்கள் இருந்து அழிந்திருக்கலாம் என்பது விஞ்ஞானிகளின் கூற்று...

செவ்வாய் கோளில் உயிரணங்கள் இருக்கும் என்ற நிலைப்பாடு, உயிரிணங்களை நேரடியாக பார்த்தோ! அல்லது விண்களம் உயிரணங்களை படம் பிடித்தோ நிரூபிக்கப்பட்டவையல்ல...

1965 ஆம் ஆண்டில் செவ்வாய்க்கு அருகில் மரினர்4 விண்களம் வெற்றிகரமாகப் பறந்து செல்லும்வரை, செவ்வாய்க் கோளின் மேற்பரப்பில் நீர்ம நீர் இருக்கும் என நம்பினார்கள்.

கோளின் துருவப் பகுதிகளுக்கு அருகில் குறித்த கால அடிப்படையில் மாற்றம் அடைகின்ற கறுப்பு, வெள்ளை அடையாளங்களே இவ்வாறான நம்பிக்கைக்குக் காரணமாக இருந்தன.
இவை கடல்களும், கண்டங்களுமாக இருக்கலாம் என எண்ணினர்.

மேற்பரப்பில் காணப்பட்ட நீண்ட கருமையான கீறல்கள் நீர்ப்பாசனக் கால்வாய்களாக இருக்கலாம் என்றும் கருதப்பட்டது. பின்னர் இதை ஒரு ஒளியியல் மாயத்தோற்றம் என விளக்கினர்.

மாறாக(மரினர்4) விண்களம் படம் பிடித்த புகைப்படங்களில் உள்ள கீரல்களை வைத்து நீர் ஆதாரம் செவ்வாயில் உள்ளது, அதனால் உயிரணங்கள் இருக்கலாம் என்ற நிலைப்பாடுதான் தவிற வேறில்லை...

பிற்காலத்தில் விண்களம் பிடித்த புகைப்படத்தில் கீரல்கள் சம்மந்தமாக அது நீர் ஆதாரம் இல்லை என்பதை நிருப்பித்துள்ளார்கள்.

செவ்வாய் கோளில் இரண்டு துருவங்களிலும் பனிகட்டிகள் உள்ளது,அது கரைந்து வழிந்தோடியிருக்கலாம் என்றும் நம்பப்படுகின்றது.

மேலும், செவ்வாய் கிரகத்தில் எரிமலை அதிகம் இருப்பதால் எரிமலை வெடித்து பள்ளத்தாக்கில் ஓடியிருக்கலாம், அதன் அடையாளமாககூட இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது.

செவ்வாய் கிரகத்தை பற்றி விஞ்ஞானிகளின் ஆய்வு இதுவரை இவ்வளவுதான்,
மேலும் செவ்வாய் கோளுக்கு விண்களங்களை அனுப்ப பல திட்டங்கள் போடப்பட்டுவருகிறது..

ஆயிரம் விண்களங்களை செவ்வாய் மற்றும் ஏனைய கோள்களுக்கு அனுப்பினாலும் உயிரிணங்கள் வாழ்ந்ததாக கண்டுப்பிடிக்கவே முடியாது!

இவ்வளவு ஆணிதரமாக நாங்கள் கூறுகிறோம் என்றால் விண்வெளியில் சென்று நாங்கள் பார்க்கவில்லை, ஆனால் திருக்குர்ஆனில் விண்ணியலின் படைப்பை பற்றி இறைவன் விவரிக்கின்றான், அதனால் நாங்கள் உறுதியாக நம்புகிறோம்! பூமியை தவிற வேறு எங்கும் உயிரிணங்கள் இல்லை என்று!

திருக்குர்ஆனை பொய்பிக்ககூடியவர்களுக்கு  ஒரு பெரிய வாய்ப்பு! ஏனைய கோள்களில் உயிரிணங்கள் உள்ளது என்று நிரூபிக்க!

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை ஒருபோதும் பொய்யாகாது...

وَهُوَ الَّذِي مَدَّ الْأَرْضَ وَجَعَلَ فِيهَا رَوَاسِيَ وَأَنْهَارًا ۖ وَمِن كُلِّ الثَّمَرَاتِ جَعَلَ فِيهَا زَوْجَيْنِ اثْنَيْنِ ۖ يُغْشِي اللَّيْلَ النَّهَارَ ۚ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَاتٍ لِّقَوْمٍ يَتَفَكَّرُونَ

அவனே பூமியை விரித்தான். மலைகளையும், நதிகளையும் அதில் அமைத்தான். ஒவ்வொரு கனிவகைகளிலும் ஒரு ஜோடியை அமைத்தான். இரவைப் பகலால் மூடுகிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
திருக்குர்ஆன்  13:3

பூமியுடன் ஒப்பிடும்போது செவ்வாய் பல முரண்பாடுகளை கொன்டுள்ளது!

செவ்வாய் கோளுக்கு பூமியைபோல ஒரு நிலவு கிடையாது மாறாக இரண்டு நிலவு உள்ளது..

நாட்களையும், மாதங்களையும் கணக்கிட ஒரு நிலவு போதுமானது, இரண்டிருந்தாள் பெரும் குழப்பம் நேரிடும்.

மேலும் செவ்வாயில் தாவறங்கள் இல்லை!
தாவறங்கள் இல்லையென்றால் உயிரிணங்களுக்கு உணவு கிடைக்காது.

فَأَنبَتْنَا فِيهَا حَبًّا وَعِنَبًا وَقَضْبًا

உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற்பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச்செய்தோம்.
திருக்குர்ஆன்  80:32

சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீட்டர்கள் தொலைவில் (143,000,000 mi) செவ்வாய் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.

பூமி சூரியனை சராசரியாக 365 நாட்கள் சுற்றி வருகிறது, கோடைகாலங்களில் குறிப்பிட்ட மாதங்கள் கோடை வெயிலின் தாக்கம் சமாளிக்க முடியும் அதே இரட்டிப்பானால் உயிரிணங்கள் மற்றும் நீர் ஆதாரம் பெரும் பாதிப்புக்குள்ளாகும்.

சூரியனை பூமி சுற்றும் 365நாட்கள்தான் மிக சரியான காலம் ஆகும்.
365 நாட்களில் ஒரு வருடமும் 12 மாதங்களும் பூர்த்தியாகிவிடும்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِندَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ۚ ذَٰلِكَ الدِّينُ الْقَيِّمُ ۚ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنفُسَكُمْ ۚ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً ۚ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும்.
திருக்குர்ஆன்  9:36

பூமி சூரியனை 12 மாதங்கள் அதாவது 365 நாட்களில் சுற்றி வருவதால் பூமிக்கு ஏராளமான நன்மைகள் உள்ளது.
இது மாறினால் ஏனைய கோள்களில் உள்ள குளறுபடிபோல் பூமி உருமாறிவிடும்.

وَالْأَرْضَ وَضَعَهَا لِلْأَنَامِ
பூமியை மனிதர்களுக்காக அமைத்தான்.
திருக்குர்ஆன்  55:10

பூமியை தவிற வேறு எந்த கோள்களிலும் மனிதர்கள் வாழ முடியாது என்ற குர்ஆன் வசனத்தின் மூலம் செவ்வாய் கோளை பற்றிய விஞ்ஞான உண்மைகளை பார்த்தோம்!
அதைதொடர்ந்து வியாழன் (Jupiter),
சனி (Saturn),நெப்டியூன், யூரோனஸ்,புளூட்டோ (Pluto) போன்ற கோள்களை பற்றி பார்போம்.

வியாழன் (Jupiter) என்பது சூரியனிலிருந்து ஐந்தாவதாக அமைந்துள்ள ஒரு கோளும் சூரிய குடும்பத்திலயே மிகப்பெரிய கோளும் ஆகும்.

இது கனமான உலோகங்கள் நிறைந்த பாறைகளை மண்ணுக்கு அடியில்  வைத்திருந்தாலும்,ஏனைய கோள்கள் போல இதன் மேற்பரப்பு திடம் இல்லாமல் லேசாக உள்ளது.

வியாழனுக்கு 79 இதுவரை கண்டுபிடிக்கப்பட நிலவுகள் உள்ளன, அவற்றுள் பெரிய நிலவான கனிமீடின் விட்டம் புதன் கோளை விடப் பெரியதாகும்.

புவி தன்னைத் தானே சுற்றிக் கொள்ள 24 மணி நேரமாகும் போது, மிகப்பெரிய வடிவம் கொண்ட வியாழன் 9 மணி 50 நிமிட நேரத்தில், அதாவது நொடிக்கு 8 மைல் வேகத்தில் வெகு விரைவாகத் தன்னைத் தானே சுற்றி விடுகிறது.

சூரியனின் சுற்றுப்பாதையில், சுமார் 484 மில்லியன் மைல் தூரத்தில், சுமார் 12 புவி ஆண்டுகளுக்கு ஒருமுறை வியாழன் சூரியனைச் சுற்றி வருகிறது.

சனி (Saturn) சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஆறாவதாக அமைந்துள்ள ஒரு கோள்.

சனி கிரகம் சூரியனை ஒரு முறை சுற்றி முடிக்க 29.5 ஆண்டுகள் ஆகின்றன. சூரியக்குடும்பத்தில் வியாழனுக்கு அடுத்து இரண்டாவது பெரிய கோளாகும்.

யுரேனஸ் சூரியக்குடும்பத்தில் சூரியனிலிருந்து ஏழாவதாக அமைந்துள்ள ஒரு கோளாகும்.

இதன் வெப்பநிலை -197 டிகிரி செல்சியசு. இக்கோளைச் சுற்றி 11 பெரிய வளையங்கள் உண்டு. இக்கோள் ஒரு முறை சூரியனைச் சுற்றிவர ஆகும் காலம் 84 புவி ஆண்டுகள் ஆகும்.

இது தன்னைத் தானே சுற்றி வர ஆகும் காலம் 17 மணி 14 நிமிடங்கள் ஆகும். அப்படியென்றால் யுரேனசில் ஓர் ஆண்டு என்பது புவியின் 43,000 நாட்கள் ஆகும்.

வில்லியம் ஹெர்ச்செல் என்ற விஞ்ஞானி, மார்ச் 13, 1781-ல் தற்செயலாக சனிக்கு அடுத்தபடியாக உள்ள யுரேனஸ் எனும் கோளினை தொலைநோக்கி மூலம் கண்டுபிடித்தார்.

யுரேனஸ் பற்றி மேலும் ஆராய்ந்ததில், அதனுடைய பாதையில் மேலும் கீழுமான அசைவு தெரிந்தது. ஒரு பொருள் மீது ஈர்ப்பு சக்தியைச் செலுத்தி, அதனை ஈர்த்தால் மட்டுமே இவ்வாறு தள்ளாட்டம் இருக்கமுடியும்.

அப்படியானால் யுரேனஸுக்கு அப்பால் ஒரு பெரிய கோள் இருப்பதாலே... அதன் ஈர்ப்பு சக்தியின் காரணமாக யுரேனஸில் தள்ளாட்டம் ஏற்படுகிறது என கணித்து கூறினர்.

சிறந்த வானவியலாளர் எய்ரி என்பவரிடம் தனது கணக்கை எடுத்துச் சென்றார்.

அதிக நிலநடுக்கம் ஏற்பட்டாலே தவிற  தள்ளாட்டம் ஏற்பட வாய்ப்பில்லை என்று ஆய்வின் முடிவில் சமர்ப்பிக்கப்பட்டது.

நெப்டியூன் சூரியக்குடும்பத்தின் எட்டாவது மற்றும் மிக தொலைவில் உள்ள ஒரு கோளாகும்.

தன்னைத்தானே 19.1 நாளில் சுற்றும் நெப்டியூன், சூரியனை ஒரு முறை சுற்றி வர 164.8 வருடங்கள் ஆகும்.
முழுக்க முழுக்க கடலால் சூழ்ந்துள்ள ஒரு கோள்.

பிரபஞ்சத்தில் உள்ள சூரியகுடும்பத்தில் இருக்கின்ற மிக முக்கிய கோள்கள் அனைத்தையும் பூமியுடன் ஒப்பிட்டு பார்தோம்!

அனைத்தின் முடிவும் உயிரணங்கள் பூமியை தவிற வேறு எந்த கோள்களிலும் வாழ இயலாது என்ற முடிவு மட்டுமே நமக்கு கிடைக்கின்றது.

பெரும்பாளான கோள்களில் ஆக்ஸின் இல்லை! ஆனால் பூமியில் உயிரணங்கள் சுவாசிக்க ஆக்ஸிஸன் நிறைந்து உள்ளது.

பொரும்பாலான கோள்களில் தண்ணீர் இல்லை!  தண்ணீர் இல்லையென்றால் உயிரணங்கள் அழிந்துவிடும்! ஆனால் பூமியில் உயிரணங்களுக்கு தேவையான தண்ணீர் நிறைந்து வழிகிறது.

எல்லா கோள்களில் தாவரங்கள் இல்லை!
தாவரங்கள் இல்லையென்றால் நம்மால் உணவு உண்ண முடியாது! ஆனால் பூமியில் அனைத்து வகையான தாவரங்களும் உள்ளன.

பெரும்பாலான கோள்களில் கடும் வெப்பம் உள்ளது! ஆனால் பூமியில் உயிரணங்கள் தாங்கும் அளவிற்கு வெப்பம் உள்ளது,

பல கோள்களில் பூகம்பங்கள் தொடர்சியாக வந்த வண்ணம் உள்ளது! ஆனால் பூமியில் வருடத்திற்கு சொற்ப எண்ணிக்கையிலயே வருகிறது.

சில கோள்கள் கடும் பாலைவனமாக உள்ளது! ஆனால் பூமியில் சிறு பகுதி தவிற மற்ற பகுதிகள் அனைத்தும் இயற்கையின் கையில் உள்ளது.

இப்படி பூமியுடன்  ஏனைய கோள்களை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பூமியை தவிற வேறு எந்த கோள்களிலும் மனிதன் ஒரு நிமிடம்கூட உயிர் வாழ முடியாது என்பதை உணர்த்துகிறது.

الَّذِي جَعَلَ لَكُمُ الْأَرْضَ فِرَاشًا وَالسَّمَاءَ بِنَاءً وَأَنزَلَ مِنَ السَّمَاءِ مَاءً فَأَخْرَجَ بِهِ مِنَ الثَّمَرَاتِ رِزْقًا لَّكُمْ ۖ فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَندَادًا وَأَنتُمْ تَعْلَمُونَ

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக பூமியிலிருந்து வெளிப்படுத்தினான்.
எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!
திருக்குர்ஆன்  2:22

إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِّأُولِي الْأَلْبَابِ


வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும் இரவு, பகல் மாறிமாறி வருவதிலும் அறிவுடைய மக்களுக்குப் பல சான்றுகள் உள்ளன.

திருக்குர்ஆன்  3:190

وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ زَوْجٍ بَهِيجٍ


பூமியை நீட்டினோம். அதில் முளைகளை நிறுவினோம். அதில் கவர்கின்ற ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.

திருக்குர்ஆன்  50:7

பிரபஞ்சத்தை பற்றி இவ்வளவு நுணுக்கமாக படைத்த இறைவனை தவிற வேறு யாரால் கூற முடியும்?

திருக்குர்ஆன் கூறும் மலைகளை பற்றி பார்ப்போம்!

وَالْأَرْضَ مَدَدْنَاهَا وَأَلْقَيْنَا فِيهَا رَوَاسِيَ وَأَنبَتْنَا فِيهَا مِن كُلِّ شَيْءٍ مَّوْزُونٍ

பூமியை விரித்தோம். அதில் முளைகளை நாட்டினோம். அதில் எடை வரையறுக்கப்பட்ட ஒவ்வொரு பொருளையும் முளைக்கச் செய்தோம். திருக்குர்ஆன்  15:19

திருக்குர்ஆன் இந்த வசனத்தில் பூமியை விரித்து முளைகளை நாட்டினோம் என்று கூறுகிறது...

முளைகள் என்றால் என்ன?

திருக்குர்ஆன் முளைகளுக்கு அரபு மொழியில்(رواسي) "ரவாஸியா" என்ற வார்த்தையை பயன்படுத்துகிறது இதை ஆங்கிலத்தில் "firm mountains" என்று கூறுவார்கள், ஃபர்ம் என்றால் கனமான ஒரு பொருளை நிறுவுவது என்று அற்தம், திருக்குர்ஆன் மலைகளை பூமியில் நிறுவியதாகவே குறிப்பிடுகிறது.

நாம் பார்க்கக்கூடிய இந்த மலைகள் பூமிக்கு மேல் இருப்பது வெறும் கால் பகுதிதான் மீதமுள்ள முக்கால் பகுதியான மலைகள் முளைகளாக பூமிக்கு அடியில் இருக்கின்றது.

பூமிக்கு அடியில் அதாவது சுமார் 100 கிலோ மீட்டர் ஆழத்தில் பாறை அடுக்குகள் வெப்ப அழுத்தினால்  திரவமாக மாறி உஷ்ணம் தாங்க முடியாமல் எரிமலையாக வெடித்து சிதருவதாக விஞ்ஞனிகள் தெறிவிக்கின்றனர்.

அப்படியென்றால் சுமார் 100 கிலோ மீட்டர் ஆழம் வரை பாறைகள் பல அடுக்குகளில் புதைந்துள்ளது!

சரி! பூமிக்கு அடியில் ஏன் முக்கால் பகுதி மலைகள் அதாவது முளைகளான பாறைகள் வேறாக புதைக்கப்பட வேண்டும்?

பூமியின் கீழ்பகுதியில் மலைகள் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன என்று நவீன புவியியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர்.

உலகெங்கிலும் உள்ள பல பல்கலைக்கழகங்களினால் பூமி(Earth) என்ற ஒரு அடிப்படை குறிப்பு புத்தகம் உருவாக்கப்பட்டுள்ளது.
அதன் இரண்டு ஆசிரியர்களில் ஒருவரான பேராசிரியர் எமிரிட்டஸ் ஃபிரான்க் பிரஸ் (Emeritus Frank Press) ஆவார்.

அவர் முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஜிம்மி கார்ட்டருக்கு(Jimmy Carter) அறிவியல் ஆலோசகராக இருந்தார், மேலும் 12 ஆண்டுகள் அவர் வாஷிங்டன் (Washington, DC)
(National Academy of Sciences) தலைவர் இருந்தவர்.

அவர் மலைகளை பற்றிய பல அறிவியில் உண்மைகளை உலகுக்கு தெறியபடுத்தினார்.

19 ஆம் நூற்றாண்டுக்கு பிறகுதான் ஆழமான வேர்கள் கொண்ட மலைகளின் கோட்பாடு அறிமுகப்படுத்தப்பட்டது.

மலைகளுக்கு அடிப்படை வேர்கள் உள்ளன. இந்த வேர்கள் ஆழமாக தரையில் பதிக்கப்பட்டிருக்கின்றன, இதனால், மலைகள் ஒரு ஆலை போன்ற வடிவத்தை கொண்டுள்ளது.

மலைகள் பூமியில் ஆழமான வேர்களைக் கொண்டுள்ளன.
(பூமி, பிரஸ் மற்றும் சீவர், பக்கம் 413.)

இந்த ஆழமான வேர்கள் பூமிக்கு அடியலில் பயணிப்பதால், பூமி தடுமாறாமல் சீராக இயங்கிகொன்டுள்ளது,

உதாரணம் கட்டடம் கட்ட நாம் எப்படி பூமிக்கு அடியிலிருந்து அடிதளத்தை உருவாக்குவோமோ அதைபோலவே பூமி உருவாக்கப்பட்டிருக்கிறது.

கட்டடம் தரைமட்டத்திலிருந்து கட்டினால் இடிந்து விழுந்துவிடும், இடிந்துவிழாமல் இருக்க பூமியில் எப்படி பள்ளம் தோன்டி கட்டடம் எழுப்புவோமோ அதே போல் இந்த மலைகளும் பூமிக்கு அசைவுகொடுக்காமல் பக்கபலமாக இருக்கின்றது.

திருக்குர்ஆனும் இதையேதான் சொல்கிறது...

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا
பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும்  நாம் ஆக்கவில்லையா?
திருக்குர்ஆன்  78:7

وَجَعَلْنَا فِي الْأَرْضِ رَوَاسِيَ أَن تَمِيدَ بِهِمْ وَجَعَلْنَا فِيهَا فِجَاجًا سُبُلًا لَّعَلَّهُمْ يَهْتَدُونَ
பூமி அவர்களைச் சாய்த்து விடாதிருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தினோம்.
திருக்குர்ஆன்  21:31

பூமி நம்மோடு சாய்ந்து விடாமல் இருப்பதற்காக முளைகளை ஏற்படுத்தியதாக திருக்குர்ஆன் கூறுகிறது.

பூமியோடு சேர்த்து எல்லா கோள்களும் சூரியனை சுற்றிக்கொன்டே, தன்னைதானே சுற்றி வருகிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம்!

சூரியனை சுற்றிவர சில கோள்கள் புவி ஆண்டின்படி பல வருடங்கள் சுற்றிவருவதாக இருக்கின்றது.

ஆனால்! பூமியைவிட வெகு விரைவிலும் சில கோள்கள் தன்னை தானே சுற்றிவருவதாக இருக்கின்றது!

வாகனத்தில் பயணம் செய்கிறோம் 120 கிலோ மீட்டர் வேகத்தில் குறுகிய வளைவில்
(Short Curve) அதே வேகத்தில் திரும்பினால் வாகனத்தின் நிலை என்ன ஆகும் என்பதை கற்பனை செய்து பாருங்கள்?

நேரான பாதையில் 120கிலோ மீட்டர் வேகத்தில் செல்லலாம்! ஆனால் குறுகிய வளைவில் வேகத்தை குறைத்துதான் செல்ல வேண்டும்,

இந்த செயற்பாடுதான் பூமியில் நடந்துகொன்டுள்ளது ...

பூமியுடைய சரியான எடையின் அடிப்படையிலயே பூமி தன்னை தானே 24 மணி நேரத்தில் சுற்றி வருகிறது.

24 மணி நேரம் தன்னைதானே சுற்றி வருவதால் எந்தவொறு அசைவும் இல்லாமல் சீராக இயங்கிகொன்டுள்ளது.

இந்த வேகம் சீராக செயல்படுவதற்கு மிக முக்கிய காரணம் மலைகள் மற்றும் அதன் முளைகளாக இருக்கக்கூடிய பாறைகள்.

وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ
பூமி, உங்களை அசைத்து விடாதிருக்க அதில் முளைகளை அமைத்தான்
திருக்குர்ஆன்  16:16

பூமியிலுள்ள மேலோட்டத்தை உறுதிப்படுத்துவதில் மலைகள் ஒரு முக்கிய பங்கை வகிக்கின்றன. பூமியில் நிலஅதிர்வை இவைகள் தடுக்கின்றனர்.

பூமி தன்னைத்தானே ஒரு மணி நேரத்திற்கு  1000மைல் வேகத்தில் சுற்றி வருகிறது.
(Earth's spin is about 1,000 miles per hour)

இந்த முளைகளில் ஏதாவது ஒரு மாற்றம் ஏற்படுமானால், பூமி சீராக இயங்காது, குறிப்பாக பூமியின் வேகம் குறைந்தால் பூகம்பங்கள் அதிகரிக்கும்.

திருக்குர்ஆன் அதற்குதான் மலைகள் எவ்வாறு படைக்கப்பட்டுள்ளது என்று சிந்திக்க சொல்கிறது!

وَإِلَى الْجِبَالِ كَيْفَ نُصِبَتْ
மலைகள் எவ்வாறு நாட்டி வைக்கப்பட்டுள்ளன?
திருக்குர்ஆன்  88:19

أَلَمْ نَجْعَلِ الْأَرْضَ مِهَادًا

பூமியைத் தொட்டிலாகவும், மலைகளை முளைகளாகவும் நாம் ஆக்கவில்லையா?
திருக்குர்ஆன்  78:7

பூமியை தொட்டில்போல பாதுகாப்பாக இயக்கிகொன்டிருப்பது இந்த மலைகள்தான்.

நபிகள் நாயகத்தின் காலத்தில் யாருக்காவது மலைகளின் உண்மையான வடிவம் தெரியுமா?

நம் முன்னால் பார்க்கும் இந்த திடமான பெரிய மலைகள், உண்மையில் பூமியில் ஆழமாக விரிவடைந்து வேர் கொண்டிருப்பதை யாராலும் கற்பனை செய்திருக்க முடியுமா?

மலைகள் பற்றி விவாதிக்கும் போது, ​​
புவியியல் புத்தகங்களின் ஏராளமான புத்தகங்கள் பூமியின் மேற்பரப்புக்கு மேலே உள்ள பகுதியை மட்டுமே விவரிக்கின்றன.

ஏனெனில் இந்த புத்தகங்கள் புவியியல் வல்லுநர்களால் எழுதப்படவில்லை. எனினும், நவீன மண்ணியல் குர்ஆனின் வசனங்களை உண்மைகளாக உறுதிப்படுத்தியுள்ளது.

திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை என்பதற்கு இது மிக பெரிய சான்று.

அ.மன்சூர்  வேலூர்

Comments